Monthly Archives: August 31, 2013, 9:08 am

அந்தமான் கவிஞர்கள் இன்ன பிற

படிக்கச் சொல்லி பலமான சிபாரிசோடு எனக்கு நண்பர்கள் அனுப்பும் சுட்டிகளை அவ்வப்போது திறந்து என்னதான் எழுதியிருக்கிறது என்று பார்ப்பேன். இன்று ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது. அதிலிருந்து -

//அந்தமான் தீவில் தமிழ் வளர்ப்பதில் டாக்டர். XYZ அண்ணாச்சிக்கு மிகுந்த ஆர்வம். வருடம் 9999 மார்ச் மாதம் 25 அன்று தமிழ்க் கவிஞர்களைக் கப்பலில் அழைத்துச் சென்று, அந்தக் கப்பலிலேயே ஒரு கவியரங்கம் நடத்திச் சாதனை படைத்தவர் டாக்டர் XYZ அவர்கள். //

பல தமிழ்க் கவிஞர்களைக் கப்பலில் அந்தமான் அழைத்துப் போனது போற்றுதற்கு உரிய தமிழ்த் தொண்டுதான்.

ஆனால் திரும்பக் கொண்டு வந்து விட்டுவிட்டாராமே!
——————————————————————————

அடுத்த பிறந்த நாளுக்குப் படம் பிடிக்கும்போது
1) மூக்குக் கண்ணாடி பவர் கூடி இருக்கும்
2) தலையில் இன்னும் கொஞ்சம் வெள்ளி முளைத்திருக்கும்
3) சட்டையில் ஈரம் உலர்ந்திருக்கும்

அந்தப் படமும் கருப்பு வெளுப்பில் தான் இருக்கும். நிறங்களை விட இயல்பானவை அவை.

புகைப்படம் எடுத்தவர் : அஷ்வின் முருகன்

Suresh Kannan சார், வாயில் ஒரு சிகரெட் தொங்கிக் கொண்டிருந்தால், வருங்கால இலக்கிய சிற்றிதழ்களில் கெத்தாக பிரசுரமாகும் வாய்ப்புண்டு.

EraMurukan Ramasami இனிமேல் சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சா, சிற்றிதழ் என்ன பேரிதழிலேயே வரும் – கட்டம் கட்டி

————————————————————————————

இன்று பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்.

வாக்கிங் முடித்து வரும்போது எங்கள் காம்ரேட் பாலனின் அருமை மகள் சுஜாதா அவர்களை சந்தித்தேன். கிட்டத்தட்ட பதினைந்து வருடம் சென்று நிகழும் சந்திப்பு. அண்மையில், காம்ரேட் பாலனின் பேரன் (சுஜாதா அவர்களின் மகன்) தன் சிநேகிதியான வியத்னாமியப் பெண்ணைக் காதலித்துக் கைபிடித்திருக்க மகிழ்ச்சியான சேதியைச் சொன்னார் சுஜாதா. சாவகாசமாகச் சந்தித்து இலக்கியமும், அரசியலும், குடும்ப நிகழ்வுகளும் பேச திட்டம்.

——————————————————————————

மன்மோகன் சர்க்காருக்குப் போ(கு)ங்காலம் வந்துவிட்டதென்றும் அடுத்து மோதி/நிதீஷ்/முலாயம்-லல்லு-அகிலேஷ் பொற்கால ஆட்சியில் பாலும் தேனும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் என்றும் நினைக்கிற நண்பர்கள் எனக்கு உண்டு. மன்மோகன் சர்க்காரோடு முன்னேற்றம் போம் என்று துக்கிக்கும் நண்பர்களும் உண்டுண்டு. காரத்தோ, எச்சூரியோ வர முடிந்தால் … என்று ஏங்கும் வெகு சில தோழர்களும் உண்டு. எல்லோருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன் (கணையாழியில் கஸ்தூரிரங்கன் சார் எழுதிய கவிதை).

கடவுளும் கவர்ன்மென்டும் ஒன்று

அதைத் தூற்றாதே:

பழி சேரும் உனக்கு

அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள்

ஆனால், குறையென்றால்

பார்க்காது: கேட்காது

கை நீளும்: பதினாயிரம்

கேட்கும், பிடுங்கும்

தவமிருந்தால் கொடுக்கும்

கவர்மென்ட் பெரும் கடவுள்

அதைப் பழிக்காதே

பழித்தால்

வருவது

இன்னும்

அதிகம் கவர்ன்மென்ட்தான்.
———————————————————————–

The PM Dr.MMS has lamented in Lok Sabha that frequent disruption of parliamentary proceedings is a cause for(foreign) investors losing confidence.

I am not sure whether Dr.Singh’s presumption is true.

Market sentiments do count but parliamentary walk-outs and shouting matches in the well of the house do not form a part of those sentiments. FM’s finance-talk or RBI directives do impact the market. The investment space is a vacuum without any trace of humanity.

In my narrow exposure to investment banking, I have observed Sensex soaring merrily while a huge Tsunami hit Tamilnadu coast resulting in heavy loss of life. In fact when the whole Tamilnadu was mourning the tragedy, only two happenings oblivious to the surroundings were going on – the December Katcheri season and brisk bourse trading in Chennai and the rest of India.
—————————————————————————

Having said this, I agree with the PM on one count – we have the worst opposition. Session after session gets disrupted and comes to a close without any meaningful proceedings taking place. An unresponsive Government would get only such an irresponsible opposition.

