Monthly Archives: November 22, 2013, 12:46 am

ஒரு தொலைபேசி அழைப்பு

நேற்று முன் தினம் மாலை தொலைபேசி ஒலித்தது. பழக்கமான குரல். கவிதாலயா கிருஷ்ணன்.

‘சார் பேசணுமாம் உங்க கிட்டே’

‘ப்ளீஸ் ..’

‘வணக்கம் முருகன்.. நேற்று ஷ்ரத்தாவோட … நீங்க எழுதிய மூணு நாடகமும் பார்த்தேன்.. பிரமாதம்.. மூணும் மூணு விதம்… என்னை ரொம்பவே பாதிச்சுது.. நாடகம் பார்த்துட்டு வந்து வெகு நேரம் அதைப் பற்றியே யோசிச்சிட்டு இருந்தேன்.. concept and content.. presentation.. excellent.. முக்கியமா எழுத்துக்காரரில் கவிதா assertive stage presence and amazing dialogue delivery.. ஆழ்வார்.. TDS அருமையான performance.. ஆழ்வார் கதை அருமை..’

நான் தயங்கித் தயங்கிக் குறுக்கிட்டேன்.

’சார், ஆழ்வார் கதையே உங்களுக்காகத்தான் பதினஞ்சு வருஷம் முந்தி எழுதினது .. குமுதத்திலே சிறப்பாசிரியரா ஒரு இதழுக்குக் க்தை கேட்டு உங்க அசிஸ்டெண்ட்.. இப்போ டைரக்டர் நண்பர் சரண் என் வீட்டில் வந்து காத்திருந்து ரெண்டு கதை வாங்கிட்டுப் போனார். ’ரெண்டையும் கடைசி நிமிடத்தில் இடப் பிரச்சனையால் குமுதத்தில் போட முடியலே, ஆனால் அவை மிக நல்ல கதைகள்’ என்று அப்போ எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தீங்க.. இன்னும் அதை பத்திரமா வச்சிருக்கேன்..’

‘அப்படியா?’

‘ஆமா சார், அதிலே ஒரு கதை, ‘வெறுங்காவல்’ கதிர்லே பிரசுரமாகி அந்த வருட இலக்கியச் சிந்தனை விருதுக்கு திரு தி.க.சி சார் தேர்ந்தெடுத்தார். இன்னொண்ணு கோமல் ஆசிரியரா இருந்த சுபமங்களாவிலே பிரசுரமாகி, அகில இந்திய அளவில் பல மொழிச் சிறுகதைகள் தேர்வில், தமிழுக்காக ‘கதா’ விருது வாங்கிச்சு.. ‘

‘அப்படியா, சந்தோஷம்.. கதா விருது எந்தக் கதைக்கு வாங்கினீங்க?’

‘உங்களுக்காக எழுதின ஆழ்வார் தான் சார்.. ஒரே கதைக்கு உங்க கிட்டே இருந்து ரெண்டு தடவை பாராட்டு.. தேங்க்ஸ் சார்’

கே.பாலசந்தர் சார் ரசித்துச் சிரித்தார்.

‘ நாடகம் முடிஞ்சதுமே நீங்க எங்கேன்னு தான் எல்லோரையும் கேட்டேன்..’

‘வர முடியாமல் ஒரு அவசரம் சார்.. சாரி..’

‘அவசியம் நேரில் வாங்க.. பேசணும்’

இந்தப் பாராட்டை முதலில் நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டது என் அருமை நண்பர் KH அவர்களோடு தான். அடுத்து இன்னொரு அருமை நண்பர் கிரேசி மோகன். அடுத்து குடும்பம், நண்பர்களாகிய நீங்கள்..

எல்லோருக்கும் நன்றி

விஸ்வரூபம் (நாவல்) – பி.ஏ.கிருஷ்ணன் விமர்சனம் – தி இந்து தமிழ் 10.11.2013

இரா.முருகனின் நாவல் ‘விஸ்வரூபம்’

————————————————————————–
(திரு பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய மதிப்பீடு)

விஸ்வரூபம் நாவலைப் பற்றி எழுத முற்படுவது ஐராவதத்தின் பெருமையைப் பற்றி சோடாப்புட்டிக் கண்ணாடியைத் தொலைத்து விட்டு அதைப் பார்க்கும் கிட்டப்பார்வைப் பேர்வழி விளக்க முற்படுவது போல இருக்குமோ என்று தோன்றுகிறது. It is a mastodon of a novel!

