Archive For ஆகஸ்ட் 23, 2017

உடுப்பி ஓட்டல் என்று கன்னடக் காரர்களோ உள்ளூர் குப்பன்களோ ஊர் முழுக்க உப்புமா கிண்டிப் போட்டுக் காப்பி கலந்து கொடுத்து காசை வாங்கி வாங்கிக் கல்லாவில் ரொப்பிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது

By |

இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 4 1927 மார்ச் 5 அக்ஷய மாசி 21 சனிக்கிழமை கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ,…
Read more »

சென்னை தின வாழ்த்துகள்: 22 ஆகஸ்ட் 2017: இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 3

By |

சென்னை தின வாழ்த்துகள்:  22 ஆகஸ்ட் 2017: இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 3

இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 3 1938 அக்டோபர் 7 வெகுதான்ய புரட்டாசி 21 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி இருந்ததாக நீலகண்டனுக்குத் தோன்றியது. … … .. .. ஸ்டேஷன் வாசல் பக்கம் ஒருத்தன் கை நிறைய நோட்டீசுகளை வைத்துக் கொண்டு வினியோகித்தபடி இருந்தான். பாகவதர்…
Read more »

கூர்மையான விழிகளோடு இருந்த ஸ்டாலின் நீர்த்துப் போனார்

By |

Rushing towards the end… a small excerpt from the translation done today மலாக்கா ஹௌஸில் கட்சி அலுவலகத்துக்கு நான் நீண்ட காலம் கழித்து மறுபடியும் போனபோது, சுவரில் ஸ்டாலின் உருவப்படம் ஒதுங்கி இருந்தது. முதல் முதலாகப் படங்களை மாட்டியபோது மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் ஆகியவர்களின் குழுவில் பிரதானமாக கூர்மையான விழிகளோடு இருந்த ஸ்டாலின் படம் இருந்தது. இப்போது சுவரில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு, ஏ.கே.கோபாலன், பி.சுந்தரையா, பி.கிருஷ்ணபிள்ளை, வயலார் நினைவு மண்டபம் போன்ற படங்கள்…
Read more »

செய்யுள் எழுதித்தான் ஆகவேண்டும் என்று உச்சி மயிர் சிலிர்த்து நின்றால் வசனமாக அதைச் செய்து விடும்

By |

செய்யுள் எழுதித்தான் ஆகவேண்டும் என்று உச்சி மயிர் சிலிர்த்து நின்றால் வசனமாக அதைச் செய்து விடும்

சென்னை – விஸ்வரூபம் நாவலில் இருந்து – 1 (ஏப்ரல் 8 1904 சோபகிருது பங்குனி 27 வெள்ளி) மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய, பூவுலகம் ஒரு குடைக்கீழ் அடக்கி ஆளும் சக்ரவர்த்திகள். சக்ரவர்த்திகளின் பிரதானியாக வீற்றிருந்து இந்த பாரத பூமியின் திலகமான மதராஸ் பட்டணத்தையும் அதையொட்டி விஸ்தாரமாகப் பரந்து விரிந்த தட்சிணப் பிரதேசமான நல்லுலகத்தையும் உய்விக்க வந்த சாட்சாத் மகாவிட்டுணு அவதாரமான கவ்னர் துரையவர்கள். இந்த மேலோரின் பாதாரவிந்த கமலங்களில் தெண்டனிட்டு, மதராஸ் பட்டணம் மயிலாப்பூர்…
Read more »

நீங்க எத்தனை காலமா தேவ ஊழியம் செஞ்சுக்கிட்டிருக்கீங்க. கிறிஸ்துநாதர் மாதிரி ப்ராக்டிகல் ஆக எதாவது எங்களுக்கு சொல்லுங்க ஃபாதர்

By |

An excerpt from the translation done today போப்பாண்டவர்கள். போப்பாண்டவர்கள். பிலாத்தோஸ் பாதிரியார் வசித்த சர்ச் மேல்தளத் தாழ்வாரச் சுவரில் வரிசை வரிசையாகப் பல போப்பாண்டவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. முதல் படம் அப்போஸ்தலரான புனித பத்ரோஸ் என்ற பேதுருப் புனிதரின் ஓவியம். அடுத்து முதல் போப்பாண்டவர்களின் சிறு ஓவியங்களைச் சேர்த்து உருவாக்கிய பெரிய படம். பதிமூன்றாம் லியோ போப்பாண்டவரின் படத்திலிருந்து தொடங்கி, மற்ற ஓவியங்கள் பெரியதாக இருந்தன. பதினொன்றாம் ப்யூஸ் ஓவியத்தோடு போப்பாண்டவர்களின் படங்கள் முடிந்தன….
Read more »

ஒரு தடவை, சொர்க்கத்தில் இருக்கும் பிதாவே சொல்லு. அதுதான் பிராயச்சித்தம்

By |

Excerpts from translation y’day “சொல்லு ஜெசிக்கா”, பாவமன்னிப்புக் கூண்டின் உள்ளே இருந்து பிலாத்தோஸ் பாதிரியார் சொன்னார். ”என் சரீரத்தில் பாவம் நடந்துச்சு” “ஙூம்” “எனக்கு பெரிசா பிராயச்சித்தம் சொல்லுங்க சாமி”. “என்ன பாவம் செஞ்சே ஜெசிக்கா?” “நாலஞ்சு மாசம் முந்தி நான் டியூஷன் படிக்க மலாக்கா ஹௌசில் புஷ்பாங்கதன்மாஸ்டர் ரூமுக்கு போயிருந்தேன். நான் கணக்குலே வீக்”. “அதனாலே?” “புஷ்பாங்கதன்மாஸ்டர் என்னைத் தொட்டார்”, நான் சொன்னேன். பிலாத்தோஸ் பாதிரியார் மௌனமாக இருந்தார். “முதல்லே கால் விரலைத் தொட்டார்….
Read more »