—————————————————————————–
“Current account deficit may be above sustainable levels this year too.” – RBI Chairman (retiring)
“We will contain current account deficit to $70 billion or below this year and fully and safely finance it.” “(Finance Minister in the Parliament early this week)

..we allowed fiscal deficit to be breached and current account deficit to swell because of certain decisions that we took between 2009 and 2011. (Finance Minister in the Parliament)

Finance Minister (2099-2011) – the current President

In a war the sides are clearly drawn. In political polemic, I don’t know whether my right hand is with me.
———————————————————————-

A few months ago, it was the retiring army chief. Now, there comes the central bank chairman laying down office… they all find their voices back when stepping out and take cudgels against the Government. I won’t be surprised to spot the bank chief in the second row of the crowd on the dais when Anna Hazare fasts next at Raj Ghat.

——————————————————————-
அடி கொள்ளான் செண்டை.. அனுபவித்து வாயிக்கான் மாரார்

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் – குருவாயூரப்பன் கோவில்

இன்று காலை 9:30 மணி (28.8.2013)


—————————————————————————
I am alarmed and immensely pained to read this. May I invite observations from our friends Kalyanam Vijayan, Lakshmi Chitoor Subramaniam Ambai, Gnani Sankaran, Maalan, PAK anna Ananthakrishnan Pakshirajan …. and others please?

Consensual sex with minor not a crime, Delhi court says
Tines of India| Aug 26, 2013

Kapaleeswaran Venkataraman A minor is considered to be matured enough to consent for sex, but when it comes to rape he is treated differently. Jaundiced justice
26 August at 07:22 · Unlike · 2

Chandramowleeswaran Viswanathan Protection of Children from Sexual Offences (POCSO) Act க்குதானே சார்

அதான் ஐ பி சி ல குத்தம்னு சொல்லிருக்கே.. அது போதுமே
26 August at 07:26 · Unlike · 1

EraMurukan Ramasami is that enough Mouli?
26 August at 07:29 · Like

Chandramowleeswaran Viswanathan ஐ பி சி 375 ல
A man is said to commit “rape” if he—

(a) penetrates his penis, to any extent, into the vagina, mouth, urethra or anus of a woman or makes her to do so with him or any other person; or

(b) inserts, to any extent, any object or a part of the body, not being the penis, into the vagina, the urethra or anus of a woman or makes her to do so with him or any other person; or

(c) manipulates any part of the body of a woman so as to cause penetration into the vagina, urethra, anus or any part of body of such woman or makes her to do so with him or any other person; or

(d) applies his mouth to the vagina, anus, urethra of a woman or makes her to do so with him or any other person, under the circumstances falling under any of the following seven descriptions:—

First.—Against her will.

Secondly.—Without her consent.

Thirdly.—With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested, in fear of death or of hurt.

Fourthly.—With her consent, when the man knows that he is not her husband and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.

Fifthly.—With her consent when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.

Sixthly.—With or without her consent, when she is under eighteen years of age.

Seventhly.—When she is unable to communicate consent.
26 August at 07:29 · Unlike · 3

EraMurukan Ramasami more than that, I am unable to comprehend the usage – ‘consensual sex with minor’. Even Contract Act declares any contract entered into with a minor null and void.
26 August at 07:32 · Like · 2

Chandramowleeswaran Viswanathan ஒரு டெல்லி கோர்ட்னு சொல்லிருக்கு எந்த கோர்ட்னு சொல்லல.. அதுவுமில்லாமல் இந்த் சங்கதிகளில் மீடியா ஒழுங்கா ந்யூஸ் எழுத மாட்டான்

நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யாமல் சிறைக்கு அழைத்து செல்லப்பட அதைக் கண்டித்து அவர் சிறைக்கு உள்ளே செல்லாமல் வாசலில் உட்கார்ந்தார்

இதை நீதிபதி அப்சர்வ் செய்து விட்டு, முன்னாள் முதல்வரை இப்படி பிச்சைக்காரர் போல சிறை வாசலில் உட்கார வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என ரிமான்ட் நோட்டில் எழுதினார்

இதை ஜெ ஆதரவு மீடியா செய்தி வெளியிட்டது எப்படி

கருணாநிதி பிச்சைக்காரர்.. நீதிபதி கருத்து
26 August at 07:36 · Unlike · 4

Prabhuram Ramachandran Legal system was the last pillar of hope and many a times they did a wonderful job. But, recent times we witness more and more judgements that are pronounced with the aim of making news than any real solution. This one appears to be for the same purpose.
26 August at 07:45 via mobile · Unlike · 1

Ananthakrishnan Pakshirajan Unless one reads the entire judgement and its context, it is difficult to comment on this. I am of the view that POCSO Act is flawed – like most of the acts that had been passed in this land are. It doesn’t take care of the rural reality of India, especially North India. In many communities, a girl is married off when she turns 15. In Delhi, the lady who is ironing our cloths has just performed the marriage of her grand daughter who has turned 15. It has been calculated that around 39000 child marriages happen everyday in India, which means that one out of every two marriages is a child marriage. Every such marriage is against the law of the land. Thus, there is no legal solution to this practice. Education and especially woman’s education is the only answer.
26 August at 07:55 · Unlike · 4

Chandramowleeswaran Viswanathan Protection of Children from Sexual Offences (POCSO) Act குறித்து வாசித்த போது,, இதற்கான ஸ்பெஷல் கோர்ட்கள் இருப்பதாகத் தெரிகிறது..