நாவலுக்கு துரைசாமி ஐய்யங்கார் பாணியில் ‘விஸ்வரூபம் அல்லது உலகம் சுற்றும் ஆவிகள்’ என்று பெயர் வைத்திருக்கலாம். ஆவிகள் உலகத்தைச் சுற்றுவது மட்டுமல்லாமல் என் கனவிலும் சுற்றி சுற்றி வந்து தொந்தரவு செய்கின்றன. விசாலாக்ஷிக்கு காசியில் விடுதலை கிடைத்ததா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

மொழி மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. நாவலின் பாத்திரங்களுக்கு அமைந்திருக்கும் தனித் தன்மை வியக்கத்தக்க அளவில் இருக்கிறது. பக்கங்களை தள்ளி விட்டு படிக்கலாம் என்று நினைத்தால், குற்ற உணர்ச்சிப் பிடித்து ஆட்டுகிறது. ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்க முடியாது. இது நாவலின் வெற்றி என்றுதான் கூற வேண்டும். லண்டன், எடின்பரோ பக்கங்களை மிகவும் ரசித்துப் படித்தேன்.

எனக்கு நாவலில் பிடித்த பாத்திரங்கள் மகாலிங்கம், நாயுடு, கற்பகம், மற்றும் தெரசா.. மகாலிங்கம் எழுதும் கடிதங்களுக்குப் பதிலாக ஆசிரியரே இன்றைய மொழியில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

நாவலில் முலைகள் அடிக்கடி திமிர்ந்து கொண்டு முன்னால் வர முயற்சிக்கின்றன. இடையிடையே ஸ்கலிதத்தின் பிசுபிசுப்பால் பக்கங்கள் ஒட்டிக் கொள்கின்றன. ஆண்கள், பெண்கள் பேச்சுக்களில் அனேகமாக குறிகளே குறியீடுகளாக இருக்கின்றன. அன்றைய மலையாள பிராமண சமூகத்தின் பேச்சு வழக்கு இவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. எங்கள் பக்கத்தில் வேறுமாதிரியாகப் பேசுவார்கள். குறிகளும் முலகளும் சற்றுக் குறைவாகப் புழங்கும் என நினைக்கிறேன். ஆனால் இவை இல்லாமல் வாழ்க்கை ஏது ? பேச்சுகளுக்கு உயிர் ஏது?

கதை நடக்கும் நாட்கள் வரலாற்றின் முக்கியமான நாட்கள். அவற்றை சாதாரண மக்கள் எவ்வாறு கடந்து போகிறார்கள் என்பது நாவலில் மிக நயமாகக் காட்டப் படுகிறது.

பெரிய நாவல். கொஞ்சம் குறைத்து எழுதியிருக்கலாமோ? எதைக் குறைப்பது என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது
———————
இரா.முருகன் –
(மகாலிங்க அய்யன் கடிதங்கள் – அந்த narrative உத்தியின் காரணம் பற்றி, ‘மகாலிங்கன் கடிதங்கள்’ என்று அந்தப் பகுதிகளை மட்டும் தொகுத்து நாடகமாகுவது குறித்து பிஏகே அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நாடக அரங்கேற்ற மும்முரம்.. முடிந்து அதை இங்கே பகிரவும் தொடரவும் ஆர்வமுண்டு. ’

ஒத்திகை நேரம்

(குறிப்புகள் எழுதப் பட்ட நாள் – 10.11.2013)

