Yearly Archives: December 12, 2009, 10:30 am

Random Musings

 

40,ரெட்டைத்தெரு அத்தியாயங்களின் அடிப்படையில் ‘ரெட்டைத் தெரு’ குறும்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இளைஞர் சரவணன் இயக்குனர். நண்பர் எஸ்.ராவின் சிறுகதையை இரண்டு ஆண்டு முன் குறும்படம் ஆக்கியவர்.

எங்கள் ஊரில். அதுவும் நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க கணக்கு வாத்தியாரையே பிடித்து அவர் மூலம் பள்ளியின் தற்போதைய தாளாளரைப் பிடித்து, படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தேன். செல்போனும், எஸ்.எம்.எஸ்ஸும் வந்த பிற்பாடு இதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் முடிகிற சங்கதியாகி விட்டது.

சார், அந்தக் கால டெஸ்கும் பெஞ்சும் சேர்ந்த உட்கார்ற சீட்டு நிறைய இருக்கு உங்க பள்ளிக் கூடத்திலே.

பாரதி

 

திசம்பர் 11

இன்று பாரதி பிறந்த நாள்.

திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தின் ஒரு பகுதி பழுதடைந்துள்ளதால் அங்கே இன்று காலை 8 மணிக்கு ‘ஜதிப் பல்லக்கு’ நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று நண்பர் க்ரேஸி மோகன் மூலம் அறிகிறேன்.

காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும்.
பழுது படாமல்.

மோகன் குறுஞ்செய்தியாக அனுப்பிய வெண்பா -

கலைப்பாவை வாணி தலைப்பாக்குள் வாழும்
மலைப்பான மாகவி மன்னா – இளைப்பாற
ஏந்துகிறோம் பல்லக்கு ஏறியமர் பாரதி
தாந்திமிதோம் தாள ஜதிக்கு.

அரிசிக் கடவுள்

 

‘கையிலே இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு ஓடு’.

விஷமமாகச் சிரித்தபடி நந்திதா நீட்டிய அறிவிப்பு அட்டையைப் படித்தான் சங்கரன் ராதாகிருஷ்ணன். ‘ரிச்சர்ட் டெமூரா ஃப்ரம் டெக்ஸஸ், யு.எஸ்.எ’

ரிச்சர்ட் என்ற பெயரை டிக் என்று செல்லமாகக் கூப்பிடுவது அமெரிக்க வழக்கம். சங்கரன் அறிவான். நந்திதாவுக்கு அதைக் கடந்தும் அந்தப் பெயரின் உபயோகம் தெரியும். அவள் வேலை நிலைக்கிற வரைக்கும் அவள் சிரிப்பு மிச்சம் இருக்கும்.

வேலை நிலைப்பது தான் கம்பெனியில் இப்போதைய தலைபோகிற செய்தி. எல்லாக் கம்ப்யூட்டர் கம்பெனியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

‘சங்கரா, பார்த்துக்கோ. உன் பிராஜக்ட் அடுத்த மாதக் கடைசியிலே முடியும். இப்போ பிலிப்பைன்ஸ் ரெண்டு வாரம் போய்ட்டு வந்துட்டா, அடுத்த ப்ராஜக்ட் கிடைக்க 50-50 சான்ஸ். இல்லியோ நேரா பெஞ்ச் தான். சங்கப் பலகை’.

(English) Random Musings

இன்று

 

55 வயதுக்கு மேல் வேறு யாராவது குழந்தை எழுத்தாளர் ஆகியிருந்தால் அவர்களுக்கு ஒரு காட்பரீஸ. காட்பரீஸ் என்ற சொல் காணாமல் போவதற்குள் சேதி சொல்லவும். அமெரிக்க சந்தை அசுரன் (giant-க்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?) க்ப்ராஃப்ட் ஃபூட்ஸ் hostile takeover ஆக பிரிட்டன் உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் மில்க் சாக்லெட்டை கவர்ந்து போயிருந்தால் காட்பரீஸ் காணாமல் போகலாம்.

இந்த நினைவோடை காட்பரீஸ் பற்றி சத்தியமாக இல்லை. நான் ‘சுட்டி விகடன்’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்திருக்கும் கம்ப்யூட்டர் பத்தி பற்றி.

சுட்டி விகடன் காலம் எழுதுவதற்கும் இத்தனை நாள் விடாப்பிடியாக ‘வீட்டில் லுங்கி’ ஆசாரத்தைக் களைந்து ஷார்ட்ஸுக்கு மாறியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.