பிஏகே சார் சொன்னது போல தீர்ப்பை முழுசுமாக வாசிக்க வேண்டும்.. அதுமட்டுமில்லை.. செஷன்ஸ் நீதிபதி அந்தஸ்த்தில் இருக்கும் ஒரு ஸ்பெஷல் கோர்ட் தீர்ப்பு precedence அமைக்கப் போவதில்லை

இந்த விவகாரத்திலே ஹைகோர்ட்கள், சுப்ரீம் கோர்ட் கருத்துகள் வந்திருக்க வாய்ப்பில்லை காரணம் இந்த சட்டம் ரொம்ப புதுசு

இந்த சட்டத்தினை ராஜ்ய சபாவும் லோக்சபாவும் அங்கீகரித்த பின் வெளியிடப்பட்ட ப்ரஸ் நோட் (http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=84409) ல்

Sexual offences are currently covered under different sections of IPC. The IPC does not provide for all types of sexual offences against children and, more importantly, does not distinguish between adult and child victims.

என்ற புராதான அபஸ்வரம் காணப்படுகிறது

இவர்கள் இப்படியாக ஐ பி சி ஐ குறை சொல்லிக் கொண்டு வரும் சட்டங்கள்..அதன் வழியான வழக்குகள் எல்லாவற்றிலும் read with IPC என்று சார்ஜ் ஷீட் தயார் செய்து.. ஐ பி சி முத்திரை குத்திதான் அனுப்புகிறார்கள்

சுளுக்கெடுக்க ஐ பி சி போதும்.. சுளுக்கு எடுக்ற ஆள் தான் சரியா இருக்கணும்

Press Information Bureau English Releases
pib.nic.in
The Protection of Children from Sexual Offences Act, 2012, has been passed by th…See more
26 August at 08:04 · Unlike · 5 · Remove Preview

Simmam Raghu i agree with Mr. Ananthkrishnan. The human body is kindled with hormones even at tender ages and the girls who attain puberty and who are unable to control their sexual urge due to their growing etc., are more prone to this experience. The worst part of it is that they are lured by men who try to exploit this hapless girls. They make some false promises and take advantage of them. Unless an awakening is spread through education, this menace could not be controlled.
26 August at 08:08 · Unlike · 2

Kalyan Kumar I believe more and more acts which used to be monitores thru family system of values and traditions are being slowly given away to judiciary for control.This is the starting point of all trouble. Inculcation of discipline and values is the first step that would go a long way to avert these ,Judiciary can not be blamed as they ggo by circumstantial evidences of the case and the pressures of the society at a given point of time.
26 August at 08:58 · Unlike · 1

Lakshmi Chitoor Subramaniam There are many things involved here. In the first place there are child marriages taking place. I have come back from Rajasthan a few months ago where a mass child marriage took place and the police could do nothing. And secondly and more importantly, teenage girls who are minors have begun to take decisions regarding their bodies in big cities like Mumbai. The question the sessions judge has rightly asked is whether we leave the decision of the bodies of the girls entirely in the hands of the police. A minor girl, even if she has physical needs may not be mature enough to deal with her body. The question is do we tell her this through education and creating awareness or do we just criminalise all sexual decisions taken by her? Banning sex with a minor girl per se will not provide a solution. I think each case has to be dealt with on its own merit.
26 August at 09:06 · Like · 4

Satyanarayana Athmuri t is very disturbing. What does this imply – If a girl (below 18) consents for “sex outside marriage” it is legal. But if the same girl “consents for marriage – and have sex” it is illegal. Very weird.
26 August at 11:40 · Edited · Unlike · 1

Sampath Sowrirajan The question of “minor” really rankles. If such an observbation was made in court it goes against “sixthly in Mouli’s list, leaving no room for interpretation. Furthermore, mouli’s list does not include “மாமா சாக்லேட் கொடுத்தா !”
26 August at 10:18 · Unlike · 1

Prabhuram Ramachandran Also take a high profile case like Asram Bapu. If at all what he did was true and if at all he is on verge of getting trapped, he will pay money to the parents of the 15 year old girl, threaten them with take it or leave it, and force them to make it sound consensual. We will be back to the good old panchayat days!
26 August at 10:21 · Unlike · 1

Ananthakrishnan Pakshirajan Oh, no. We are reading too much into this. As I said earlier 50% of the marriages in India are between a girl less than 18 years old and probably an adult male. Asaram Bapu and others hog the news but they are not part of the real story.they will keep doing what they are doing, whatever be the law. We are trivialising the problem by making it sound sensational.
26 August at 10:31 · Unlike · 2

Prabhuram Ramachandran Ananthakrishnan Pakshirajan Hope we are actually reading too much into this. The problem is in setting precedence!
26 August at 10:36 · Unlike · 1

Ananthakrishnan Pakshirajan No. Firstly lower court judgments will not be setting precedence. Secondly the issue is more complex than the case under discussion. By quoting sensational cases we are only distorting the issue. There is no point getting indignant. Unfortunately, the Indian rural sensibilities happen to be different from the urban ones.
26 August at 10:56 · Unlike · 2