நாடக ஒத்திகை (லைவ்) 12

//மகளுக்கு ஒரு தந்தை எழுதிய கடிதங்கள் .. ஜவஹர்லால் நேரு .. அப்பாவோட favourite leader,,. favourite book.. favourite mode of communication…லெட்டர்.. கடிதம்.. all old world charm.. சுகத்தை சொல்றதுக்கும் துக்கத்தை பகிர்ந்துக்கறதுக்கும் போஸ்ட் கார்டும் இண்லெண்ட் லெட்டரும் தான் அப்போ எல்லாம்…சின்ன பிள்ளையிலே பார்த்திருக்கேன்.. போஸ்ட்மேன் வீடு வீடா வந்து கடிதாசு வந்திருந்தா கொடுத்திட்டுப் போவாரு.. எங்க பாட்டியம்மா அவசரமா வாங்கி மேலோட்டமா பார்ப்பாங்க.. நாலு மூலையும் மஞ்சள் குங்குமம் தடவி லெட்டர் வந்திருந்தா கல்யாணம் கல்யாணம்னு சொல்லிக்கிட்டு அவங்களே பிரிப்பாங்க… ஆனா. கருப்பு தீத்தி வந்துதோ, போச்சு.. உடனே என் கிட்டே கொடுத்துடுவாங்க.. மாடப் பிறையிலே வைடா குழந்தே.. நாளைக்கு நான் குளிக்கப் போகிற முந்தி படிச்சுக்கறேன்னு கெஞ்சுவாங்க..தூரத்து சொந்தத்திலே ஏதாவது சாவுச் செய்தியா இருக்குமாம்.. படிச்சா உடனே குளிக்கணுமாம்.. பகல்லே குளிச்சா ஜலதோஷம் பிடிக்குமாம்.. பயம்.. நான் காமிக்ஸ் வாங்க காசு பத்தாட்ட ஏதாவது பழைய கடுதாசுலே கருப்பு இங்க் தடவி ‘பூட்ட கேஸ் .. பூட்ட கேஸ்.. படிக்கட்டுமா இல்லே காசு தர்றியா கெளவி’ன்னு அவளைத் தொரத்துவேன்..
//

பாலாஜி ஒரே ஒரு முறை தான் இதைப் படித்தார்… ஒரு காற்புள்ளி அரைப்புள்ளி விடாமல் அழகாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். தெரிந்திருந்தால் இவரை இன்னும் பேச விட்டிருப்பேனே!

—————————————-
நாடக ஒத்திகை (லைவ்) 11

எழுத்துக்காரர் ஒத்திகை.

ஒத்திகை தொடங்கும் முன் ஸ்லாக் ஹவரில் கவிதா என்னிடம் கேட்டார்.

ஏன் சார் எப்பப் பார்த்தாலும் லேப் டாப்பிலே ஏதோ எழுதிட்டு இருக்கீங்க?

நான் தான் எழுத்துக்காரர் கவிதா..

”The prime of Miss Jean Bradey’ படிச்சிருக்கீங்களா கவிதா? Muriel Spark எழுதினது..

படிச்சதில்லே சார்

படிங்க.. ஃபெமினிஸ்ட், போஸ்ட் மார்டனிஸ்ட்.. டைட்டில், ஆதர் நேம் நினைவிலே வச்சுக்குங்க

ஏன் சார்?

இன்னிக்கு ஒரு வரி உங்க டயலாக்கிலே சேர்த்திருக்கேன்.. பரணன் பாலாஜிக்கு க்யூ கொடுக்க..

மூரியல் ஸ்பார்க் தமிழ் நாடக மேடைக்கு வரட்டுமே..
——————————————
நாடக ஒத்திகை (லைவ்) 10

//
MANSION RESIDENT 2
உனக்கு லேகியமே வேணாம். பார்த்தாலே ரிஷி கர்ப்பம் தான்.

MANSION RESIDENT 3
அப்படீன்னா?

MANSION RESIDENT 2
உஸ்மான் ரோடு கோமதி சங்கர் மிட்டாய்க்கடையிலே சோன் பப்டி வாங்கிக் கொடு. சொல்றேன்.

MANSION RESIDENT 3
இப்பவா, பூட்டி இருக்குமே.

MANSION RESIDENT 1
நாதன்ஸ்லே புல் மீல்ஸ் போயிடலாமா..

MANSION RESIDENT 3
நாதன்ஸ்லே இந்த நேரத்திலே இடம் கிடைக்கும்னா நினைக்கறே? எவன் மோர் சோறு தின்னுக்கிட்டு இருக்கான்னு பார்க்கணும். அவன் சளப் பளப்புன்னு அசை போடறதை லட்சியமே செய்யாம டோக்கனை டேபிள்லே தண்ணியைத் தொட்டு வைக்கணும்.

MANSION RESIDENT 2
எதுக்கு தண்ணி?

MANSION RESIDENT 3
பேப்பர் டோக்கன் Fan காத்துலே பறந்திடுமே.

MANSION RESIDENT 1
நான் அவன் இலை ஓரமா ஒரு சோத்தை எடுத்து அதைத் தொட்டு ஒட்டி வச்சிடுவேன்.

MANSION RESIDENT 2
மகா ஊழல் பேர்வழி மச்சான் நீ. உன் கூட சாப்பிடறதே
(விளம்பரப் பட உச்சரிப்பில்)
கிருமித் தொற்றை உண்டாக்கும். மற்றும் தேக ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும்.. ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடினால்…

MANSION RESIDENT 1
ஓகே ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே. நாம் இப்போது இரவு சாப்பாடுக்காக அடுத்த தெரு ஆந்திரா மெஸ் போகிறோம்.

//

1970 பிற்பகுதியில் சென்னை தி நகரில் பேச்சலர்ஸ் மேன்ஷன் வாழ்க்கையில் ஒரு சில நிமிடங்கள். என் சொந்த வாழ்க்கையும் கூட.

இப்போதும் உஸ்மான் ரோடில் கோமதிசங்கர் மிட்டாய்க் கடை இருக்கிறது. நாதன்ஸ் ஹோடடல் இல்லை. ஆந்திரா மெஸ்ஸும்.
——————————————-
நாடக ஒத்திகை (லைவ்) 9

ஆழ்வார் ஒத்திகை.

//கிருஷ்ணசாமி இல்லேப்பா. நாராயணசாமி முதலியார். கே.என் அப்படீன்னு இனிஷியல்லே தான் பிரபலம். அவர் கிளப்பிலே பேட்மிண்டன் விளையாட எங்காத்துப் பக்கமாத்தான் இருக்கு.. கார்லே போறார். நான் வீட்டு வாசல்லே வேஷ்டியைத் திரிச்சு மூக்கிலே விட்டுத் தும்மிண்டு இருந்தேன். தலையிலே ஒரே கொடச்சல். வந்த மனுஷர் அரைக் கட்டுலே நிஜாரும் கையிலே பந்து மட்டையுமா முன்னாலே நிக்கறார். எனக்குக் கையும் ஓடலே, காலும் ஓடலே. வாங்கோன்னு சொல்றதுக்கு முந்தி தடதடன்னு உள்ளே நுழைஞ்சவர் கண்லே கூடத்துலே மாட்டியிருந்த அனுமார்தான் பட்டார். எப்பேர்க்கொத்த ரூபம் ஓய். இப்படிப் புழுதி அடைய விட்டிருக்கீரே. பூஜை ஏதாவது பண்ணறீரான்னேன். என்.ஜி.ஓ வருமானத்துலே வயத்தைக் கழுவறதே உம்பாடு எம்பாடு. பூஜைக்கு எங்கே ஸ்வாமி போவேன்னேன். முதலியார் என்ன சொன்னார் தெரியுமோ? //

ஆழ்வார் தன்னுள் ஆழ்ந்து சொல்ல, நெல்சன் முகத்தில் ஆச்சர்யம், தவிப்பு, அவசரம் என்று மாறி மாறித் தெரிய கண்கள் அங்கும் இங்கும் அலைபாய அவருக்கு ரியாக்‌ஷன் தருகிறார். நன்றாக வந்திருக்கிற காட்சி இது.

நாராயணசாமி முதலியார் என்ன சொல்லியிருப்பார்?
———————————
நாடக ஒத்திகை (லைவ்) 8

ஆழ்வார் ஒத்திகை நடக்கிறது. ஆழ்வாராக டி டி சுந்தர்ராஜன். சந்திக்கும் இளைஞனாக நெல்சன் இளங்கோ.

ராத்திரி நேரத்தில், 1980 தென் சென்னைத் தெருவில் கை கூப்பிச் சேவித்தபடி டி டி எஸ் நம்மாழ்வார் பாசுரத்தை மெய்மறந்து சொல்கிறார். அவருக்கும் கேட்டும் பார்த்தும் சுற்றி இருக்கும் நமக்கும் கண் கலங்குகிறது.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி மண்ணில்
உளவன் அவன்சீர் வளம் மிக்கவனூர் வினவி திண்ணமென்
இளமான் புகுமூர் திருக்கோளூரே.

பெருமாளே. உன் சேவடி செவ்வித் திருக்காப்பு.
—————————————-
நாடக ஒத்திகை (லைவ்) 7

மதிய உணவு நேரத்தில் மேடை ஒளியமைப்பு நிர்வாகியான காளீஸ்வரியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒரு இண்டக்ரேடட் லைட்டிங் ப்ளான் இல்லாம வேலை ஆரம்பிக்கறது இல்லே..

