Monthly Archives: October 25, 2009, 10:34 am

விடுபட்டவை

 

லேப்டாப் உபயோகிக்க ஆரம்பித்தவுடன் (ஆச்சு, அதுவும் நாலு வருஷமாக) வீட்டுக் கணினி எப்போதாவது பிரிண்ட் அவுட் எடுக்க, ஸ்கேன் செய்ய மட்டும் பயன்பட்டு வந்தது.

இன்றைக்கு என்னமோ தோன்றியது. அந்தக் கணினியில் பழைய .pst கோப்பை அவுட்லுக்கில் திறந்து பார்ர்க, திறக்காமலே போன ஒரு கடிதம். சுஜாதா சார் எழுதிய இதை எப்படி தவற விட்டேன்?

From: rangarajan S [mailto:writer_sujatha@hotmail.com]
Sent: Thursday, July 07, 2005 2:11 PM
To: $$$$@sify.com
Subject: RE: hi from era.murukan (with an interesting blog entry I read today)

send one book first preferably a poetry collection if any. I know you re a
versatile writer I have read your bombay based story sometime back
Come to ambalam 19 cathedral garden rd on saturday 11 30 if you re free
Desikan also might be there let us meet and talk about cabbges and kings
Sujtha

நான் என்ன கேட்டிருந்தேன்? யாருடைய கவிதைத் தொகுப்பு? என் எந்தக் கதையைச் சொல்கிறார்? முட்டைகோசும் அரசர்களும் – என்ன விஷயமாக பேசிக் கொண்டிருந்தோம்? *****

சிதறல்கள் 9.10.2009

 

‘உன்னைப் போல் ஒருவன்’ மகத்தான வெற்றி பெற்ற பிறகு, எழுத்தாளன் என்ற பிம்பம் திடீரென்று (தற்காலிகமாக இருக்கட்டும்) காணாமல் போய், திரைக்கதை-வசனகர்த்தா அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம்.

பத்திரிகைகளில் இருந்து தொலைபேசும் உதவியாசிரியர்கள் கதையோ கட்டுரையோ கேட்காமல் சினிமா பற்றித்தான் வேண்டுகோள் விடுக்கிறார்கள், ‘கமல் சாரோடு உங்க நட்பு’, ‘உன்னைப் போல் ஒருவன் ரசமான அனுபவங்கள்’ இன்னோரன்ன தலைப்புகளில் 450 வார்த்தகளுக்கு மிகாமல் எழுத வேண்டியிருக்கிறது.

‘கிளைமாக்ஸ் வசனத்தை கொஞ்சம் அனுப்புங்க’ – பி.ஆர்.ஓ நிகில் முருகன் அவசரமாக தொலைபேசுகிறார். உங்க புகைப்படமும் வேணும். பத்திரிகை கேட்கறாங்க. சார் உங்க கிட்ட்டே கேட்டுக்கச் சொல்லிட்டார்’.

நான் கமல் அவர்களுக்குத் தொலைபேசி உறுதி செய்து கொள்கிறேன். ‘சரி, இதைக் கேளுங்க’. அவர் உற்சாகமாகத் தான் எழுதிய புத்தம்புதுக் கவிதை ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ படித்துக் காட்டுகிறார்.

கிறுக்கல்கள்

 

விடுமுறை நாள் குறிப்புகள்

இன்னிக்கு எங்கேயும் சுத்தக் கிளம்பிட வேண்டாம். ஏற்கனவே கொல்கத்தா ப்ளைட் இறங்கத் தெரியாமல் காலைச் சுளுக்கிண்டு வந்து சேர்ந்திருக்கீங்க. எனக்கு ஆபீஸ் லீவு. நான் ஒரு துரும்பையும் நகரத்தப் போறதில்லை. உங்களுக்கும் லீவு தானே? சும்மா விவித்பாரதி கேட்டுட்டு இருங்க. இல்லே லாப்டாப்பை மடியிலே வச்சுக் கொஞ்சிண்டு கிடங்க. சரஸ்வதி பூஜை. அதையும் இதையும் படிக்கறதை எல்லாம் சாவகாசமாக நாளைக்கு வச்சுக்கலாம்.

சரி, சாப்பாடு?

அதது தானே வந்துடும். உங்களுக்கு என்ன கவலை?

இன்றைக்கு எழுத வேண்டும். படிக்காவிட்டாலும் எழுத நிறைய இருக்கிறது. 

சுஜாதா சார்

 

ஒரு வாசகனின் வந்தனங்கள்

சுஜாதா சார் மறைந்து இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

அவர் இல்லை என்று சொல்ல, நினைக்க மனமும் சொல்லும் இன்னும் ஒத்துழைக்க மறுக்கின்றன.

வாழ்நாள் முழுக்க சாதனை செய்த அந்த மாபெரும் மனிதருக்கு அரசு அங்கீகாரம் தான் கிடையாது. நம் போன்ற லட்சக் கணக்கான தமிழ் வாசகர்கள் ‘தற்காலத் தமிழ் இலக்கியம்’ என்பதை சுருக்கமாக சுஜாதா என்றே அழைக்கப் பழகி இருக்கிறோம்.

அழைப்போம் இனியும்.

இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் எம்மோடு சுஜாதா சார்.

என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

 

திரைப்படம்

‘உன்னைப் போல் ஒருவன்’ கதை வசனம் எழுதும் பணி பூர்த்தியாகிப் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது.

கமல் அவர்களோடு அவருடைய caravan-ல் நடத்திய படம் குறித்த நீண்ட உரையாடல்கள், கதையமைப்பு குறித்த விவாதங்கள், இயக்குனர் நண்பர் சக்ரியோடு நட்போடு புரிந்த வாக்குவாதங்கள் பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இன்னொரு மகத்தான கலைஞரான திரு மோகன்லால் அவர்களோடு பழகிய அனுபவம் குறித்து ஒரு அத்தியாயம் எழுதினால் போதாது. அதிகாலையில் டப்பிங் முடித்து விட்டு வந்து கைகுலுக்கி, ‘என் வேலை முடிச்சுட்டேன் சார், வரட்டுமா’ என்று அன்போடு விடைபெற்ற அந்த நல்லவரை மறக்க முடியாது.