Kalyanam Vijayan This case appears to be reporting error. The prosecution case is pocso act.The complaint is girl missing accused victim version marriage between 22 m and 15 female living together as husband and wife. Under hindu law though marriage below 18 for girl and 21 for boy is forbidden by prnciples of factum valet under customary Hindu law it is not treated as void. There is no complaint of abduction or petition for custody by mother.she also said to have accepted. Consent is immaterial under ipc 375 or 376 even with cons
ent it is rape if the girl is below 16. However there is no prosecution under ipc alleging rape. The answer is if prosecution is also under s376 ipc the pocso act alone has no bar to proceed under ipc in strict letters of law. But if you bring in mensrea guily mind and customary law of approving young age marriage the allegation of rape and statement of reporting it is not a rape will not cause concern. The law to be applied secure the girl and give it to custody of mother until 18 there after permit them to live as Husband and wife
26 August at 11:08 via mobile · Unlike · 3

Sampath Sowrirajan consensual is most of the time sensual con.
26 August at 14:10 · Unlike · 2

Srikanth Nagarajan This is definitely a passing reference in a case which may have a very specific scenario.
26 August at 19:06 via mobile · Unlike · 1

Ramasubramanian Muthukamatchi do not alarm take it easy sir,the reported observation based on a particular facts of a case and it is not a judicial precedence
26 August at 23:16 · Unlike · 2

EraMurukan Ramasami Thanks for all the perspectives expressed here. I cannot but agree with our friends and would like to ignore this as a ‘reporting error’ or ‘mistake of law’. None the less, I still wonder what is the locus standi of POCSO if it is in contradiction with IPC even to a smaller extent (is ‘ultra vires’ the right term?)
27 August at 07:03 · Edited · Like · 1

Kalyanam Vijayan There is no terminology of ultravires when we examine cognate act. In criminal law an act or omission may attract more than one act. If so every such act can be independently proceeded with. S34 of pocso act enables that. In that case there was no charge sheet at all under IPC. Our sense of emotion may justify so many acts, but law functions compartmentally. There is no Amirthanjan kind of sarva nivarani in law. Era mu as a writer certainly have sesitivity on many social issues without any limits. But does not function in that way. You need a diff mind set to understand the functioning of law.
27 August at 08:33 via mobile · Unlike · 3

Kalyanam Vijayan An act can be ultravires only to constitutional law if the act is challenged on the touchstone of constitutional law. When two acts are compared we call it inconsistant with other law. So ultravires term is used only when we test the constitutionality of it.
27 August at 08:55 via mobile · Unlike · 2

Srikanth Nagarajan i understand this is not a classroom – can u please explain ultravires
27 August at 09:25 · Like

Kalyanam Vijayan Ultravires means beyond the powers. Under our legal system constitution is the supreme law. All laws are subject to constitutioal restriction. We have classification like central law where parliament alone pass law state law where state assemly alone can pass law and in some case cocurrently both cenre and state can pass law. Say suppose income tax which is the exclusive domain of centre, if a state pass a law on income tax we call it ultrvires to constitution. So if a law is passed against contitutional restriction we call it ultr vires (beyond the powers)
27 August at 09:39 via mobile · Unlike · 3

Kalyanam Vijayan If protection of children from sexual harressment Act which is a special law is in variance with general law IPC we dont call it ultravires to IPC. Because it is made within the powers. We say it is inconsistant. Normally court will not intrepret two acts which are inconsistant. They apply a rule of harmonius construction. To save both. Or they will read down the act.
27 August at 09:44 via mobile · Unlike · 3

Lakshmi Chitoor Subramaniam Thanks for these very clear and detailed explanations Kalyanam Vijayan. I thought ultravires was unwarranted –something not warranted by law but still passed for the sake of a specific need. But what you have said is clearer.
27 August at 11:54 · Unlike · 1

Subramaniam Sitaraman I read it with a heavy heart.The judge is passing a live granide in somebodys lap.As inflation increasees yong down trod female children will be suffering a lot.This will lead the country in to the hands of unscrupess people.A judge should not do undo to himself and to the society.
27 August at 15:06 · Unlike · 1

Vasantha Kumar Any contract with minor is invalid; so also any consent should also be deemed invalid. This logically follows that consent by the minor is invalid and …..Murug…. now there are so many news items which say that rape incidents should be severely dealt with! as though it is allowed in the past. Rape should always be severely dealth with. Why suddenly people are talking about it now? Laws are stringent but not maintained
28 August at 07:25 · Unlike · 2

Lakshmi Chitoor Subramaniam Vasantha Kumar, you are right but we are in a situation where younger girls are taking decisions about their bodies. The question is how does one deal with this? Do we criminalise it like child marriages which take place in any case despite stringent laws. It is not just a question of rape but also a question of sexual practices and mores of behaviour.
28 August at 07:30 · Unlike · 1

EraMurukan Ramasami thanks Kalyanam Vijayan sir. Thanks Ambai and other friends

என் பெருமை எனக்கு

நேற்றிலிருந்து திரும்பவும் அழையா விருந்தாளியாக மைக்ரேன்.

நோவோடு வாழப் பழகி விட்டது. காலையில் வாக்கிங் போனபோது சிநேகிதர்கள் கவலையோடு விசாரித்தார்கள்- கலகலன்னு பேசுவீங்களே.. என்னாச்சு?

தலைவலி ஒரு பக்கமாக தலையோட்டைக் கெல்லி எடுக்க பிரயத்தனம் செய்ய, நான் செய்வது ‘பேசாதிருந்தும் பழகு’ .

ஏற்றுக் கொண்ட ஒரு கடமைக்காக சுஜாதா சார் எழுதிய சில சிறுகதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது எத்தனையாவது தடவையாகவோ.. இது வேலை நிமித்தம் என்று சாக்கு.

