பெரு நாவல் ‘மிளகு’ – 1189 பக்கங்கள் – வாசிக்க 49 மணி, 32 நிமிடங்கள்

Awesome! Fascinating!
எழுதுவது தவமோ என்னமோ, வாசிப்பதையும் தவமாக நிகழ்த்தும் வாசக நண்பர்களை அளித்த இறைவனுக்கு நன்றி.
திருமதி உமா ஸ்ரீதரன் அவர்கள் 1189 பக்கங்கள் கொண்ட ‘மிளகு’ நாவலை 3 நாளில் வாசித்து முடித்திருக்கிறார்.
மற்ற அலுவல்களுக்கு இடையே 49 மணி நேரமும் சில மணித்துளிகளும் செலவழித்து இந்த வாசிப்பை முழுமையாக்கியுள்ளார்.
—————————————————————————————————
மிளகு. புத்தகத்தை இஷ்டப்படி எல்லாம் வைத்துக் கொண்டு படிக்க முடியாது. ஒரு மேஜையில் வைத்து மரியாதையாக படிக்க வேண்டும். அவ்வளவு கனம்.1189 பக்கம். இப்பெரு நாவலானது இரு வேறு தளங்களில் / பரிமாணங்களில் / காலவெளிகளில் பயணிக்கிறது.முதலில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்து பிறகு ராக்கெட் வேகம் தான். நாவலை புரிந்து கொள்ள கேரளத்தின் கோழிக்கோடு – மங்களூர் – கோவா நிலப்பரப்பு (topography) பற்றி அட்லஸை பார்த்து விட்டு படிப்பது சாலச்சிறந்தது. சரித்திரத்தில் மறக்கப்பட்ட மிக முக்கியமான ஆளுமைமிக்க, சொந்த உறவினர்கள் சதியால் வீழ்த்த பட்ட மிளகு ராணி சென்னபைராதேவி, தத்துபுத்திரன் நேமிநாதன், முக்கியமாக போர்ச்சுகீசிய பிரதிநிதியாக ஸெனொர் இம்மானுவல் பத்ரோ, சதி வலை பின்னும் மிட்டாய் கடை ரோகிணி, காலவெளிச்சுழற்சியில் மாட்டிக்கொண்டு 500 வருடங்கள் பின்னால் எறியப்பட்ட பரமன் என்கிற பரமேஸ்வரி ஐயர், அவர் மகன் திலீப் ராவ்ஜி….
கதை களன் ஹொன்னாவர், டில்லி, கோழிக்கோடு, மால்பே லண்டன் அம்பலப்புழை என சுற்றி சுழல்கிறது. (அம்பலப்புழை கோவிலுக்கு போய் வந்தேன் என்றால் கிருஷ்ண தரிசனம் ஆயிற்றா என்று கேட்கமாட்டார்கள்,எங்கே எனக்கு பாயசம் என்று தான் கேட்பார்கள். அவ்வளவு பிரபலம் அம்பலப்புழை பாயசம். )
மிளகு வர்த்தகம் மூலம் கொழிக்கும் நாடு, அவர்களுக்கு நட்பான சமோரின் அரசர், மிளகு ராணி சென்னபைராதேவியின் வலது கையான மிங்கு அவள் கணவரும் வைத்தியரும் ஒற்றருமான பைத்யநாத வைத்தியர், ராணியின் நெருங்கிய தோழி உள்ளால் ராணி அப்பக்கா தேவி. இத்தனை கதை மாந்தர்கள், இந்து – சமண மதப்பிரச்சனைகள், 1560களின் மக்கள் அவர்களின் வாழ்க்கை உணவு முறை…..இவற்றை ஆராய்ந்து தவறில்லாமல் எழுத்தில் வடித்து, தற்கால கதைகளனுக்கு திரும்பி, இரண்டையும் இணைத்து., எவ்வளவு பெரிய வேலை, எத்தனை ஆராய்ச்சி, எத்தனை குறிப்புகள் எடுக்கவும் அடுக்கவும் கோர்வையாக ஒரு நாவலாக கொண்டு வர, hatsoff EraMurukan ji. உங்கள் உழைப்பு மகத்தானது. கொஞ்சம் தவறினாலும் நாவல் சுவாரஸ்யம் இழந்து விடும் அபாயம். மிகவும்

அருமையான கதை நடை. வாழ்த்துக்கள்

சார். இவ்வளவுஅருமையானமிகவும் பெரிய விஷயங்கள் கொண்ட இப்பெருநாவலை குறுகிய காலத்தில் எங்களுக்கு அளித்தமைக்கு மிகவும் நன்றி.

 ————————————————————————————-
மிளகு படித்து முடித்து விட்டேன். Ramjee அவர்களுக்கு. படித்து முடிக்க, வேலை நேரம் போக, மிகச் சரியாக 49 மணி, 32 நிமிடங்கள் 28 நொடிகள் ஆயிற்று. மொபைலில் உள்ள கடிகார ஆப் இதற்குத்தான் உபயோகப் பட்டது.
2 comments on “பெரு நாவல் ‘மிளகு’ – 1189 பக்கங்கள் – வாசிக்க 49 மணி, 32 நிமிடங்கள்
  1. ANBARASAN KUPPUSAMY சொல்கிறார்:

    Hi,
    When will it be available in Kindle?
    Or any Digital Copy I can buy?

    Thanks,
    Anbu

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன