Archive For பிப்ரவரி 29, 2024

புறநகர் சினிமா தியேட்டரில் திலீப் மோரே பாதி பார்த்த மராத்தி திரைப்படம்

By |

புறநகர் சினிமா தியேட்டரில் திலீப் மோரே பாதி பார்த்த மராத்தி திரைப்படம்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து – நாலு நாவல் அரசூர் வரிசையில் நான்காவது நாவல்   ஒடிந்து விழுவது போல் கதாநாயகி. அவளைப் படைத்தவனோ, உடுப்புத்  தைத்தவனோ, சரீர பாரத்தை எல்லாம் ஸ்தன பாரமாக மட்டும் உடம்பில் வடக்குப் பிரதேசத்தில் உருட்டி வைத்து மற்றப்படி குச்சிக் கால்களோடு அவளைப் புல் தரையில் வெட்டுக்கிளி போலத் தத்தித் தத்தி ஓட வைத்திருக்கிறான். அவளைக் கட்டி அணைத்துத் தூக்கித் தட்டாமாலை சுற்றுகிற மீசை மழித்த கதாநாயகனை ஒரு நூற்றுச் சில்லரைப்…




Read more »

யுத்த விமான பைலட் ஆகப் பணி புரிந்த அமேயர் அச்சன்

By |

யுத்த விமான பைலட் ஆகப் பணி புரிந்த அமேயர் அச்சன்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கு – சிறு பகுதி நீங்க என்ன வாகனம் எல்லாம் ஓட்டியிருக்கீங்க அச்சன்? கொலாசியம் மதுக்கடைக் காரனும் மறைந்த மெட்காபின் உற்ற தோழனுமான செபாஸ்தியன், தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அமேயர் பாதிரியாரிடம் விசாரித்தான். ஓவர்கோட்டை மேலே இழுத்து காது மடலை மறைத்தபடி அவர் ஒரு வினாடி யோசித்தார்.   வெறும் நாளில், நடக்கும்போதும், சைக்கிள் ஏறி கால்டர்டேல் பிரதேசத்துக் கல்பாளம் வேய்ந்த குறுகிய பாதைகளில் சுருதி கெடாமல் ரப்பர் டயரால் தட்டித்…




Read more »

முன்னூறு வருடம் முன்பு கொல்லரிடம் சாவி வாங்க பணம் கொடுத்தவனின் ஆவி

By |

முன்னூறு வருடம் முன்பு கொல்லரிடம் சாவி வாங்க பணம் கொடுத்தவனின் ஆவி

வாழ்ந்து போதீரே -நான்காம் அரசூர் நாவல் பகுதி ஊரில் போன மாதக் கடைசியில் பேய்களின் ஆராதகன் ஒருவன் குடியேறி இருப்பதாக அமேயர் பாதிரியாருக்குத் தெரிய வந்தது. பேயோட்டுகிறவன் இல்லை இவன். பிசாசு இருப்பதாகத் தெரிந்த இடங்களில் ராத்தங்கி, அவற்றோடு பேசவும் பழகவும், முடிந்தால் கேமராவில் அவற்றைப் படம் பிடிக்கவும் ஆர்வம் உள்ளவனாம். அம்மாதிரியான இடங்களில் தங்கி இருந்து நடவடிக்கைகளைக் கவனிக்க அவன் பணம் செலவழிக்கவும் தயாராம்.   அட்சன் முடுக்குச் சந்தில் முப்பது பரம்பரைக் கொல்லன் பெர்ரியின்…




Read more »

பிரார்த்தனை நேரத்தில் பியானோ வாசித்தவர்களும் ப்லூட்டோ கிரகத்தை கண்டுபிடித்தவர்களும்

By |

பிரார்த்தனை நேரத்தில் பியானோ வாசித்தவர்களும் ப்லூட்டோ கிரகத்தை கண்டுபிடித்தவர்களும்

வாழ்ந்து போதீரே பதிவுத் தொடர் தொடர்கிறது கால்டர்டேல் குரிசுப் பள்ளியில் ஒரு நூற்றாண்டு முன்னர் பியானோ வாசித்து வந்த ஒரு ஊழியக்காரன் சின்னஞ்சிறு கிரகமான யுரேனஸைக் கண்டுபிடித்தது உண்மையன்றோ. அதற்காக போப்பாண்டவரின் பாராட்டு பத்து வருஷம் கழித்து வந்து சேர்ந்தபோது அந்த ஊழியன் சர்ச் வளாகத்தில் அந்திம உறக்கத்தில் இருந்தான். இங்கிலீஷிலும் லத்தீனிலும் கடிதம் எழுத ஆள் தேடுவதில் தாமதமானதாக அப்போது அறிவிக்கப் பட்டது. அமேயர் பாதிரியாருக்கான திருச்சபை கடிதம் எழுத தெக்கே பரம்பில் போல் அங்கே…




Read more »

பகிரத்தான் அனுபவங்கள் – பீங்கான் பரணியில் ஊறுகாய் போட்டு தொட்டுக்கொள்ள இல்லை

By |

பகிரத்தான் அனுபவங்கள் – பீங்கான் பரணியில் ஊறுகாய் போட்டு தொட்டுக்கொள்ள இல்லை

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது = வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து =========================================================================== கால்டெர்டெல் மார்க்கெட்டில் கசாப்புக்கடை வைத்திருக்கும் பெர்ணாந்தஸ். அமேயர் பாதிரியாருக்கு அன்போடு ஒரு குவளை தேநீர் தர முன் வந்தான்.   பாதிரியார் இரண்டு நீண்ட மாதங்கள் இந்தியாவில் சுற்றி வந்ததைக் குறிப்பிட்டு அவருடைய அனுபவத்தைப் பங்கு வைக்கக் கோரிக்கை விடுக்கும் கால்டர்டேல் மறைநில மந்தையின் அன்பான ஆடுகளை அவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். அனுபவங்கள் எல்லாம் பங்கு வைக்கத் தானே. காடியில் அமிழ்த்தி…




Read more »

இரண்டு மார்ச் மாதங்கள் – ஜலஹள்ளி குல்கந்து

By |

இரண்டு மார்ச் மாதங்கள் – ஜலஹள்ளி குல்கந்து

இரண்டு மார்ச் மாதங்கள் இரா.முருகன் 1982-ல் மகா வெப்பமான ஒரு மார்ச் மாதப் பகல் பொழுதில் சென்னை தியாகராய நகரில் என் கல்யாண மகோத்சவம் நடந்தது. தாலியைக் கட்டுங்கோ, தாலியைக் கட்டுங்கோ என்று புரோகிதரிலிருந்து நாதசுவரத்துக்கு ஒத்து ஊதின பையாலு வரை பொறுமையில்லாமல் சொல்ல, நான் கல்யாண மண்டபத்தின் வாசலையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஊஹும். அந்த மனுஷர் வரலே. தாலியால் கட்டுண்ட அவளிடம் அடுத்த நாள் காலை சொன்னேன் – ஹனிமூன் போறோம். பெங்களூர்….




Read more »