’ரேணுகா’ கதை முதலில் படிக்க எடுத்தது. சின்னச் சின்ன வாக்கியங்கள். அந்தக் கதை தொடங்குகிற சாம்பல் பூசிய காலைப் பொழுதில் இருந்து அது முடிகிற அர்த்தராத்திரி வரையான சம்பவங்களை நகர்த்திப் போக அவர் மேற்கொண்ட, குரலை உயர்த்தாத, கதையில் நம்மைக் கரைய விடுகிற straight-faced narration.. பளிச்சென்று கன்னத்தில் அறைகிற முத்தாய்ப்பு..

பிரபலமாக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இலக்கிய அங்கீகாரம் மறுக்கப் பட்டவர் அவர்.

தம்பி சுதாகரின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசும்போது சுஜாதாவின் அறிவியல் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். அடுத்துப் பேசிய நண்பர் அறிவியல் கதைகள் இலக்கியம் ஆகாது என்று அபிப்பிராயம் தெரிவித்ததோடு, பெருமையாக வேறு சொன்னார் – நான் சுஜாதா எழுதிய எதையும் படித்தது கிடையாது.

சுஜாதா காலமான போது அவர் வீட்டில் அஞ்சலி செலுத்தி விட்டு மற்ற எழுத்தாள, கலையுலக நண்பர்களோடு சுஜாதா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எனக்கு ஒரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்து மொபைல் அழைப்பு – சார் உங்க கட்டுரையை முடிச்சு அனுப்பிடுங்க.. இஷ்யு க்ளோஸ் பண்ணனும்..

தகனத்துக்குக் கூடப் போகாமல் அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து விரைவாக வீட்டுக்கு வந்தேன். குளிக்கக்கூட நேரம் இல்லாமல் லேப் டாப் முன் உட்கார்ந்தேன். சுஜாதா நினைவுக் கட்டுரை எழுதி முடித்து இமெயிலில் அனுப்பி விட்டு ஒரு பாட்டம் அழுதேன்.

அன்றைக்கு கட்டுரைக்காக என்னைத் துரத்திய நண்பர் தான் சுஜாதா எழுதிய எதையும் படிக்காதவர். போகட்டும், அவர் பெருமை அவருக்கு.

சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாக, ‘ரேணுகா’வை. அவருடைய அன்புக்கும் விமர்சனத்துக்கும உரிய சீடனாக இருந்திருக்கிறேன்.. இருக்கிறேன் – என் பெருமை எனக்கு.

Knee jerks! Don’t hit yourselves below the belts (the day after the market mayhem 16th Aug 2013)

Friday, 16th of August would go down the history as a day of market mayhem. The rupee was left battered and bruised by the wayside on the global currency-bahn , gasping for breath. We do have the resilience and would bounce back, there is no doubt. But this tragedy striking us barely a day after the PM addressed the nation from the ramparts of the Red Fort trying to reassure the nation on fast track economic recovery and stabilization, is quite unfortunate.

The FM observes, ‘Indian market need not be too sensitive to US market sentiments; rather it should react to our own’. One is not quite sure how that kind of selective reaction could be possible in a unipolar world with USA on the lead. Let us admit it though we don’t like to. Not only the US happenings but any economic event anywhere like the Euro Greek tragedy or the pathetic downfall of Cyprus would impact us and other developing, rather fast developing nations.

Whatever be the cause for yesterday’s fiasco, any knee jerk reaction will result in a domino effect which further will weaken the economy. The rumor that Foreign Institutional Investors will be restricted from repatriating their investment and the returns is one such dangerous and callous response, whoever be there behind spreading such canards.

We can’t afford to lose the entire foreign investment at this critical stage. Let RBI do the reassuring in words and through taking necessary steps to regulate and de-regulate. We in these 66 years after independence have never placed any control on foreign capital leaving the country and shall not do so in future too.

A request to politicians of all hues and leanings – keep your damn mouth shut. This is not the time to demonstrate your one-up-man-ship whoever you are.
————————————————
இது இரண்டு நாள் முன்பு நடந்தது. ‘விஸ்வரூபம்’ நாவல் படித்த என் மலையாளத் தமிழ் நண்பர் தொலைபேசினார் – என்ன கௌரியம்ம நாவல்லே வந்திருக்காங்களே.

எண்ணூறு பக்க நாவலில் கௌரியம்மா ஒரு நிமிடம் தோன்றி மறைகிற கதாபாத்திரம். கௌரியம்மா? கௌரி தாமஸ்.மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவராக இருந்து இடதுசாரி முன்னணி அமைச்சரவைகளில் அங்கம் வகித்தவர். அவர் கணவர் காலம் சென்ற தாமஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

கௌரி தாமஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, தனிக் கட்சி தொடங்கி, காங்கிரஸ் தலைமை உம்மன்சாண்டி அரசில் அமைச்சராக இருந்தார் (ஏழு வருடம் முன்). தற்போது வயது தொண்ணுறு.

1938-ல் நடக்கிற நாவல் நிகழ்ச்சியில் வரும் உப கதாபாத்திரம் கௌரி தாமஸ் என்பது கேரள அரசியல் வ்ரலாறும் முன்னணிகளின் பின்னணி தெரிந்தவர்களுக்கு மட்டும் புரியும். அது புரியாவிட்டாலும் பாதகமில்லை. நாவல் படிக்கத் தடையேதும் இல்லை.

கௌரியம்மயை மட்டும் கண்டு பிடிச்சீங்களே.. ஏகேஜி (தோழர் ஏ.கே.கோபாலன்) கூட வர்றாரே.. தட்டுப்பட்டாரா?

நான் கேட்க, நண்பர் இல்லையே என்றார்.

அம்பலப்புழை படகுத் துறையில், ‘நாளைக்கு பிணறாயியில் கட்சிக் கூட்டம் இருக்கு’ என்று சொல்லிப் போவார் நாவல் கதாபாத்திரம்.

ஏகேஜி கௌரியம்மயை திருமணம் செய்ய விரும்பியதாகவும் ஆனால் கௌரியம்ம தோழர் தாமஸ் மேல் ஏற்கனவே நேசம் கொண்டிருந்ததால் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றும் மாத்ருபூமி விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய நேரத்தில் நான் உருவாக்கிய அத்தியாயத்தில் இந்த இருவரும் வந்தார்கள்.

நாவல் எழுதுவதில் இதெல்லாம் சின்னச் சின்ன சந்தோஷங்கள்.
——————————————————————————————————————-

இது தோழர் அச்சுத மேனோன் நூற்றாண்டு நேரம். அவரை மறக்க முடியாது.

அவரை மட்டுமா? ராஜனை மறக்க முடியாது. இன்றிருந்தால் என் வயதிருக்கும்… ராஜனை, அவர் தந்தை ஈச்சர வாரியரை, எமர்ஜென்சி கொண்டு வந்த இந்திரா காந்தியை, கேரளத்தில் அதைக் குரூரமாகச் செயல்படுத்திய உள்துறை அமைச்சர் கருணாகரனை, ஜெயராம படிக்கல்லை, புலிக்கோடன் நாராயணனை மறப்பது எங்ஙனம்?

http://matterofchoice.blogspot.in/2005/06/lest-we-forget.html

———————————————————————————-

எதெதற்கோ டெக்னாலஜி. காலையில் பத்திரிகையைத் திறந்தால் பொலபொல என்று உள்ளே இருந்து உதிர்கிற பிஸ்ஸா கடை, சைவ – அசைவ உணவகம், உரகடத்தில் பட்ஜெட் அப்பார்ட்மெண்ட் இப்படி கலர் கலராக அடித்த பிட் நோட்டீசுகளை (பிட் இலலை, பேப்பரை விட பெரிய சைஸ் – மடிச்சு வச்சுருக்காங்க பாவிகள்) உள்ளே செருகாமல் செய்ய யாராவது வழி செய்யக்கூடாதா?

ஓப்பன் சைடிலும் ரெண்டு ஸ்டாப்ளர் பின் அடித்து அனுப்பலாம் என்று சொல்லி ஒரு மாதிரி – ஒரே மாதிரி புத்தகங்களை நினைவு படுத்துவதைத் தவிர்க்கவும்.

இரண்டாம் தர இந்தியன்

பிரதமரின் சுதந்திர தின உரை யூடியூபிலும் வருகிறது. காணக் காத்திருக்கிறேன்.

ஒரு நிமிடம் முன் ஒரு தேச பக்திப் பாடல் (மிலே ஸ்வர் மேரா துமாரா போல்) திரையில் ஒலித்து, ஒளிர்ந்து கடந்தது. நல்ல பாடல். நல்ல காட்சியமைப்பு. ஆனால் என்ன, முழுக்க முழுக்க இந்தியில்.

மிலே ஸ்வர் போல் எல்லா மொழியும் வேண்டாம், குறைந்த பட்சம் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கில் இருந்து ஒரு மொழியாவது பாட்டில் வரலாமே?

நான் என்ன தான் இந்தியன் என்று உற்சாகமாக முன் வந்தாலும், ’நீ இரண்டாம் தரத்து இந்தியன்; இந்தி பேசுகிறவர்கள் மட்டுமே இந்தியர்கள் ’ என்று சுட்டிக்காட்டப் பட்டுக் கொண்டே இருக்கிறேன் என்பது கசப்பான உண்மை.
——————————————————–
சுதந்திர தினம் 2013 – பிரதமர் அணிவகுப்பைப் பார்வையிட, Wing Commander சீனுவாசன் என்ற கருத்த தமிழர் அவரை வழிநடத்திப் போகிறார். நாங்கள் இல்லாமல் இந்தியா இல்லை

சுதந்திர தினம் 2013 – எதிர்பார்த்தபடி இந்தியில் தான் பிரதமர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். உத்தர்கண்ட் துயரத்தில் தொடங்குகிறார். அந்த மாநில மக்களுக்கு எல்லா உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதிமொழி கொடுக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி, நேரு, அடாமிக் கமிஷன்… தொடர்கிறார்.

சுதந்திர தினம் 2013 – ஏழை எளியவர்களுக்குப் புது அதிகாரம் கிடைத்தது (ஆம் ஆத்மி கோ நயா அதிகார் மிலே ஹை) – பிரதமர் தொடர்கிறார்

சுதந்திர தினம் 2013 – Food security bill – waiting before parliament – மூணு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி – உரை தொடர்கிறது

சுதந்திர தினம் 2013 – 7 புது ஐ ஐ டி, 8 புது ஐ ஐ எம்.. 5 தேசிய பல்கலைக் கழகம், 2 கோடி ஏழை எளிய மக்கள் குழந்தைகளுக்கு மத்திய சர்க்கார் வகையில் இலவசக் கல்வி, இலவச மதிய உணவு… இலவச மருத்துவ உதவி ஏழைப் பட்டவர்களுக்கு, வாழ்நாள் அதிகரிப்பு .. உரை தொடர்கிறது

