Yearly Archives: September 28, 2002, 10:19 am

பகாகா பகாகா

 

நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்) வர இரண்டு மாதம் இருக்கும்போதே யார்க்ஷயரில் ஏகப்பட்ட தள்ளுபடி விற்பனைகள். உள்ளாடையிலிருந்து தங்க நகை வரை பலதும் சலுகை விலையில் கிடைப்பதால் ஹாலிபாக்ஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

‘ஐந்து புத்தகம் ஐந்து பவுண்ட்’ – என்னைக் கவர்ந்த தள்ளுபடி விற்பனை இது. போன வாரம் புத்தகக் கடையில் நுழைந்து ஒரு சின்ன மூட்டை புத்தகங்களோடு திரும்பினேன். தொடர்கதை எழுதுவதைக் கூடத் தள்ளி வைத்துவிட்டுச் சுவாரசியமாக வாரக் கடைசியில் படிக்க எடுத்த முதல் புத்தகம் ‘மார்க்கோ போலோவின் பயணக்குறிப்புகள்’. (‘The Travels of Marco Polo’ – Wordsworth Classics publication).