Author Archive

புதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்

By |

புதியது : சிறுகதை  – பாதுஷா       இரா.முருகன்

ஜன்னல் சீட்டை நான் எடுத்துக்கலாமா? கேட்டபடி பக்கத்தில் நின்றவரைப் பார்த்து விட்டு அடுத்த சீட்டுக்கு மாறி உட்கார்ந்தான் ராகவன். விமானம் கிளம்பப் போகிறதால் பாதுகாப்பு பட்டியை அணிந்து கொள்ளச் சொல்லி அறிவிப்பு வர, அவசரமாக ஜன்னல் சீட்டில் விழுந்தார் வந்தவர். அவர் சட்டைப் பையில் இருந்து நழுவிய கார்டை எடுத்துப் பார்த்தான் ராகவன். எஸ்.எஸ்.சித்தர். அப்படின்னா? ”ஷேப் ஷிஃப்டர் சித்தர். நினைச்ச மாதிரி உரு மாறுவேன்”. மூலிகை பற்பசை வாசனையோடு சிரித்தார். புரியலே என்றான் ராகவன். அவன்…
Read more »

என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நாவல் பற்றி

By |

என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நாவல் பற்றி

நன்றி நண்பர்கள் கணேசன், அனுராதா கிருஷ்ணஸ்வாமி பத்திரிகையில் வந்தபோது நல்ல வரவேற்பு இருந்தாலும், அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஏனோ பிடிக்காமல், உடனே நிறுத்தியாக வேண்டும் என்று ஒரே பிடிவாதம். நான் பிரிட்டனில் இருந்த காலம் அது என்பதால் நேரடியாக வந்து என்ன பிரச்சனை என்று கேட்கவும் முடியவில்லை. மறைந்த எழுத்தாளர் திரு சாருகேசியும் நண்பர் – பத்திரிகையாளர் சிவகுமாரும், ரெட்டைத் தெரு தொடர வேண்டும் என்று உறுதியாகச் சொல்ல, தொடர் நீண்டு 26 அத்தியாயம் வரை போய்…
Read more »

நளவெண்பாவும், BREXIT-உம்

By |

நளவெண்பாவும், BREXIT-உம்

நளவெண்பாவும் BREXIT-உம் —————————————– போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் வாய்திறந்து ப்ரெக்ஸிட் வேண்டுமென்பார் – ஓய்வுகொண்டு போகவேண்டாம் யூனியனில் சேர்ந்திருப்போம் புத்தியென்பார் போகணுமா நிக்கணுமா சொல் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து (European Union) பிரிட்டன் விலகிவிட வேண்டுமென்று (BREXIT) பிரிட்டீஷ் மக்கள் சில ஆண்டுகளுக்கு முன் பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். வெளியேறும் நேரம் நெருங்க, போகவேண்டாம், சேர்ந்திருப்போம் என்று புது யோசனை. To Be or not to Be … போகணுமா நிக்கணுமா – இதுதான் பிரச்சனை வெண்பாவில்…
Read more »

புதிய சிறுகதை : புலி அம்சம் : இரா.முருகன்

By |

புதிய சிறுகதை :  புலி அம்சம்  : இரா.முருகன்

புலி அம்சம் இரா.முருகன் மகி எழுந்தபோதே அவர் வந்து விட்டார். ஏகப் பரபரப்பில் இருப்பதாக அவருடைய பேச்சும் நடப்பும் உணர்த்தின. பூனைக் கண்ணும், பூனை மீசை போல சிலும்பி நின்ற அடர்த்தி இல்லாத மீசையும், முகத்திலும் கைகளிலும் வெளுத்த சிறு வட்டங்களுமாக அலைபாய்ந்தார் அவர். ‘மகி, ரெடியா?” பேச முடியாமல் பற்பசை நுரை வாயில் அடைக்க அவரை உட்காரச் சொன்னான் மகி. நல்ல வேளையாக நாற்காலி இருந்தது. ”ஸ்ரீ காமராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சி சர்க்கார் இன்று…
Read more »

மதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்

By |

மதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்

மதுரை – ‘வாழ்ந்து போதீரே’ நாவலில் விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும்,…
Read more »

முழிபெயர்ப்பு

By |

முழிபெயர்ப்பு

முழிபெயர்ப்பு இரா.முருகன் ’மொழிபெயர்ப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. மூலப் படைப்பு தான் ஏதோ வீம்பு பிடித்து அதோடு இணங்க மறுக்கிறது’ என்று ஸ்பானிஷ் மொழி இலக்கிய மேதை போர்ஹே கிண்டலாகச் சொன்னாராம். அவருக்கு மொழி பெயர்ப்பாளர்கள் மேல் என்ன கோபமோ. ஆனாலும், எல்லோரும் ஒத்துக் கொள்வது ஒன்று உண்டு – நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் காணாமல் போகிறார். மோசமான மொழிபெயர்ப்பில் மூல நூலாசிரியர் காணாமல் போய் விடுகிறார். நான் மொழிபெயர்ப்புப் புத்தகம் ஒன்றைப் படித்து அந்த அனுபவத்தில்…
Read more »