சுதந்திர தினம் 2013 – நீண்ட பயணம்.. நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய.. லம்பி சஃபர், பஹுத் குச் கர்னா பாக்கி ஹை .. உரை தொடர்கிறது

சுதந்திர தினம் 2013 – அந்த நேரம் தொலைவில் இல்லை. நம் எல்லா துயரங்களில் இருந்தும் விடுதலை அடைவோம் .. ஓ வக்த் தூர் நஹி.. ஹமாரி பூரா முஷ்கில் சே ஆஸாதி ஹோ ஜாயஹா .. ஜன கன மன அதிநாயக .. பிரதமர் உரை முடிவு

அடுத்த வருடமும் இதே பேச்சு, இதே கூட்டம், இதே தலைவர்கள் அணிவகுப்பு, இதே இந்தி.. இதே சுதந்திரம்.. வைதீஸ்வரன் சார் சொன்னது போல், ‘இன்னும் சுதந்திரம்’ .. வ்ந்தேமாதரம்

——————————————————–

சுதந்திர தினம் 2013 – அஹமதாபாத் ஒளிபரப்பு. குஜராத்தியில் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் விட்டுக் கொண்டு ஆறு பேர் போக, பின்னணியில் ஏ ஆர் ரஹ்மான் ‘மா துஜே சலாம்’ பாட மோதி (மோடி) வரக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுமை இல்லை. வேறு யாராவது பார்த்து விட்டு எழுதுவார்கள்…

————————————————-
“There will be a general election in our country before I have the privilege of addressing you again on the eve of our next Independence Day. This great festival of democracy is an opportunity for us to elect a stable government which will ensure security and economic development. Every election must become a crucial milestone in our nation’s journey towards greater social harmony, peace and prosperity.”

மிக அழகாகச் சொன்னார் பிரனாப். (ஜனாதிபதியின் சுதந்திர தின உரை)

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனநாயகத் திருவிழாவாகத்தான் பார்க்கிறேன். மகிழ்வோடு பங்கு கொள்கிறேன். பொங்கல் முடிந்து கரும்பும் தின்று முடிவது போல் அடுத்த அரசு பதவி ஏற்ற சில மாதங்களில், மகிழ்ந்த நேரம் முடிந்து போகிறது.

—————————————————————–
காலையில் இருந்து வாசல் அழைப்பு மணி ஒலித்தபடியே இருக்கிறது. எங்க அப்பார்ட்மெண்ட் பசங்க, பக்கத்து அப்பார்ட்மெண்ட்களின் நண்டு சிண்டுகள், தெருக்கோடி வீட்டுக் குழந்தைகள் என்று மழலைப் பட்டாளங்கள் உரிமையோடு வீட்டுக்கு வந்து சின்னஞ்சிறிய மூவர்ணக் கொடியை அன்போடு கொடுக்கிறார்கள். சட்டை முழுக்க கொடிதான் என்று ஆகி விடும் போல் இருக்கிறது.

பத்து நிமிஷம் முன் மறுபடி அழைப்பு மணி. சலித்துக் கொண்டு போய்க் கதவைத் திறக்க (எழுதும் போது இடைஞ்சல் என்றால் இது வாடிக்கை) மிரள மிரள விழித்தபடி ஒரு ஏழெட்டு வயது சிறுமி.

என்னம்மா வேணும்?

அங்கிள், கொடி.

நான் சிரித்தேன்.

காசெல்லாம் தர வேணாம் அங்கிள்.

அவள் அவசரமாகச் சொன்னாள்.

கொடியைக் கையில் வாங்கிக் கொண்டேன்.

ஆமா, குண்டூசி எங்கே பாப்பா? எப்படி சட்டையிலே குத்திக்கறதாம்?

குண்டூசி தீர்ந்து போச்சு அங்கிள்.

அவள் ஓட்டைப் பல் தெரிய மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சிரித்ததும் அழகாகத் தான் இருந்தது.

சரிம்மா, தாங்க்ஸ். பேர் என்ன?

மெஹருன்னிசா.

மெஹருன்னிசா போய்விட்டாள். நான் குண்டூசி தேடிக் கொண்டிருக்கிறேன்.
————————————————————-

சுதந்திர தினத்தன்று நல்ல செய்தி. வெங்காய விலை குறையும்.

http://www.thehindu.com/news/national/karnataka/onion-prices-decrease-after-recording-a-high/article5020062.ece?homepage=true

(வெங்காயமும் உருளைக் கிழங்கும் இல்லாமல் நம் முன்னோர் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? ஆயிரம் வருடத்துக்கு முன்பே இவை இங்கே அறிமுகமாகி இருந்தால் நம் கலை,.இலக்கியத்தில் இவற்றின் தாக்கம் எப்படியாக இருக்கும்?

—————————————————————————
Young, better educated militants – this is the face of global terrorism.

I am not for the state to infringe on human rights to curb terrorism.

However, I cannot but agree to an extent with Obama, “You can’t have 100 percent security and also then have 100 percent privacy and zero inconvenience …we’re going to have to make some choices as a society. … There are trade-offs involved.”

http://www.theguardian.com/world/2013/aug/11/kashmir-conflict-new-wave-militants

And those eleven more Thevarams…

I am reading an important book of 1920s – ‘South Indian shrines’ by Shri.P.V.Jagadisa Ayyar, a renowned archaeologist who held the post of the Manager, Office of the Archaeological Super-indent, Madras.

