Monthly Archives: September 28, 2013, 11:00 am

மனிதம் தொலைத்த கார்ப்பரேட்டுகள்

கார்ப்பரேட் கலாச்சாரத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஓர் அம்சம் மனிதம்.

காலை ஒன்பது மணிக்கு வாக்-இன் நேர்காணல் என்று கூப்பிடுவார்கள். உங்களுக்குத் தகுதி இருப்பதாக முன் வரிசை நேர் காணுகிறவர்கள் (பெரும்பாலும் கத்துக்குட்டிகள்) கருதினால், திருப்பதியில் அடுத்த கூடத்துக்கு அனுப்புவது போல் அனுப்பப் படுவீர்கள். அங்கே காத்திருந்து முதல் கட்ட நேர்காணல். அது முடிந்து அடுத்த கூடம்.

அதற்குள் மதியம் ஆகி விடும். நேர்காணுகிறவர்கள் உணவுக்குப் போக, நேர்கண்டு வேலை பெற வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கூட்டத்துக்கு யாரும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள் – ‘போய் சாப்பிட்டு வாங்க.. ரெண்டு மணிக்கு மறுபடி ஆரம்பம்’. இதைச் செய்ய வேண்டிய மனிதவளத் துறை (ஹெச்.ஆர்) பல் குத்திக் கொண்டு ஃபார்ம் அடுக்கிக் கொண்டு சாப்பாட்டுப் பொட்டலத்தை எதிர்பார்த்தபடி இருக்க, முன்னால் வரிசையாக ஒரு பட்டினிப் பட்டாளம் – வந்தவர்கள்.

எனக்கு வேண்டிய் இளம் பெண் ஒருத்தி, இன்று காலையில் ஒரு குவளை பச்சைத் தண்ணீர் குடித்ததோடு இப்படியான நேர்காணலுக்கு வந்திருக்கிறாள். இப்போது மணி மாலை நாலு. ஒரு கவளம் சோறு சாப்பிடவில்லை. எந்த நேரத்திலும் அழைக்கப்படுவாள் இரண்டாம் சுற்று நேர்காணலுக்கு என்று அமர்த்தி வைக்கப் பட்டிருக்கிறாள். அவள் கணவன் பிஸ்கட் பொட்டலங்கள், பழம் இவற்றோடு கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் மனைவிக்காகக் காத்திருக்கிறான் (உள்ளே நுழைந்து மேலே போக அனுமதி இல்லை).

இன்னும் எவ்வளவு மணி நேரம் காக்க வேண்டுமோ?

மனிதம் தொலைத்த கார்ப்பரேட்கள் இருந்தென்ன தொலைந்தென்ன?
————————————–
ஜ.ரா.சு (பாக்கியம் ராமசாமி) சார் ‘கடகடன்னு படிங்க, கலகலன்னு சிரிங்க’ என்ற அவருடைய புதுப் புத்தகத்தை வாழ்த்துகளோடு அனுப்பியிருக்கிறார்.

அருமை நண்பர் நேசமிகு ராஜகுமாரன் இன்று தாமதமான காலை நடையின் போது ‘ஓமந்தூரார் – முதல்வர்களின் முதல்வர்’ என்ற தன் புது நூலை அன்போடு அளித்தார். விகடன் வெளியீடு. வந்த பத்து நாளிலேயே 3000 பிரதி விற்ற மகிழ்ச்சியில் ஒரு சுற்று பெருத்திருக்கிறார். 300000 ஆகட்டும் அது.

நாளை மறுநாள் கோழிக்கோடு பயணத்தில் படிக்க நல்ல நூல்கள் கிடைத்திருக்கின்றன..
—————————————————–
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம்-

மேம்பொருள் போகவிட்டு, மெய்மையை மிகவுணர்ந்து
ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கி
காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் அரங்கமாநகருளானே

காம்பறத் தலை சிரைத்தல் என்றால் முழுமொட்டையா? அதுக்கும் மேலே தத்துவார்த்தம் உண்டா?

மொட்டையடிச்சுக்கிட்டு உன் காலடியிலே இருக்கற சோம்பேறித்தனமும் பிடிக்குமோன்னு பெருமாளைக் கேட்கிறார் ஆழ்வார்.

