Monthly Archives: July 4, 2010, 9:44 am

குமார அசம்பவம்

 

ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன்

‘பரமசிவன் விதவன். தெரியுமா?’

கேட்ட நண்பர் டால்கம் பவுடரையாவது கொஞ்சம் போல் நெற்றியில் பூசாமல் வெளியே புறப்படாத சைவர். ஒன்றுக்கு ரெண்டு பெண்டாட்டி உள்ள பரமசிவனைக் கைம்பிள்ளை ஆகச் சொன்னதின் சூட்சுமம் புரியாமல் விழித்தேன்.

‘காளிதாசனின் குமார சம்பவம் படி’ என்றார் அவர். சிருங்காரச் சுவை கொண்ட கவிதை ஆச்சே. மொழிபெயர்ப்பு கிடைத்தால் யாருடைய மைனர் விளையாட்டு சம்பவங்களை அந்த மகாகவி விவரித்திருக்காரோ, தெரிஞ்சுக்கத் தடை ஏது?

நகர் வெண்பாவும் பதில் கவிதையும்

 

மூணே முக்காலுக்கு எழுந்து டி.வியைப் போட்டு, யூ டிவி ஓர்ல்ட் சானலில் ஆர்ட் பிலிம் பார்த்தபடி உடற்பயிற்சி செய்கிற சந்தோஷத்தை விபாசனா உபன்யாசச் சக்கரவர்த்தி (வாஸ்வானி?) கெடுத்துத் தொலைத்தார். சானல் சானலாக தேடி நல்ல படம் செலக்ட் செய்து அப்புறம் உடல் பயிற்சி தொடங்க ஐந்து நிமிடம் அதிகம் பிடிக்கிறது.

இன்றைக்கு மறுபடி செ குவேராவின் வாழ்க்கைக் கதையான ‘ மோட்டார்சைக்கிள் டயரி’ பார்த்து விட்டு வேக நடைக்கு நடேசன் பூங்காவில் நுழைந்தேன்.

கேரளா டயரி 2004

 

எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 1

அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார்.

சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.

எதுக்கு அங்கே போகணும்? நான் இந்தியன் ஏர்லைன்ஸ் ·ப்ளைட்டுலே கொச்சிக்கு இல்லே போகப் போறேன்.

சொன்னாக் கேளுங்க சார். இந்த ஏர்போர்ட் இல்லை. அங்கே போங்க.

(English) Bossnia – 1

வடம் பிடிக்க வாங்க

 

அடுத்த நூற்றாண்டில் தொழில்நுட்பத் தமிழை எங்கே நிறுத்தலாம்?

செம்மொழி மாநாட்டுக்கு நல்வாழ்த்தையும் கூடவே ஒரு கோரிக்கையையும் சொல்லிக் கொண்டு தொடங்குவோம்(கோரிக்கை கொசுறாக வராத வாழ்த்து ஏது?)

‘ஆனைக் காரியத்திலே சேனைக் காரியமாக’, மாநாட்டை ஒட்டி மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில் ராடார் நிறுவ தமிழக அரசு ஏற்பாடு செய்தால், விமான விபத்து அபாயங்களில் இருந்து தப்பிப் பிழைத்து, தமிழ் உலகே மறுபடி வாழ்த்தும். அடுத்தடுத்த கோரிக்கைகளையும் கூடவே வைக்கும்.ராடாரும் தொழில்நுட்பம் தொடர்பானது தான். ஆனாலும் டெக்னாலஜி என்றால் சட்டென்று கம்ப்யூட்டரும் அதோடு இணைந்த சிந்தனையாக இணையம் என்ற இண்டர்நெட்டும் மாத்திரம் நம்மில் பலருக்கும் நினைவு வருகிறது போல் மாநாட்டு அமைப்பாளர்களுக்கும் வந்ததைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.