Penning a detailed study, dwelling at great length on the history, mythological references, literature and sociological prominence of each temple in south India, Iyer meticulously drills down and slices and dices into the minutest details about the temple inscriptions, literally ‘pillar to pillar’ at each temple.

The ancient Bhakti poetry in Tamil – Saiva thirumurai, bestowed by the great Nayanmar devotees namely Appar, Sundarar and Sambandar during the 7th and 8th centuries (CE) numbered in tens of thousands but were sadly lost to the later generations.

During the reign of Raja Raja Chola (985 – 1014 CE), 7000 odd hymns of this lost treasure was retrieved from the archives of Chidambaram Nataraja temple.

I understand that after this momentous occasion, 11 more hitherto considered l’ost-for-ever’ Tevarams were discovered engraved on the walls of Thiruvidavayil temple in Nannilam taluk (vide Epigraphical Report of India 1917-1918). The rare inscriptions were brought to light by Thiru P.V.Jagadisa Ayyar, the author of the book I am reading.

Incidentally, our friend Appa Ramesh Ramesh Krishnamurthy of Crazy Creations is the grand son of P.V.Jagadisa Ayyar.

The book is available as a Rupa Publication publication in print and is also in google books – except for a few pages. A must read for all history, art and sociology lovers.

தேவாரம் மீட்டெடுத்த சோழனுக்கு வாரிசு
நாவீரம் காட்டாது நற்றமிழ்க்(கு) ஆதாரம்
ஆத்தாடி எம்மா அறிவாளி கல்வெட்டு
தாத்தார மேஷுக்கு ஜே.

http://books.google.co.in/books?id=NLSGFW1uZboC&pg=PP7&source=gbs_selected_pages&cad=3#v=onepage&q&f=false

—————————————–

வெனிசூலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ தேர்தல் வெற்றியை வெனிசூலா உச்ச நீதி மன்றம் உறுதி செய்தது. வாழ்த்துகள். ஓய்வு பெற்ற மக்கள் தலைவர் ஷாவேஸ் போல் நல்லாட்சி தருக மதுரோ சகாவே.

‘அசப்பில் சுரேஷ் கோபி போல இருக்கார்’ – ஆ, அது கொள்ளாம்!


—————————————-

பி.ஏ.கே பிறந்த நாளா? (புலிநகக் கொன்றை நாவல் ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன் என்ற பிஏகே அண்ணா)

ஆமா சார்.

எங்க பின் வீட்டுப் பிள்ளை.

என்னாக்க?

ஆழ்வார்பேட்டை வீட்டுக்குப் பின்னாடி ஒரு வீட்டுலே பிரம்மசாரியா முன்னாடி அவர் தங்கி இருந்தார் தெரியுமோ?

முன்னாடி பின்னாடி.. சார் .. இது என்ன பஞ்சதந்திரம் பிளஸ் ஒண்ணா?

நாளைக்கு முக்கியமான ஷூட். வரீங்களா?

அடடா, கிளாஸ் எடுக்கணுமே..

எப்ப வரை?

ஆகஸ்ட் இருபத்தெட்டு எனக்கும் அறுபது முடியறது சார்.

ஏன் சார், சாப்ட்வேர் கம்பெனி வேலை, எழுத்துன்னு மும்முரமாக இருப்பீங்கன்னு பார்த்தா இந்த மாதிரி வெட்டிக் கணக்கு எல்லாம் எதுக்குப் போட்டுட்டு இருக்கீங்க?

மனுஷன் ஒரு பத்து நிமிடம் பிடித்துக் கொண்டு விட்டார். நான் அறுபதென்ன, எண்பது வரை இருந்தாலும் வாயைத் திறக்கவே மாட்டேன். முக்கியமாக நம்ம நண்பரிடம்.
——————————————————
it is our fortune we have a central bank which since inception is able to function relatively non impacted by political influences.

RBI’s core strength is

a) in roping in talent and knowledge from the vast banking pool of the country through forming of different working committees

b) making the banking sector involved in their work through keeping the feedback channel open for two-way communication (and)

c) a remarkable ability to think original.

One example of the last mentioned attribute is how RBI faced the Asian currency crisis of 90s. While other countries like Thailand and Malaysia pegged their national currency to US dollars, RBI went for the ‘pegging to the basket of currencies’ strategy that kept Indian rupees afloat while Thai Bhats and Malay Ringets wilted under the pressure of wild fluctuations of the dollar. The strategy is still being copied by other nations successfully.

I am sure the new RBI Governor will soon be successful in achieving rupee stability.
———————————————–
நிகழ்ந்த ஒரு துயரமான சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படைப்புகளின் இலக்கிய மதிப்பு குறித்து விவாதங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

இந்த நிகழ்வுகளும் அவற்றின் பின்புலமும் சமுதாய நினைவில் என்றும் மறக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது சமூக அக்கறை குறித்த நிலைபாடு.

அதை எழுத்து, நிகழ்கலை, ஓவியம், சிற்பம், இசை ஆகிய நுண்கலைகள் மூலம் நிறைவேற்றுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். அவற்றின் இலக்கிய மதிப்பை வருங்காலம் கணிக்கட்டும்.

இது நிர்பயா குறித்து எடின்பரோ விளிம்புநிலை கலை விழாவில் (Edinburgh Fringe festival) தற்போது நிகழ்த்தப் பட்டு வரும் நாடகம் பற்றிய குறிப்பு.

http://www.theguardian.com/stage/2013/aug/04/nirbhaya-india-women-rape-play