பெருமாள் திருவடியிலே போய்ச் சேர்ந்த பிற்பாடு, மழிக்க, நீட்ட, பல் துலக்க, குளிக்க என்ன அவசியம்?
—————————————————–
ஆங்கில இந்து பத்திரிகையில் Kellog’s விளம்பரத்துக்காக ஒரு பெரிய கோதுமைக் கதிரின் புகைப்படமும் நடுவில் சிறிய பிளாஸ்டிக் கவரில் ரெண்டு தேக்கரண்டி கோதுமையும் ஒட்டி வைத்துக் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி, பிளாஸ்டிக் உபயோகத்துக்கு எதிராக இந்து பத்திரிகை குரல் கொடுத்த நினைவு…

சரி, ரெண்டு ஸ்பூன் கோதுமையை வேலை மெனக்கெட்டு அரைத்து ஐந்து ரூபாய் காசு சைசில் ரொட்டி சுட்டுத் தின்ன உத்தேசமிலலை. பேப்பர் கவரில் ஒரு கை கெல்லாக்ஸ் சீரியல்ஸையே வைத்து அனுப்பியிருக்கலாமே..

(தமிழ் தி இந்துவோடு நெல் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்த்தவர்கள் சொல்லவும்)
——————————————-
மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு – ஒன்பது தொகுதிகள் என்ற அரிய நூல் தொகுப்பு திரும்ப வெளியாகிறது என்று நண்பர் பா.ராகவன் தகவல் பகிர்ந்துள்ளார்.

வாங்கிப் படிக்க ஆசைதான். ஆனால், வீட்டில் இனிமேல் புத்தகம் வைக்க இடமில்லை. ‘ஊருக்கு உரைப்போம்’ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த என்று இரண்டு வாரமாகப் புத்தகங்களைக் கொடுத்து அனுப்புகிறார்கள். அறிமுகப்படுத்திய புத்தகங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு விட்டேன். இன்னும் நாலு தற்போது கைவசம் உண்டு. இனியும் எதிர்பார்க்கலாம். நிகழ்ச்சி ஒளிப்பதிவு முடிய முடிய அந்தப் பிரதிகளையும் பகிரத் திட்டம். .

நூல் அறிமுகம் என்பதால் ஒரு கடமை கருதிப் படிக்க வேண்டிய நூல்களும் வந்து சேர்கின்றன. நிச்சயம் எந்தக் குறையையும் எந்தப் புத்தகத்திலும் சுட்டிக் காட்ட மாட்டேன். ஆனால் நிறைவளிக்கும் விஷயம் இருந்தால் எடுத்துச் சொல்வது கடமை என்றே கருதுகிறேன்.

யாருக்கு எந்தப் புத்தகம் பிடிக்கும் என்று தேடி எடுத்துப் போய் அளிப்பது சுவாரசியமான வேலைதான். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ‘தீட்சிதர் கதைகள்’ புத்தகத்தை நண்பர் கிரேசி மோகனின் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்களோடும், கண்ணதாசனின் கட்டுரைகளை அலுவலக நண்பர் கணேசன் சுப்பிரமணியனோடும் பகிர்ந்து கொண்டேன். மற்றவை? பேஸ்புக் எதுக்கு இருக்காம்?
——————————————————————–
நீல பத்மநாபன் – 75

’நீல பத்மநாபனுடன் ஒரு நாள்’ ஆவணப் படம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இன்று மாலை திரையிடப்பட்டது.

வழக்கமான ஆவணப்பட பாணியில் இருந்து வேறுபட்டது. உரையாடல்களை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

நீல பத்மநாபனின் ஆளுமை படம் முழுக்க நிறைந்து நிற்கிறது.

‘நான் இவ்வளவு பேசினேனா’ என்று படம் முடிந்தபோது ஆச்சரியப்பட்டார் நீல.ப. அவரைப் பேச வைத்தது முதல் வெற்றி.

This is the first cut and runs for 62 minutes. We still have an hour or so of footage left. The final cut with inserts of story reading by the author himself and other visuals will be ready soon.

படம் பற்றியும், விழா பற்றியும் விரிவாகப் பின்னர் சொல்கிறேன்.

ண்பர் பி.கே.சிவகுமார் ஒரு சுவாரசியமான கருத்தை முன்வைக்கிறார்.

பாரதி வைணவ பக்தி இலக்கியத்தில் காட்டிய அக்கறை குறைவென்று தான் எனக்குப் படுகிறது. சைவ பக்தி இலக்கிய திருவாசகமும் திருச்சாழலும் அவர் கதைகளில் வரும். நம்மாழ்வார் பற்றித் தன் பகவத்கீதை மொழிபெயர்ப்பில் சொல்வது தவிர ஆழ்வார்கள் பற்றி அவர் அதிகம் பேசவில்லை.

பாரதி பற்றி அவருடைய நண்பர்-சீடர் குவளைக் கண்ணன் (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) 1938-ல் ‘ஹிந்துஸ்தான்’ பற்றி எழுதிய கட்டுரையில் இருந்து -

//ஒரு நாள் பாரதியார் “கிருஷ்ணா, இந்த நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள் சேர்ந்து பாடியது?” என்று கேட்டார். அதற்கு நான், “பதினோரு ஆழ்வார்களும் ஆண்டாளும் திருவரங்கத்தமுதனாரும் சேர்ந்து பாடியது நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” என்றேன்.

“பன்னிரண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா? நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!” என்றார். //

http://www.mahakavibharathiyar.info/kuvalai_kannan.htm

’நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ பற்றி நண்பர் டி.ஆர்.சந்தானகிருஷ்ணன்

Tr Santhanakrishnan shared a link.
19 September
நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை ரசிப்பது ஒரு சுகம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் சாவி எழுதிய “இவர்கள் இப்படித்தான்” படித்ததுண்டா? பால்காரரிளிருந்து வீடு பேருக்கும் வேலைக்காரி வரை அனைவரின் குணாதிசயங்களையும் அழகுற எழுதி நம் மனதில் ஒரு நேசம் கலந்த புன்னகையை வளர்த்து விடுவார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதிய “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” இதே வகையைச் சேர்ந்தது தான். பத்தணா அய்யங்காராக மருவிய பத்மநாப அய்யங்காரை யாரும் மறக்க முடியாது. அப்பாவின் எட்டு நாடியும் குளிர்ந்து இருக்கும்போது சைக்கிள் கேட்கச் சொல்லிய கோதைப் பாட்டியையும் கூடத்தான். தேவதைகளைப் பற்றி படிக்கும்போது எங்கள் பிருந்தாவனம் தெரு தேவதைகளை நினைவுப்படுத்தியதால் புத்தகம் எங்கள் மனிதர்களைப் பற்றி எழுதியதைப் போலவே தோன்றியது.

எதையோத் தேடப்போய் எதுவோ கிட்டியது போல ராஜாஜியின் வியாசர் விருந்து படிக்க ஆசைப் பட்டு விஸ்வரூபம், அரசூர் வம்சம் வழியாக 40, ரெட்டைத் தெரு கிடைத்தது. இரா முருகன் அரசூர் வம்சத்திலிருந்து ஆரம்பிக்கச் சொன்னார். அவரது இரசிகர் (எனது பால்ய நண்பர்) இரகுநாதன் ரெட்டைதெருவிலிருந்து ஆரம்பிக்கச் சொன்னார். இரகுப் பேச்சைத் தான் கேட்டேன்.

மிக ஆருமையானப் புத்தகம். நம் எல்லார் வாழ்விலும் ரெட்டைதெரு ஒன்று இருக்கிறது. நாமும் அரை நிஜாரை நழுவாமல் பிடித்துக்கொண்டு குருவி லேகியம் விற்பவர் பேச்சை பதிமூன்று வயதின் ஆர்வத்தோடு கேட்டிருந்திருக்கிறோம். நமது நண்பர்கள் கூட்டத்திலும் ஒரு “குண்டு ராஜு” உண்டு. நாம் உடல் நலமின்றி பள்ளிக்கு போக முடியவில்லை என்று சொன்னால் ஒரு இன்ஸ்பெக்ஷன் உண்டு.

இரா முருகனின் எழுத்து கொஞ்சம் நேயம், கொஞ்சம் குறும்பு, நிறைய நிஜம் கலந்து நம்மை நமது கடந்த காலங்களுக்குக் கூட்டிச் செல்கிறது. சுஜாதா நம்மை ஒரு மிடில் கிளாஸ் அய்யங்கார் சூழலுக்குக் கூட்டிச் சென்றார். இரா முருகன் நம்மை நம் சூழலுக்கே கூட்டிச் செல்கிறார்.

சுஜாதாவின் மறைவை ஈடு செய்ய ஒரு புதிய படை புறப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தப் படையின் முன்னோடியாக இரா முருகன் நடக்கிறார்.

“40, ரெட்டைத் தெரு” வாங்கிப் படியுங்கள்.

(நன்றி டி.ஆர்.எஸ் – இரா முருகன்)

நீல பத்மனாபனைச் சந்திக்க வந்த கமல்ஹாசன்

நீல பத்மனாபன் – 75

23 செப்டம்பர் 2013 திங்கள்

விழா அமைப்பு – சென்னை பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை

இடம் பல்கலைக்கழக பவளவிழா மணி மண்டப அரங்கு

நேரம் மாலை 3 மணி

நிகழ்ச்சி நிரல்
——————-
பேச்சாளர்கள் –

நிகழ்வு – ‘நீல பதமனாபனுடன் ஒரு நாள் – ஆவணப்படம் திரையிடல்’

கருத்தாக்கம், இயக்கம், உருவாக்கம் கமல்ஹாசன்; உதவி – இரா.முருகன்

‘கலாகௌமுதி’ வாரப் பத்திரிகையில் (மலையாளம்) இந்தச் சந்திப்பு – ஆவணப்படத் தயாரிப்பு பற்றி நண்பர் எழுதிய கட்டுரை.

மொழியாக்கம் இரா.முருகன். (மொழியாக்கம் பகுதி மட்டும்)

நீல.பத்மனாபனைச் சந்திக்க வந்த கமல்ஹாசன் (கலாகௌமுதி)
—————————————————————————-
வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்தவர். பாரதியார் மாதிரி ரெண்டு பக்கமும் முறுக்கிய மீசை. சட்டை காலரோடு எப்போதும் தாடி சிநேகிதமாக உரசிக் கொண்டிருக்கும். நிதானமான நடை. திருவனந்தபுரத்தில் கிள்ளிப்பாளையம் பைபாஸில் இருக்கப்பட்ட வீட்டில் இருந்து இறங்கி சாலைக் கடைத்தெரு வழி ஸ்ரீகண்டேசுவரம் போய் முக்கண்ணனான பகவானைத் தொழுது அருகிலேயே இருக்கும் துர்க்கா தேவியையும் கும்பிட்டு விட்டு அவர் வீட்டுக்குத் திரும்பும்போது சாயந்திரம் விடைபெற்றுப் போயிருக்கும்.

இந்தப்படிக்கு ஓர் இலையைக் கூட வேதனைப் படுத்தாமல் நடக்கவும், ஓர் எறும்பைக் கூட தொல்லைப்படுத்தாமல் வாழவும் ஆசைப்படுகிற நீல.பத்மனாபனை சந்திப்பதற்காக மட்டும் ஒரு மகாப் பிரபலமானவர் அவர் வீட்டுக்கு வந்தார். சாட்சாத் கமல்ஹாசன்!

காற்றும் கிளியும் கூட அறியாமல், நதிக்கும் கடலுக்கும் கூடத் தெரியாமல் கமல்ஹாசன் திருவனந்தபுரம் வந்தார். திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்து நட்சத்திர ஹோட்டலில் ராத்தங்கினார். காலையில் நீல.பத்மநாபனின் வீட்டுக்கும் வந்து சேர்ந்தார். யாரும் கமல்ஹாசன் வந்ததைப் பார்க்கவில்லை. அவர் வருகையைப் பற்றி யாருக்கும் தெரியாது.

எதற்காக நீல.பத்மநாபனை சந்திப்பதற்காக மட்டும் கமல் திருவனந்தபுரம் வந்தார்?

கமல்ஹாசனுக்கு நீல.பத்மநாபனோடு நீண்ட நாளாகவே பழக்கம் உண்டு. நல்ல வாசகர் அவர். எழுத்தாளரும் கூட. தமிழ் இலக்கியத்தை ஆர்வத்தோடு படிப்பதையும் புதிய சிந்தனைப் போக்குகளை அதே ஆர்வத்தோடு அவதானிப்பதையும் வழக்கமாகக் கொண்டவர்.

க.நா.சுப்ரமண்யம், தி.ஜானகிராமன், நீல.பத்மநாபன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பி வாசிக்கும் நடிகர் கமல். சாகித்ய அகாதமி நீல.பத்மநாபனைப் பற்றித் தயாரித்த ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தான் நீல பத்மநாபனும் கமலும் முதல் முறையாக நேருக்கு நேர் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

ஆவணப் படத்தின் வெளியீட்டு விழாவில் சொற்பொழிவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட எழுத்தாளர் நீல.பத்மநாபனை முன்னிறுத்திக் கௌரவிக்க வேண்டியது அவசியம் என்று கமல் தன் உரையில் குறிப்பிட்டார்.

எழுத்தாளனின் காலம் முடிந்த பிறகு இல்லை, உயிரோடு இருக்கும்போதே அவனுடைய எழுத்தின் மேன்மைகளைப் பாரட்ட வேண்டுமென்றும், அவனைத் தக்க விதத்தில் கௌரவிக்க வேண்டும் என்றும் கமல் பேசினார். இருபது நிமிட நேர ஆவணப்படத்தை முழுவதும் பார்த்து ரசித்த பிறகே கமல் பேச எழுந்தார்.

நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலைத் தமிழ்த் திரைப்படமாக இயக்கும் கௌதமன் தான் சாகித்ய அகாதமி தயாரித்த நீல.பத்மநாபன் பற்றிய ஆவணப் படத்தின் இயக்குனர். தமிழில் பிரபலமான இயக்குனர் அவர்.

கமலோடு நீல.பத்மநாபனுக்கு ஏற்பட்ட நட்பு மெல்ல ஆழமடைந்தது. நீல.பத்மநாபனின் இளைய மகள் லண்டனில் வசிக்கிறார். மகளுடைய இரண்டாம் பிரசவ நேரம். முதல் பிரசவம் போல் அதுவும் சிசேரியனாக இருக்கும் என்று எதிர்பார்த்து அந்த நேரத்தில் மகள் அருகில் தான் இருக்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்த நீல.பத்மநாபனின் துணைவியார் லண்டன் போகத் தீர்மானித்தார். அவர் லண்டன் போன பிற்பாடு தனியாக இருக்க வேண்டியிருக்கும் என்பதால் தானும் மனைவியோடு லண்டன் போக முடிவு செய்தார் நீல.பத்மநாபன். அவர் லண்டனில் போய் இறங்கியபோது தான் உலகத்தையே நடுக்கிய லண்டன் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதன் தீவிரத்தை அருகில் இருந்தே உணர நீல.பத்மநாபனுக்கு வாய்ப்புக் கிட்டியது.

வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாள் கழித்து கண்ணூரில் இருந்து ஓர் இளைஞர் லண்டனின் இருந்த நீல.பத்மநாபனைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் நீல.பத்மநாபனின் லண்டன் தொலைபேசி எண்ணை சிரமப்பட்டுத்தான் கண்டுபிடித்தாராம். கமல்ஹாசன் எழுதிய தமிழ்க் கவிதையை நீல.பத்மநாபன் மலையாளத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கமல் விரும்புகிறார் என்பதை அவர் தெரிவித்தார். சினிமா நட்சத்திரம் எழுதிய கவிதை இல்லையா? பார்க்கலாம் என்று நீல.பத்மநாபன் பட்டும் படாமலும் பதில் சொன்னார்.

விரைவில் நீல.பத்மநாபனின் லண்டன் விலாசத்துக்கு தமிழ்ப் பத்திரிகை ஆனந்த விகடனின் பிரதி ஒன்று தபாலில் வந்து சேர்ந்தது.

விகடனில் கமல் எழுதிய கவிதை நீல.பத்மநாபனுக்குப் பிடித்திருந்தது. லண்டன் குண்டுவெடிப்பு பற்றிய கவிதை அது. குண்டு வெடிப்பு நிகழ்ந்து சில மணி நேரத்துக்குள் எழுதிய படைப்பு அது. லண்டனில் அந்த சம்பவம் நிகழ்ந்து தான் நேரடியாக அனுபவித்ததை இன்னும் தீவிரத்தோடு தொலைவில் இருந்து கமல் கவிதையாக்கியிருந்த விதம் நீல.பத்மநாபனுக்கு ஆச்சரியமளித்தது. ஆழமான பொருள் கொண்ட அக்கவிதை அவரைக் கவர்ந்தது.

கவிதைக்கு ஒரு குணமுண்டு. தேவையில்லாத சொற்களையும் வாக்கியங்களையும் தவிர்த்து விடலாம். எழுத்து மொழியைக் கூர்மைப்படுத்தக் கவிதை எழுதுகிற வழக்கம் நீல.பத்மநாபனுக்கு உண்டு. ‘கவிதை தீப்பொறியாக இருக்க வேணும். க.நா.சு, நகுலன் கவிதைகள் போல’ என்கிறார் அவர்.

கமல்ஹாசன் எழுதிய தமிழ்க் கவிதையை விரைவில் மொழிபெயர்த்து கண்ணூர் இளைஞருக்கு அனுப்பி வைத்தார் நீல.பத்மநாபன். இரண்டு வாரங்கள் அந்த மொழிபெயர்ப்பு ஒரு மலையாள வாரப் பத்திரிகையில் பிரசுரமானது. ஞானபீட விருது கிட்டிய மகிழ்ச்சி அப்போது கமல்ஹாசனுக்கு ஏற்பட்டது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த தமிழ் எழுத்தாளரான நீல.பத்மனாபனால் தன் கவிதை மொழிபெயர்க்கப்பட்டது விலை மதிக்க முடியாத கௌரவம் தரும் நிகழ்ச்சியாகும் என்று கமல்ஹாசன் நீல.பத்மநாபனிடம் தெரிவித்தார்.

‘எனக்குத் தெரிந்த மலையாளத்தில் நான் மொழிபெயர்த்தேன். அவ்வளவுதான். கவிதை எழுதியவர் கமல்ஹாசன். அதற்குண்டான எல்லாப் பெருமையும் அவருக்கே உரியது’ என்றார் நீல.பத்மநாபன். மலையாள மொழிபெயர்ப்பைப் படித்த பல முக்கியமான மலையாள எழுத்தாளர்கள் கமல்ஹாசனோடு தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டினார்கள்.

லண்டனில் இருந்து பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் நீல.பத்மநாபன் சென்னைக்குத் திரும்பினார். அவருடைய ஒரு மகள் சென்னைவாசி. இரண்டு நாள் அவர் இல்லத்தில் இருந்த பிறகு நீல.பத்மநாபன் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். வீட்டுக்குள் நுழையும்போதே தொலைபேசி அழைப்பு மணி. கமல்ஹாசன் தான்.

நீங்கள் சென்னைக்கு வந்தும் நாம் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று ஆதங்கத்தோடு சொன்னார் கமல். நீல.பத்மநாபனின் எல்லா நாவல்களயும் தான் படித்திருப்பதாகவும் நேரில் சந்தித்து சிறிது நேரமாவது உரையாட பெருவிருப்பம் உண்டென்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் வரும்போது நீல.பத்மநாபன் வீட்டுக்கு வந்து அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். சினிமாக்காரர் சொல்லாயிற்றே என்று நீல.பத்மநாபன் அதை அவ்வளவாக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கனிமொழி எழுதிய கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்குக் கமல்ஹாசன் திருவனந்தபுரம் வந்தும் நீல.பத்மநாபனை சந்திக்கவில்லை. நீல.பத்மநாபனும் அவருக்கு தொலைபேசி அழைக்கவில்லை.

இதற்கப்புறம் கமல்ஹாசன் யூனிட்டில் இருந்து சிலர் திருவனந்தபுரம் வந்தார்கள். தீபாவளி நேரத்தில் கமல்ஹாசன் பிறந்த நாள் தொடர்பாக விஜய் டி.வி வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் நீல.பத்மநாபன் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். கமல் எழுதிய கவிதைகள் பற்றிப் பேசவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

‘நான் இயல்பாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதைத் தவிர்த்து விடுவேன். தொலைக்காட்சியில் பேட்டி காண்கிறவர்கள் அவர்கள் பேட்டி எடுக்கும் எழுத்தாளர் எழுதிய எதையுமே படிக்காமல் அபத்தமாகக் கேட்கிற கேள்விகளைக் கேட்டால் தற்கொலை செய்து கொள்ளத் தோன்றும்’ என்கிறார் நீல.பத்மநாபன்.

இரா.முருகன் தமிழில் குறிப்பிடத் தகுந்த ஓர் எழுத்தாளர் ஆவார். முருகனின் படைப்புகள் நீல.பத்மநாபனுக்குப் பிடித்தமானவை. இரா.முருகன் ஒரு கம்ப்யூட்டர்காரர். நல்ல சம்பளம் வாங்குகிற அதிகாரி. எழுத்தில் தீராத ஆர்வம் கொண்டவர். இரா.முருகன் நீல.பத்மநாபனை அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து உரையாடிக் கொண்டிருப்பார். இவர்கள் லண்டனில் இருக்கும்போதும் தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்தன.

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு தினம் இரா.முருகன் நீல.பத்மநாபனைத் தொலைபேசியில் அழைத்தார்.

‘மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசனுக்கு ஒரு இணையத் தளம் உண்டு. அதில் உங்களோடு ஒரு கலந்துரையாடலைத் தரவேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அவரே நேரில் வந்து உங்களை பேட்டி காணுவார். அதை அவருடைய யூனிட் வீடியோ படமாகப் பதிவு செய்யும். பேட்டியின் பகுதியாக உங்கள் படைப்பு ஏதாவது ஒன்றை நீங்கள் படிப்பதையும் பதிவு செய்ய உத்தேசம். உங்களுக்கு வசதியான நாள் எது என்று கமல்ஹாசன் விசாரிக்கச் சொன்னார். அந்த தினத்தில் அவர் திருவனந்தபுரம் வந்து உங்களைச் சந்திப்ப்பார்’ என்று இரா.முருகன் சொன்னார்.

இந்தத் தொலைபேசி அழைப்பு நீல.பத்மநாபனுக்கு சரியாகப் புரியவில்லை. பாலு மகேந்திரா போன்ற திரைப்பட இயக்குனர்கள் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பை திரைப்படமாக்குவது போல் தன் படைப்பு ஒன்றை திரைப்படமாகத் தயாரிக்க கமல்ஹாசன் உத்தேசித்திருக்கிறார் என்றும் அது குறித்து விவாதிக்கவே தன்னைக் காண திருவனந்தபுரம் வர விரும்புகிறார் என்றும் நீல.பத்மநாபன் கருதினார். தொலைபேசி உரையாடல் தெளிவில்லாமல் இருந்ததால் அவர் இப்படி நினைத்தார்.

என்றாலும் அந்தத் தொலைபேசி உரையாடலைப் பற்றி திரும்பவும் யோசித்த நீல.பத்மநாபன் இது வேறே ஏதோ விஷயம் என்று புரிந்து கொண்டார். இரண்டு நாள் கழித்து இரா.முருகன் மீண்டும் நீல.பத்மநாபனுக்குத் தொலைபேசினார். மய்யம் இணையத் தளத்தில் மிகப் பிரபலமான தமிழ், மலையாள எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடி அவற்றின் ஒளித் தொகுப்புகளை வழங்கக் கமல் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார் அவர். இதற்காகத் தான் நீல.பத்மநாபனை சந்திக்கக் கமல்ஹாசன் வருகிறார். அவரோடு நானும் வரலாம் உங்களைக் காண என்றார் இரா.முருகன். முருகன் வந்தே ஆகவேண்டும் என்று நீல.பத்மநாபன் பிடிவாதமாகச் சொன்னார்.

