Archive For டிசம்பர் 12, 2009

Random Musings

By |

  40,ரெட்டைத்தெரு அத்தியாயங்களின் அடிப்படையில் ‘ரெட்டைத் தெரு’ குறும்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இளைஞர் சரவணன் இயக்குனர். நண்பர் எஸ்.ராவின் சிறுகதையை இரண்டு ஆண்டு முன் குறும்படம் ஆக்கியவர். எங்கள் ஊரில். அதுவும் நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க கணக்கு வாத்தியாரையே பிடித்து அவர் மூலம் பள்ளியின் தற்போதைய தாளாளரைப் பிடித்து, படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தேன். செல்போனும், எஸ்.எம்.எஸ்ஸும் வந்த பிற்பாடு இதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் முடிகிற சங்கதியாகி விட்டது. சார், அந்தக் கால டெஸ்கும் பெஞ்சும்…




Read more »

பாரதி

By |

     திசம்பர் 11 இன்று பாரதி பிறந்த நாள். திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தின் ஒரு பகுதி பழுதடைந்துள்ளதால் அங்கே இன்று காலை 8 மணிக்கு ‘ஜதிப் பல்லக்கு’ நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று நண்பர் க்ரேஸி மோகன் மூலம் அறிகிறேன். காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும். பழுது படாமல். மோகன் குறுஞ்செய்தியாக அனுப்பிய வெண்பா – கலைப்பாவை வாணி தலைப்பாக்குள் வாழும் மலைப்பான மாகவி மன்னா – இளைப்பாற ஏந்துகிறோம் பல்லக்கு…




Read more »

அரிசிக் கடவுள்

By |

  ‘கையிலே இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு ஓடு’. விஷமமாகச் சிரித்தபடி நந்திதா நீட்டிய அறிவிப்பு அட்டையைப் படித்தான் சங்கரன் ராதாகிருஷ்ணன். ‘ரிச்சர்ட் டெமூரா ஃப்ரம் டெக்ஸஸ், யு.எஸ்.எ’ ரிச்சர்ட் என்ற பெயரை டிக் என்று செல்லமாகக் கூப்பிடுவது அமெரிக்க வழக்கம். சங்கரன் அறிவான். நந்திதாவுக்கு அதைக் கடந்தும் அந்தப் பெயரின் உபயோகம் தெரியும். அவள் வேலை நிலைக்கிற வரைக்கும் அவள் சிரிப்பு மிச்சம் இருக்கும். வேலை நிலைப்பது தான் கம்பெனியில் இப்போதைய தலைபோகிற செய்தி. எல்லாக் கம்ப்யூட்டர்…




Read more »