Archive For The “The Wagon Magazine” Category

New Novel ‘1975’ – கேட்டுக்கொண்டபடி அவர் முகத்தில் சாதா சோகம் காட்டினார்

By |

1975 – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. “யூனிட் வண்டி வந்தாச்சு” என்றபடி, குமரேசன் கல்லாவை சாவி போட்டு திறந்து இருந்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ”வாங்க, நாம போகலாம், உங்க ஸ்கூட்டர்லே ஒரு அழுத்தல். போயிடாலாம்” என்றார் நிருபர். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கியது. சினிமா படம் எடுக்க ஒரு கோஷ்டி வந்திருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக ராக்கிப்பட்டியில் வற்றிப்போன ஊருணிக் கரையில் ஐயனார் கோவிலை ஒட்டி…
Read more »

New Novel ‘1975’ -Excerpts – ஷம்மிகபூர் லாஜிக்கே இல்லாமல் பக்கவாட்டில் திரும்பி போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கும் படம்

By |

சில வினாடிகளில் அந்த வளர்ப்புத் தேனிக் கூட்டம் முற்றும் விலகி வெளியே பறக்க, கரண்ட் வந்து விட்டது. நாங்கள் மெல்ல முன்னறைக்கு ஜாக்கிரதையாக நகர்ந்து பார்க்க, அங்கே காந்தி படம், நேரு படம், சுபாஷ் படம், ராஜாஜி படம், அப்புறம் பிரதமர் படம் முழுக்கக் கண்ணுக்குத் தெரியவில்லை. அத்தனை தேனீயும் அவர் முகத்தில் தான். கொஞ்சியதோ, கொட்டியதோ, தெரியாது. “ராணித் தேனி ஒய்வு ஒழிச்சலா வெளியே வந்தா அந்தப் படத்துலே தான் எப்பவும் போய் உட்காரும். கூடவே…
Read more »

புது நாவல் : டிஸ்ட்ரிக்ட்லேயே நீளமான தலைமுடி. எமர்ஜென்ஸி புள்ளிவிவரத்திலே இதெல்லாம் அடங்குமோ?

By |

புது நாவல் : டிஸ்ட்ரிக்ட்லேயே நீளமான தலைமுடி. எமர்ஜென்ஸி புள்ளிவிவரத்திலே இதெல்லாம் அடங்குமோ?

“ஏன் பேசவே மாட்டேங்கிறே”, வட்டமேஜை மேல் உட்கார்ந்தபடி கேட்டாள் பாருக்குட்டி. தலைமுடியை நெகிழ வாரி, முழங்கால் வரை தொங்கியதை அவள் சுவாதீனமாக முன்னால் அள்ளிப் போட, என் முகத்தில் மூலிகைத் தைலமும், மரிக்கொழுந்தும் வாடிக் கொண்டிருக்கும் கதம்பமும் நெடியைக் கிளப்பி ஒரு வினாடி கண் இருள நள்ளிரவாக்கி விட்டு அவள் தோளில் அமர்ந்தது. இது அழகு ஆக்கிரமிப்பே தான். திட்டமிட்டு நடத்தப்படுவது. யார் திட்டமோ. காலேஜில் இரண்டு வருடம் பின்னால், என் தங்கையோடு படித்தபோது கண்டுகொள்ளவே மாட்டாள்….
Read more »

புதிய சிறுகதை – கல்யாணி மட்டும் இரா.முருகன்

By |

புதிய சிறுகதை –  கல்யாணி மட்டும்    இரா.முருகன்

கல்யாணி மட்டும் (இரா.முருகன்) அன்னம்மா வாசலுக்கு வந்தபோது ஏக இரைச்சலாக இருந்தது. குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம். இரண்டு பெரிய தெருக்களின் சந்திப்புக்குப் பின்னால் ஒற்றை வரிசையில் ஓட்டு வீடுகள் நெருங்கியடித்து நிற்கும் முட்டுச் சந்து அது. வாசலை ஒட்டி சாக்கடை ஓடுகிற பிரதேசம். ஓடாமல் அது ரெண்டு நாளாகத் தேங்கி நிற்கிற கஷ்டம் இங்கே யாருக்குமே நினைவில் படுவதில்லை. எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் குழந்தைகள் சாயந்திரம் பந்தெறிந்து அடித்து விளையாடுகிறார்கள். சாக்கடையில் விழுந்த பந்துகளை எந்த…
Read more »

புது நாவல் : 1975: பகுதி : ஒண்ணரை ரூபாயில் அளவு சாப்பாடு போட்டு விட்டு

By |

ஆபீஸில் நுழைந்தபோது, ரத்தினம் எதையோ மறைத்து எடுத்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “என்னங்க, கல்லு தோசை கொண்டு வரேன்னு சொன்னீங்களே. அதுவா?” என்று கேட்டேன் அவரை. கல்லுத் தோசையும் கருவாட்டுக் குழம்பும் வீட்டில் விசேஷமான காலைப்பசியாறல் என்பார் அடிக்கடி அவர். “கருவாட்டுக் குழம்பு இல்லீங்க தம்பி, ரவித் தம்பிக்கு ஸ்பெஷல் அய்ட்டம். ஜீவா ஸ்டோர் ராமேசுவரம் பிள்ளை கொடுத்து அனுப்பினார். அவர் தான் மறச்சு கொண்டு போங்கன்னார்”. நான் ரத்தினம் கையில் வைத்திருந்த பத்திரிகையைப் பார்த்தேன். முரசொலி….
Read more »

New : எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’-ல் இருந்து

By |

“எல்லாரும் உங்க வகுப்புக்குத்தான் காத்திருக்காங்க. இன்னிக்கு நோ டயலெட்டிகல் மெடீரியலிஸம்” என்றார் சிரித்தபடி ஜெபர்சன். நான் ஸ்கூட்டர் பையில் துருத்திக்கொண்டிருந்த வாளியைப் பார்த்தேன். அதை விட்டுவிட்டு வந்தால் திரும்பும்போது அங்கேயே இருக்குமோ என்னமோ. கையில் வாளியோடு இலக்கியம் பேச உள்ளே போனேன். “இவங்களுக்கெல்லாம் மலையாள வகுப்பு இருக்குன்னு யார் சொன்னாங்க” நான் கேட்டுக் கொண்டிருந்தபோதே, சைக்கிளில் வந்து இறங்கினார் நிருபர் கார்மேகம். முகம் கொள்ளாத சிரிப்பு அவருக்கு. “என்ன சார், உங்க க்ளாஸுக்கு ஊர் முழுக்க ஆள்…
Read more »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.