Archive For அக்டோபர் 30, 2008

சாக்லெட் கிருஷ்ணா – 100

By |

  Crazy Creations 100th performance of Chocolate Krishna ‘சாக்லெட் கிருஷ்ணா’ நூறாவது நிகழ்ச்சி காணும் அன்பு நண்பர்கள் கிரேசி மோகன், மாது பாலாஜி இருவருக்கும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நல்வாழ்த்துகள். நூறு முடிந்திடத் தேரை விடுத்தவா நூறுணா நூறுயில் நிலைத்தவா –நூறு முறையெங்கள் சாக்லெட் கிருஷ்ணா படைத்த இறையின்று போலென்றும் இரு. (மோகன் – 30 அக்டோபர் 2008)
Read more »

கல்யாணம் கச்சேரி உல்லாசம் எல்லாமே

By |

  குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி ‘இந்தத் தேதியில் கல்யாணம். ரிசப்ஷன். வந்து வாழ்த்தவும்.’ ஆடி பிறந்து ஆத்தா கோவில்களில் ஒலிபெருக்கி கட்டி எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு போட ஆரம்பிக்கும்வரை தொடர்வது திருமண அழைப்புகளின் படையெடுப்பு. மனசு நிறைய அன்பும், வாழ்த்த வாயில் வார்த்தையும் இருக்குது தான். ஆனாலும் ஒரு கல்யாணப் பந்தல் விடாமல் ஏறி இறங்கினால் ஆபீசில் லீவும் பர்ஸில் பணமும் கரைந்து போகும். செருப்பு அடிக்கடி காணாமல் போகும். டிவிடி மாதிரி வட்டமாக, கோலக் குழலாக…
Read more »

காகிதங்கள், மேலும் காகிதங்கள்

By |

குங்குமம் பத்தி – ‘அற்ப விஷயங்கள்’ தினசரிப் பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு தெருவோடு நடந்தால், பின்னால் இருந்து குரல். ‘ஏன் சார், நான் மாஞ்சு மாஞ்சு சுத்தம் செஞ்சுக்கிட்டிருக்கேன். நீங்க பாட்டுக்கு குப்பை போட்டுக்கிட்டுப் போறீங்களே’. திரும்பிப் பார்க்கிறேன். தலையைப் தழையத் தழைய வாரி மல்லிகைப் பூ சூடிக் கொண்டு மாநகரத் துப்புரவில் ஈடுபட்டிருக்கும் நீல் மெட்டல் பனாகா நிறுவனப் பெண். அவள் சொன்னது உண்மைதான். அவள் சுத்தமாகப் பெருக்கி குப்பை செத்தை எல்லாம்…
Read more »

நெம்பர் 40, ரெட்டைத் தெரு – க்ரேஸி மோகன்

By |

  க்ரேஸியின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள் இந்த 2008-ம் ஆண்டு பல விதத்தில் எனக்கு முக்கியமானது. மூன்று வருட இடைவெளிக்கு அப்புறம் மறுபடி ஒரு இசை விழா, சென்னை சங்கமம் என்று மகிழ்ச்சியாகத் தொடங்கி, பிப்ரவரி மாதம் சட்டென்று ஒரு மாபெரும் துயரத்தோடு முடிவுக்கு வந்தது – சுஜாதாசார் நம்மிடையே இல்லை என்பதை இன்னும் மனது நம்ப மறுக்கிறது. தனிப்பட்ட முறையிலும், தமிழ் இலக்கிய வாசகனாகவும் எனக்கு ஏற்பட்ட மாபெரும் சோகம் அது. பேரிழப்பில் உருவாகும் பிறப்பாக,…
Read more »

கோவிந்த் நிஹலானி @ சென்னை

By |

  ‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் எல்லாப் பக்கத்திலிருந்துன் விஸ்தாரமாகத் தோண்டித் துளைத்து அங்கங்கே தேசலான பழைய தார்த் தடம் தெரிய பரிதாபமாகக் கிடக்கிற திருமலைப் பிள்ளை சாலை. பெருந்தலைவர் காமராஜ் அவர் வீட்டு வாசலில் கருப்புப் பளிங்குச் சிலையாக நின்று ‘இதெல்லாம் என்னங்கறேன்’ என்கிற போஸில் இடுப்பில் கைவைத்து எல்லா அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி நான். காரை எப்படியோ ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைல் ஃபோனைக் காதில் ஒட்டி வைத்தபடி…
Read more »

வீடியோ விளையாட்டுப் பிள்ளை

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி டியூப்லைட் இல்லாத கல்யாண மண்டபமும், கேதோட் ரே டியூப் இல்லாத வீடும் காணக் கிடைப்பது அரிது. கேதோட் ரே டியூப்? சுருக்கமாக சி.ஆர்.டி. நம் வீட்டு டெலிவிஷன் திரையாக, உள்ளேயிருந்து மின்கதிரை திரைக்கு அனுப்பும் ‘எலக்ட்ரான் துப்பாக்கி’யாக வடிவெடுத்தது சி.ஆர்.டிதான். இதன் எளிய வடிவம், மின்னலையைத் திரையில் நகரும் புள்ளியாகக் காட்ட வசதி செய்யும் ஆசிலோஸ்கோப். இந்த சி.ஆர்.டியும் ஆசிலோஸ்கோப்பும் அறிமுகமாகி நூறு வருடமாகி விட்டது. செஞ்சுரி போட்ட இவற்றின்…
Read more »