புதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்

18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை

அரசூர் வம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு 2008-ல் வெளியாகி, அந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது.

பத்தாண்டுகள் கழித்து, அரசூர் நாவல்களில் இரண்டாவதான ‘விஸ்வரூபம்’ ஆங்கில மொழியாக்கத்தை, சரஸ்வதி பூஜை தினமான இன்று தொடங்கி இருக்கிறேன்.

மற்ற எழுத்தாக்கங்களும் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கின்றன.

வாணியைச் சரண் புகுந்தேன் – அருள்
வாக்களிப்பாள் எனத் திடமிகுந்தேன்
பேணிய பெருந்தவத்தாள் நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்.

சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன