Archive For அக்டோபர் 30, 2023

மருந்துப் பூப்பூத்த கோகர் மலை – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

By |

மருந்துப் பூப்பூத்த கோகர் மலை – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் சகல இன சஞ்சீவனி பெருமருந்து தயாரிக்க மூலிகை தேடியலைந்த கதையிலிருந்து இங்கே கொஞ்சம் போல. அப்போது சட்டென்று அவருடைய நாற்பரிமாணக் கூறுகளைச் சற்றே மாற்றி அரூபனாக்கி அவரை பேழையிலிருந்து இறக்கினான் குழலன். பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து நீலனைக் கண்ணிமைக்கும் முன் பேழையில் இட்டதும் அவன் தான். பாவம் அந்தப் பிரதி நீலன். இவர் போல இருப்பதால் இங்கே அழைத்து வரப்பட்டு உயிரும் நீத்தார் அந்த அப்பாவி மனிதர். இப்போது…




Read more »

கரப்பு அதிகாரிகள் தூங்கி வழிந்த கூட்டம்

By |

கரப்பு அதிகாரிகள் தூங்கி வழிந்த கூட்டம்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து அத்தியாயம் 36இல் இருந்து ========================================================================================== நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார். கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது. நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம்…




Read more »

என் புது குறுநாவல் ‘சிவிங்கி’யிலிருந்து ‘பின்னே ஓடும் ஆமைகள்’

By |

என் புது குறுநாவல் ‘சிவிங்கி’யிலிருந்து ‘பின்னே ஓடும் ஆமைகள்’

சொல்வனம் இலக்கிய இணைய 305ஆம் இதழில் இப்போது முழுமையாகப் பிரசுரமாகியுள்ள இரண்டாம் அத்தியாயம் – சிவிங்கி குறுநாவலில் இருந்து குகைச் சிறப்பு மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த, கூடுதல் வசிப்பிடத் தேவைக்காகக் கொஞ்சம்போல் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை இருப்பிடம். இரண்டு நூறுகோடி மனித இனத்தோரும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி…




Read more »

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து ஒரு நினைவின் ஊர்வலம்

By |

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து ஒரு நினைவின் ஊர்வலம்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல்களின் வரிசையில் நான்காவதாகும். அதிலிருந்து ஒரு சிறு பகுதி இறக்கி விட்டுக் காத்திருந்த பஸ் கண்டக்டரைப் போகச் சொல்லிக் கையசைத்தபடி வலது புறமாகத் திரும்பி நடந்தான் அவன். வீட்டு வாசல் இருட்டில் இருந்தது. உள்ளே மங்கின வெளிச்சத்தில் அம்மா குரல் நவ்ய நவ்ய கத்யா என்று லாவணிப் பாட்டாக மேலெழுந்து வந்தது. சாதத்தை முழுங்கிட்டுப் பாடேண்டீ. பாட்டு எங்கே ஓடியா போகும்? அவன் தான் போய்ட்டான். ஓடினானோ நொண்டிக் காலாலே கெந்திக் கெந்தி…




Read more »

இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் – புது குறுநாவல் ’சிவிங்கி’யில் இருந்து

By |

இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் – புது குறுநாவல் ’சிவிங்கி’யில் இருந்து

சொல்வனம் இணைய இலக்கிய இதழில் சிவிங்கி குறுநாவல் முழு வடிவில் பிரசுரமாகிறது தேள்கள் ஆயிரம் ஆண்டு முன்பு வரை இந்தக் காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஆட்சி செய்து வந்தன. பொது ஆண்டு 5867இல் அணு ஆயுதப் பிரபஞ்சப் போரில் அவை அழித்தொழிக்கப்பட்டன. விதிவிலக்கான உயிரினம் தேளினத்தோடு கூட்டணி அமைத்திருந்த கரப்புகள் அணு ஆயுதப் போரில் தப்பிப் பிழைத்து அடுத்த பல ஆண்டுகள் தலைமறைவாயிருந்தன. பொது ஆண்டு 6000-வகை காலத்தில் அவை ஆரோக்கியமும், எதிர்ப்பட்டதை எல்லாம் தகர்க்கும் வெறியுமாக குகை…




Read more »

என் புது குறுநாவல் ‘சிவிங்கி’யின் தொடக்கத்தில் இருந்து

By |

சொல்வனம் இணைய இதழில் தொடங்கியிருக்கும் என் புது குறுநாவல் சிவிங்கியில் இருந்து முன்னுரை குறுநாவல் என்ற இலக்கிய வகை அருகி வருவதாகவும் எதெல்லாமோ குறுநாவலாக எழுந்து வருவதாகவும் தகைசால் சான்றோர் சதா அங்கலாய்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததே. இக்குறை சென்றொழிய சிவிங்கி என்ற பெயரிட்டு ஒரு நீண்ட கதை எழுதலானோம். வியாசம் போல வடிவெடுத்த இதனை ஆன்றோரும் சான்றோரும் இளையோரும் நீட்புனைகதையாக வாசித்து மனநிறைவடைவது திண்ணம். காவல் தெய்வ வழிபாடு தும்பிக்கை கணபதி திருப்பாதமே கதி. எண்ணமும் எழுத்தும்…




Read more »