Archive For நவம்பர் 30, 2023

பெருந்தேட்பெண்டைப் பேழையிலிட கர்ப்பூரன் நடந்தபோது

By |

பெருந்தேட்பெண்டைப் பேழையிலிட கர்ப்பூரன் நடந்தபோது

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து – முழு அத்தியாயம் 41 திண்ணை டாட் காம் இணைய வார இதழில் காண்க கசாப்புக்கடை பிரதி நீலன் அவரைக் கேட்டபடி நிற்க, உட்காருமய்யா என்று கைகாட்டி எதிர் வரிசையில் கால் ஆடிக் கொண்டிருந்த பழைய மர நாற்காலி ஒன்றைச் சுட்டிக்காட்டி. ரொட்டி எடுத்துக் கொள்ளும் என்றபடி தான் சவைத்துக் கொண்டிருந்த ரொட்டித் துண்டில் பாதியைக் கிழித்து நீலனிடம் நீட்டினார். இதேது பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரம் ஏறியது போல் இந்தத்…




Read more »

துயிலரங்கம் ஆக்ரமித்த தெள்ளுப்பூச்சி உயிர் கொல்லிப்படை

By |

துயிலரங்கம் ஆக்ரமித்த தெள்ளுப்பூச்சி உயிர் கொல்லிப்படை

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 41-லிருந்து – முழு அத்தியாயம் திண்ணை டாட் காம் இணைய இதழில் பக்கத்தில் கர்ப்பூரம் வேறே லொடலொடவென்று ஈச்சம்பாயில் ஒண்ணுக்கு போனமாதிரி பேசிக்கொண்டே இருக்கிறான். அவன் குரல் சத்தமாக இருந்தாலும் மெலிந்திருந்தாலும் நிறுத்தாமல் கேட்டுக் காதை செவிப்பூரன் புகுந்த மாதிரி துளைக்கிறது. பேசாமல் இதே காஸ்மாஸ் பிரபஞ்சத்திலேயே பொது யுகம் 230-க்குப் போய் விடலாமா? அசல் நீலன் அங்கே இருந்தால் நான் யாராவது? இருத்தலியல் சிக்கல் என்பது இதுதானா? இன்றைக்கு…




Read more »

புது சீலம், புது ஒழுங்கு, புது கட்டற்ற தன்மை, புது சிந்தனை – சகல ரோக நிவாரணி

By |

புது சீலம், புது ஒழுங்கு, புது கட்டற்ற தன்மை, புது சிந்தனை – சகல ரோக நிவாரணி

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 41 இப்போது திண்ணை இணைய வார இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது. சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன. தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும்…




Read more »

இந்தப் பிரபஞ்சத்துக்கு அரைக் கரடியே போதும்

By |

இந்தப் பிரபஞ்சத்துக்கு அரைக் கரடியே போதும்

என் ஃபாண்டஸி புதினம் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 40 திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து நாட்டுக் காரியம் இருக்கிறதே தலை போகிறதாச்சே என்று புன்சிரிப்போடு கரடியார் கைகூப்பி நறும்வல்லி வீட்டுக்குள் இருந்து தைல வாடையோடு வெளியே வந்தார். தேசம் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்றும், இந்த அபாயக் கட்டத்தைக் கடந்து நாடு முன்னேற பெருந்தேளரின் அரசாட்சி மட்டும் நாட்டை வழிநடத்த முடியும் என்பதால் பெருந்தேளருக்கு முழு ஆதரவு தெரிவித்தார்….




Read more »

நாம் யாரோடு இருக்கிறோம் என்பதைவிட நம்மோடு யார் இருக்கிறார் என்பதே முக்கியம் – நாவல் தினை அல்லது சஞ்சீவனியிலிருந்து

By |

நாம் யாரோடு இருக்கிறோம் என்பதைவிட நம்மோடு யார் இருக்கிறார் என்பதே முக்கியம் – நாவல் தினை அல்லது சஞ்சீவனியிலிருந்து

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 40 இன்று திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம். காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது. கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து…




Read more »

உல்லுலூ – சூப்பர் மார்க்கெட்களில் பொருள் வாங்குவாருக்கான காவல் தெய்வம் – ஏஐ

By |

உல்லுலூ  – சூப்பர் மார்க்கெட்களில் பொருள் வாங்குவாருக்கான காவல் தெய்வம் – ஏஐ

அண்மையில் எழுதிய என் குறுநாவல் சிவிங்கி சொல்வனம் இணைய இதழில் வெளியாகிறது குறுநாவல் சிவிங்கியில் இருந்து ஒரு சிறு பகுதி ======================================= உல்லுலூ வருகை உல்லுலூ வந்திருக்கு. உல்லுலூ நீர்நிலைகளின் சிறு தெய்வம். ஆனந்தா, மரியாதை செய் உல்லுலூவுக்கு. தேவதைகள் சிறகு நீவிச் சீராக்கியபடி ஆனந்தனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டன. உல்லுலூ என்று ஒரு தெய்வமா, கேட்டதே இல்லையே என்று ஆச்சரியப்பட்டான் ஆனந்தன். நீ பார்க்கிறாயே, உல்லுலூ உண்டுதான். ஆல்ட் சி பிரபஞ்சம் நூறாண்டு முந்திப்…




Read more »