அது போதுமா காளி? லைட்ஸ் ஆன் சரிதான்.. fade out-ம் முக்கியமில்லையா? எழுத்துக்காரர்லே செண்டர் ஸ்டேஜ், ஆஃப் ஸ்டேஜ் ரெண்டிலேயும் பத்து செகண்ட் இடைவெளியில் ஆக்‌ஷன், அப்பப்ப ரெண்டுலேயும் ஒரே நேரத்திலே ஆக்‌ஷன்.. லைட்டிங் ப்ளான் மட்டும் போதும்கிறீங்களா?

போதவே போதாது.. செண்டர் ஸ்டேஜ், ஆஃப் ஸ்டேஜ் ரெண்டும் எப்போ லைட்.. என்ன மாதிரி.. எந்த ஆக்டர் எந்த க்யூ கொடுத்ததும் லைட்ஸ் ஆன்.. எல்லாம் தெரியணும்.. நானும் ஒரு பெர்மார்மர்னு நினைச்சுப்பேன்.. மேடைக்கு முன்னால் இருக்கும் பெர்மார்மர்..ஸ்கிரிப்ட் முழுக்கத் தெரியணும்.. இப்போ இங்கேயும் தெரிஞ்சு வைச்சிருக்கேன்.. கரெக்டா வரும் பாருங்க..

வரும். கிரிஷ் கர்னாட் நாடகத்துக்கு ஒளியமைப்பு செய்த இளம்பெண் ஆச்சே காளி.
———————————–
நாடக ஒத்தகை (லைவ்) 6

மதிய உணவுக்குப் பிறகு சிலிக்கன் வாசல் தொடர்கிறது.

சோலையின் நனவோடையாக..

சாயந்திரம் ஆறு மணிக்கே வீட்டுக்குப் போய் அள்ளிப்போட்டு முழுங்கிட்டு நல்ல்ல்லா தூங்கணும்… … தூங்கணும்.. ஈரமான தரை.. …தலகாணியை மிதிச்சுக்கிட்டு ஓடுற மகனோட ரப்பர் பந்து முதுகுலே மோதற சத்தம்… டிவி சீரியல்லே அழற சத்தம் .. சரோஜா திட்டற சத்தம்.. சமையல் கட்டில் பாத்திரம் உடைபடுகிற மாதிரி சத்தம்.. ஹோன்னு ஏசி பிளாண்ட் சத்தம்.. சூசைராஜின் இருமல் சத்தம்.. துரையின் வெந்த சேப்பங்கிழங்கு குரல்.. மாலதி வளைச்சத்தம், சிரிப்புச் சத்தம்,…Receptionist Fonseka குழைஞ்சு குழைஞ்சு டெலிபோன்லே விசாரிப்பு.. May I know who is this? Oh Chandy… how are you? Could you please hang on for a second? Shall check up whether the boss is on the prowl.. lion? Paper tiger… ha ha..கம்ப்யூட்டர் பின்னறையில் பழைய லைன் பிரிண்டர் சத்தம்.. ஹோன்னு பெரிசா.. அருவி விழற மாதிரி.. ஐந்தருவி.. குற்றாலம்.. குளிக்கப் போறவங்க சத்தம்..குழந்தை அழற சத்தம்.. சார் மசாஜ் நாலு ரூபா.. மங்குஸ்தான் பழம் வேணுமா சார்?அருவிக்கரை தோசைக்கடை.. சட்டுவம் சதா தோசைக்கல்லு மேலே உராயற சத்தம்..சார்வாளுக்கு இன்னும் ரெண்டு தோசை வைக்கட்டா.. சாப்பிட்டு அருவியிலே குளிங்க.. குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க… சாப்பிட்டு திரும்ப குளியல்.. அருவி அலுக்காது.. நம்ம கடை தோசையும்..

அப்படியே அதே படிக்கு நல்லா வரணும் பெருமாளே..
—————————–
நாடக ஒத்திகை (லைவ்) 5

நண்பர் Jayaraman Raghunathan ரகு ஒத்திகையைப் பார்க்கவும், நண்பர்களோடு உரையாடவும் வந்திருக்கிறார். கையோடு ஒரு பெரிய பெட்டி நிறைய கேக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவதால் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் அனைவரும்.
————————-
நாடக ஒத்திகை (லைவ்) 4

சிலிக்கன் வாசல். சூசையாக ரோஹன் ஐயர்.

‘என்ன சோலை, துரை ரோடு விட்டுட்டானா?’

இல்லே தம்பி.. Rod.. ராடு விட்டுட்டானா?

