Yearly Archives: December 9, 2008, 12:24 pm

எழுத்துக்காரன் டயரி

 

சுஜாதாவுக்கு அஞ்சலி – 1

விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ்.

சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கேரளப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே.

இரா.முருகன்
9 திசம்பர் 2008

888888888888888888888888

கேரளா டயரி
எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 1

அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார்.

சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போங்க.

எதுக்கு அங்கே போகணும்? நான் இந்தியன் ஏர்லைன்ஸ் ·ப்ளைட்டுலே கொச்சிக்கு இல்லே போகப் போறேன்.

சொன்னாக் கேளுங்க சார். இந்த ஏர்போர்ட் இல்லை. அங்கே போங்க.

கும்பகோணம்

 

சுஜாதாவுக்கு அஞ்சலி – 2

விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ்.

சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கும்பகோணப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே.

இரா.முருகன்
9 திசம்பர் 2008

888888888888888888888888888888888

ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில்

வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ” மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?”

“ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்”

வாக்கையன் குறிப்புகள்

 

Yugamayini column – ஏதோ ஒரு பக்கம் -10

மழை இல்லாத நவம்பர் ஞாயிறு காலைப் பொழுது. வெக்கையும் புழுக்கமுமாக விடியும் கோடைகாலம் விடை பெற்றுப் போனதில் வருத்தமில்லை. மழை தொடர வேண்டும் என்ற பிரார்த்தனைகளுக்கும் குறைவொன்றும் இல்லை. இன்னும் ஒரு ஈடு திருப்பதிப் பெருமாளிடம் இறைஞ்ச அவன் வாயிலில் ஒரு நிமிடம். பெருமாள் நல்ல பெருமாள். வருடா வருடம் பிரம்மோற்சவத்துக்காகத் திருப்பதிக் குடை வழக்கம் போல் வால்டாக்ஸ் ரோடு, ஆனைக் கவுனியைத் தாண்டினாலும் இவரைத் திருப்பதியிலிருந்து பருந்து எடுத்துப்போய் சென்னை மாம்பலத்தில் இறக்கிவிட இங்கே கிளை அலுவலகம் திறந்தவர். சொந்தக் கல்யாண உற்சவத்தைக்கூட பக்தர்கள் சவுகரியத்துக்காக சென்னை தீவுத் திடலில் நடத்த ஒத்துழைப்பவர்.

பச்சை மாமலைபோல் மேனி. குட் மார்னிங். கமலச் செங்கண். கூரியர்லே செக் அனுப்பிட்டேனே. ஆயர் தம் கொழுந்தே. ஃபாலோ பண்ணுங்க. அச்சுதா.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ மொபைலில் பேசியபடி எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு யாரோ வழிபாடு நடத்துகிற சத்தம். ஓகே பை. டேக் கேர். அரங்க மாநகருளானே.

ராஜம் கிருஷ்ணன் சந்திப்பு

 

‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது

இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன்.

பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான பெண்களுக்கு மட்டுமான அந்த விடுதிக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை போகிற வழக்கம். அங்கே ஒவ்வொருவரோடும் கொஞ்சம் பேசி, சாப்பிடும்போது பரிமாறி, இலையில் அல்லது ஏந்திய கையில் இனிப்பையோ பழத்தையோ வைத்து சாப்பிடச் சொல்லி திரும்பி வரும்போது ஆத்மார்த்தமாக ஒன்றி சில மணிநேரம் கடந்து போயிருக்கும். காப்பகத்தில் தங்கியிருப்பவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் மறைகிறார்கள். சிலர் புதிதாக வருகிறார்கள். இந்த ஆகஸ்டில் தான் ஓணத்தை ஒட்டி விஷ்ராந்தி போயிருந்தேன். அப்போது அங்கே ராஜம் கிருஷ்ணன் இல்லை.

என்ன பொருத்தம்

 

Kungumam column – அற்ப விஷயம் -18

தினப் பத்திரிகைகளின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புகள் சுவாரசியமானவை. தெரிந்த மொழியில் எல்லாம் பத்திரிகை படிக்கிற பழக்கம் இருந்தால், இப்படி வந்து விழுந்த, அச்சடித்த காகிதம் அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் விடிந்துபோகும். அடுத்த நாள் பத்திரிகை வாசலுக்கு வந்துவிடும். போனவாரம் நேரத்தோடு மல்லுக்கட்டி, வேற்றுமொழிப் பத்திரிகையின் ஞாயிறு மலரைத் தற்செயலாக மேய்ந்தபோது முழுப் பக்கச் செய்தி ஒன்று கவன ஈர்ப்பு செய்தது. அது தற்செயலான நிகழ்ச்சிகளைப் பற்றியதாக அமைந்து போனதும் தற்செயலே.

பத்திரிகையாளரும் டாக்குமெண்டரி திரைப்படம் தயாரிக்கிறவருமான ஒரு இளைஞர். மலையாள எழுத்தாளரும் கூட. தில்லியில் இருக்கும் இவர் இண்டர்நெட்டில் தன் புகைப்படம், தயாரித்த படங்கள் போன்ற விவரங்களைச் சிக்கனமாகப் பதிந்து ஓர் இணையத் தளத்தையும் வைத்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக இவருக்கு பீகார் மாநிலத்தின் பல ஊர்களிலிருந்து கடிதம், ஈமெயில் என்று வந்து குவிகிறது. எழுதுகிறவர்கள் எல்லோரும் பள்ளி மாணவ மாணவிகள்.