ரோடு விட்டுட்

ரோஹன் நாயர்:-)

அப்படியே விட்டாச்சு.. அதுவும் நல்லாத்தான் இருக்கு
———————————–
நாடக ஒத்திகை (லைவ்) 3

சிலிக்கன் வாசல். நடுநாயகமான சோலை கதாபாத்திரம். சூரஜ் அனுபவித்துச் செய்கிறார். வசனம் பேசும்போது எமோட் செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கச்சிதமாக்கி இருக்கிறார் இயக்குனர் டிடிஎஸ். எப்போதாவது வசனம் மறந்தால் அவன் எமோட் செய்வதை இப்போது நான் ரசிக்கிறேன்.
——————————–
நாடக ஒத்திகை (லைவ்) 2

சிலிக்கன் வாசல். சாப்ட்வேர் கம்பெனி உள்ளூர் நிர்வாகியாக பாலாஜி. எத்தனை பெரிய டயலாக் ஆக இருந்தாலும், ஒரே தடவை பார்த்து விட்டு சர்வ சாதாரணமாகப் பேசுகிற நேர்த்தி அபாரம் -

கான்பிடன்ஷியல் ரிப்போர்ட் ஒரு நிமிட சாம்பிளாக அவர் குரலில் வருகிறது இப்படி -

Though the skill set of both Solai and Susai as well as their relative dot net and B to C as well as B to B portal experience is same, I observe Soosai is a better fire fighter and game changer than Solai.. ´

எனக்கே நடுவில் வார்த்தை இடறுகிறது.. பாலாஜி ஒரே டேக் தான்.. kudos to him
——————————–
நாடக ஒத்திகை (லைவ்) 1

சிலிக்கன் வாசல் ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. கடைசிக்கு முந்திய காட்சி. காத்தாடி ராமமுர்த்தி அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

’இங்கே யாருப்பா டைரக்டர்? டி டி எஸ், நீயா? நாப்பது வருஷமா செஞ்சும் நடிக்க வரல்லேன்னு டைரக்ட் பண்ண வந்துட்டியா?’

என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு ‘இவர் யாரு? நாடக ஆசிரியரா? பார்த்தாத் தெரியலே..’

திரை உயரும் நேரம்

நாடக அரங்கேற்றம் நல்லபடியாக நேற்று முடிந்தது.

16,17,19 (சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, வரும் செவ்வாய்க் கிழமை) ஆகிய தினங்களில் இந்த மூன்று நாடகங்களும் மீண்டும் நிகழ்த்தப்படும்.

காட்சி அனுபவத்தில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.

இது படைப்பாளி மௌனம் காத்துக் கருத்துக்களைப் படிக்க, காது கொடுத்துக் கேட்க வேண்டிய தருணம்.

நேற்று அரங்கேறிய என் மூன்று நாடகங்கள் பற்றிக் கருத்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

முதல் நாடகம் முடிந்த ஐந்தாம் நிமிடம் தொடங்கி, நேற்று நான் காரில் ஏற முற்படும்போது நாரதகான சபா வாசல் உட்லண்ட்ஸில் சாப்பாட்டைப் பாதியில் நிறுத்தி எழுந்து, ‘இரா.முருகனா? நான் …’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டு உற்சாகமாகவும் விவாதமுமாக பேசிய நண்பர் (அவர் தட்டில் ஆறி அவலாகிக் கொண்டிருந்தது வெங்காய ரவா தோசை என்று தோன்றுகிறது), இரவே தொலைபேசிய, இன்று காலை தொலை பேசிய, பேஸ்புக் இன் பாக்ஸில் செய்தி விடுத்த நாடக மேடை, இலக்கிய, பத்திரிகை, சின்னத் திரை, திரை மற்றும் பல துறை சார்ந்த நண்பர்கள், நாடகங்களைப் பார்க்க, அவை பற்றிப் பேச, எழுத இருப்பவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.

எங்கள் ஷ்ரத்தா குழுவினருக்கும் அவர்கள் என்னையும் நான் அவர்களையும் இனம் காண உதவிய நண்பர் ஆனந்த ராகவ்Anand Raghav அவர்களுக்கும் நன்றி.

சுஜாதா சார் பூரணம் விஸ்வநாதனின் கலாநிலையம் நாடகக் குழுவோடு அறிமுகம் ஆனபோது சொன்ன அதே சொற்களை நான் உரிமையோடு பயன்படுத்திக் கொள்கிறேன் – நேற்று நாடகம் காண வந்திருந்த எங்கள் அன்புக்குரிய திருமதி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் அனுமதியோடு -

Team Shraddha, ‘I have found my own team’.

Photo courtesy Mr.V.K.Srinivasan

நாடக அரங்கேற்றம் வெற்றி பெற வாழ்த்து சொல்லி தன் கவிதையைப் பகிர்ந்து கொண்டார் நண்பர்.

இப்படி முடியும் கவிதை -

நான் நீர்மேல் நடக்கிறேன்.
என் அகராதியில் நிலம்
உன் அகராதியில் நீர்.
என்னைப் புரிந்து கொள்ள
உன் அகராதியைத் தூக்கி எறி.

கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும் என்று நண்பர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதை இன்னுமொரு முறை செய்தேன். ‘பார்க்கலாம்’.

‘விஸ்வரூபம்’ திரைக்கதை நூல் (மலையாள வடிவம்) வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அமீரகம் (United Arab Emirates) செல்லும் நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கு ஷ்ரத்தா குழுவினர் சார்பில் வாழ்த்துகள், நன்றி.


—————————————————————–

எம் ஷ்ரத்தா குழுவினரால் அரங்கேற்றம் பெறும் என் முதல் மூன்று மேடை நாடகங்களை நவபாரதச் சிற்பி ஜவஹர்லால் நேருவுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

————————————————————–
கிரேசிமோகன் வாழ்த்து-

அரவணை நீங்கி அவதரிக்கும் நீல
நிறமய மாலோலா நின்கழல் இராமுருகன்
நாடகத்தைப் பார்த்திட நாரத கானசபை
மேடையில் பூடகமாய் மேவு. (கிரேசி மோகன்)

மறு வாழ்த்தும் நன்றியும் -

சாக்லெட் கிருஷ்ணனே பாக்கொண்டு வேண்டுகிறான்
நோக்கிட வேறே நினக்குண்டோ போக்கிடம்
நாரத கானசபை நல்லபடி நாடகத்தால்
வாரம் முழுதும் நிரப்பு. (இரா.முருகன்)

——————————————

Silent (no) night… beautiful night… 7th November 2013

7th November

Aishwarya Arun (my daughter) texted during the day, ‘appa, I am thrilled Kamal sir greeted me on my birthday’. Today is the birth day of Sir CV.Raman, KH, Aishwarya and also the day of the great October Revolution that resulted in the birth of Soviet Union under Lenin’s leadership.

————————–

KH b’day party. Apart from Crazy, Ramesh Aravind, Madhan as always, had company of-Jayamohan.

————————-
நடு ராத்திரிக்குக் கொஞ்சம் முன்பான நிசி. விருந்துக்கு ஒவ்வொருவராக வர, களை கட்டிக் கொண்டிருந்தது. பத்து கேமிராக்கள் விருந்து நாயகரின் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு விருந்தாளியோடு அவர் பேசுவதையும் பதிவு செய்ய, நான் நண்பர் திரைப்படக் கல்லூரி முதல்வர் ஹரிஹரனோடு (ஏழாம் தலைமுறை இயக்குனரும் கூட) discourse in films பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

சட்டென்று பின்னால் இருந்து தோளைப் பற்றி இழுத்து நடந்தார் கமல். அதுதான் வந்ததுமே நானும் கிரேசி, ரமேஷ் அரவிந்த், மதன் ஆகிய நண்பர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்தாகி விட்டதே..

எழுத்துரு பற்றி காட்டமா சண்டை போட்டிட்டிருந்தீங்களே.. வந்திருக்கார்..

தொலைவில் ஒரு ஓரமாகக் கையைக் காட்டி அங்கே போய்ப் பாருங்க என்றார்.

சாரு அண்ணா? (சாருஹாசனா?). ரெண்டு நாளாக அவரோடும் அவருடைய 75+ புத்திளைஞர் நண்பர் குழாத்தோடும் ஆக்ரோஷமாக ஆங்கிலத்தில் அம்பு விட்டு – CC to KH – விவாதித்து, திடீரென்று ஞானோதயமானது என்னவென்றால், இருவருமே ஒரே கருத்தைத் தான் சொல்கிறோம்…

சாருஹாசனை எதிர்பார்த்துப் போனால், ஓரமாக ஜெயமோகன்.

லடாக் அனுபவங்களை, இந்த எழுத்துரு விவகாரத்தை (இன்று அவருடைய இணைய தளத்தில் எழுதியிருப்பதன் சாராம்சத்தைச் சொன்னார்) பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்.

விருந்துக்கு வந்து விட்டு இலை, தழையை மட்டும் உண்டு போனவர் அவர் மட்டும்தான்.

பொரட்டா பிடிக்குமே, அதையும் விட்டாச்சா என்று கரிசனமாக விசாரித்தேன். கிரேசிக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தேன். சடயரிஸ்ட் எல்லாரும் பழைய இலக்கியத்தில் நல்ல ஆர்வம் கொண்டவர்கள் முருகன் என்றார் ஜெமோ. எல்லோரும்? யோசித்து விட்டுச் சொல்கிறேன்..

சென்னைக்கே ஒரேயடியாக குடி வந்துவிடலாமே என்றேன். பத்மனாபபுரம் அவரை விடாது போல் இருக்கிறது. இந்து கோலப்பன் கூட அப்படித்தானாம். திருவல்லிக்கேணியில் இருந்தாலும், இன்று அவர்கள் ஊர் – பெயர் சொன்னார் மறந்து விட்டது – கோவில் சப்பரம், அங்கே சாமி புறப்பாடு இப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பாராம்..

ஜெமோ காய்கறி தேட நான் நண்பர் பேராசிரியர் ஞானசம்பந்தனுடன் சமணர்கள் கழுவேற்றம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன்.. விழா நாயகரும் ஒரு நிமிடம் நின்றார்.. அவருக்கும் இது பிடித்த சப்ஜெக்ட்..

வரேன் முருகன்

ஜெயமோகன் கிளம்பியபோது விருந்து தொடங்கி இருந்தது..
——————————————–
Told N.Ram at KH party last night (7th)- ‘I’ve to certainly compliment you for one thing.. for moving Meera Srinivasan to your Columbo desk. The reports she file after extensively traveling across the Tamil provinces are extraordinary.. the one I can instantly recall is the interview with the elusive KP.. reportage with a human face…’ Ram smiled and concurred, ‘ah that’s right.. she is doing a wonderful job’.

———————————————
I enquired director Priyadarshan at last night (7th) KH party how he recreated Kanchipuram of 40s in his well made out movie ‘Kanchivaram’. He said the tough challenge was to have a screen play that never strays away from the documented history. The temple (inside which the silk weavers are compelled to set their looms in direct supervision of the wealthy procurers) had a river flowing by it in the distant past which the weavers used for their silk thread cleaning and dying operations. That river has now changed course and flows away from the temple area, it appears.

As Priyan wanted his narrative true to history, he had to go hunting for an alternate site which he found in the far off Karnataka, somewhere down Thalaikaveri.

He also narrated how going for short cuts out of necessity sometimes result in piquant situations. His Hindi movie ‘Gardish’ (or something else, I forgot – blame it on the grand red wine!) opens with a long shot of Mumbai from Gateway of India and then the camera trolls. As he did not have the Mumbai urban authorities’ permission to shoot that scene (security reasons, p’haps), he used a scene from one of his old Malayalam movies starring Mohanlal at the same location and having these shots sweeping across Mumbai landscape.

When the movie was screened to an invited audience (which had many Mumbai malayalees), the Hindi hero was thoroughly puzzled when the movie opened at the Gateway of India. The auditorium was reverberating with thunderous claps while he got introduced only from the next scene. When the hero enquired Priyadarshan anxiously what is so special about the first scene, the latter replied just a single word – Mohanlal. The Malayalam film footage used had Lal walking into a close up from the Gateway!
——————————————————-
I asked Cartoonist Madhan last night (7th) while traveling to KH party – ‘what book are you currently reading?’.

Ka.Naa.Subramanian’s Poythevu!

He says, ‘I have changed a lot in my taste for books.. have developed a love for modern Tamil literature..

the last book he read – a few weeks ago – was Ambai’s short story collection. He is all in praise of the book.. quite natural.. the next book on the list he has? It is M.V.Venkatram’s Velvi Thii.

Have to introduce him to Krithika’s ‘Vasavechvaram’.
————————————————
Got introduced to a quite looking, shy young man, a little plumb and short. His name is Ghibran.

Rarely I am thrilled at meeting people. But this guy is different. With just one song – Porane porane (Neha Bhasin), he captured my ears and heart.I mentioned about his music on more than one occasion to KH when VSV was released. VSV is Vaagai Sooda Vaa.

Happy he is scoring the music for Viswaroopam 2.

Do you have any Arabic music experience? I asked him and he shyly nodded his head no.

I am sure he will go places soon.