மார்ச் நாலாந்தேதி தான் திருவனந்தபுரத்துக்கு வருவதாகக் கமல்ஹாசன் பிறகு அறிவித்தார். திருநெல்வேலியில் ஒரு தமிழ் இலக்கியவாதியை சந்தித்த பிறகு திருவனந்தபுரத்துக்கு வருவதாகச் சொன்னார். இரண்டு நாள் கழித்து கமல்ஹாசன் யூனிட்டில் ஒருவர் நீல.பத்மநாபனுக்குத் தொலைபேசினார். அவர்கள் நாலாந்தேதி காலை ஏழு மணிக்கு நீல.பத்மநாபனுடைய வீட்டுக்கு வரலாமா என்று கேட்டார்கள். ஆனால், ஏழு மணி கொஞ்சம் அசௌகரியமான நேரம் என்று சொன்னார் நீல.பத்மநாபன். அவர் தினசரி தியானம் செய்கிறவர். தியானமும் யோகாப்பியாசமும் முடிந்து காலை உணவு சாப்பிடும்போது பகல் பதினொரு மணி ஆகிவிடும். சினிமாவோடு தனக்கு அவ்வளவு தொடர்பில்லை, மன்னிக்க வேண்டும் என்று அடக்கத்தோடு கூறினார் நீல.பத்மநாபன்.

சினிமா, டிவி சீரியல் இதிலெல்லாம் வெகு நாள் முன்பாகவே நீல.பத்மநாபன் விரக்தி அடைந்திருந்தார். ஓர் எழுத்தாளன் தன் படைப்புகள் மூலமே உயிர்த்திருக்கிறான் என்பது அவருடைய நம்பிக்கை.

‘இப்போதெல்லாம் மக்கள் விரும்பிப் பார்ப்பது திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் தான். எனக்கும் வயதாகி விட்டது. இலக்கிய உலகத்தில் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் பேட்டி காண வேண்டும். நான் ஐம்பது வருஷமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். யாரும் கவனித்ததில்லை. என்னுடைய நாவல் சினிமாப் படமாகிறது என்ற செய்தி பத்திரிகையில் வந்த பின்னர்தான் என்னைக் கண்டதும் பேச ஆர்வம் காட்டுகிறார்கள். சினிமாவாகிற கதை என்ன என்று இவர்கள் கேட்கிறார்கள்.

களையாதே

களையாதே
—————–
ஊடகங்கள் உருவாக்காத
சில்லுண்டித் தனமில்லாத
செய்திகளைச் செவிமடுப்பீர்.

தொழில்நுட்பம் உருவாக்கிய
தகவல் குப்பை இல்லை அதெல்லாம்.
நிகழும்போதே கிடைப்பதால்
வாஷிங்டன் துறைமுகத் தாக்குதல்
நேற்று விழுந்த குப்பையில்லை.

ஆர்புத்நாட் வங்கி விழுந்ததை
கவிதைக்குக் கவைக்குதவாத
சமாசாரம் என்று
ஒதுக்கிவிட்டு மீசை முறுக்கி
பாரதி இன்னொரு தேசபக்திப்
பாட்டு படிக்கவில்லை.

எங்கேயோ நடந்த
அரசியல் குழப்பமென்று
ரஷ்ய சக்கரவர்த்தி
விழுந்ததை ஒதுக்காமல்
யுகப் புரட்சி என்றான்.

தகவல் குப்பை என
ஒதுக்கிக் கொண்டே போனால்
யுகப் புரட்சி வந்தாலும்
நம் இலக்கியத் தடங்களில்
நிம்மதியாகத்
தொடர்ந்து கொண்டிருப்போம்
உள்வெளிப் பயணத்தில்.

வெளியே உலகம்
இல்லாது போனதை அறியாமல்.

(இரா.முருகன் 17 செப்டம்பர் 2013)

——————————————————-
Chennai central.Xcept for Hydrabad-Chennai express all othr trains arrv on time.make it 2-Telangana n Seems2B Anahra exprs

Chennai centrl.Guj.sethji n porter wth 3 hvy baggage on head n 3 on shouldrs argue for 15 min.Head strong porter wins agnst purse strng seth

Chennai Central. Tonsured @Tirupati up north crowd buying murukku,cheedai at sweet stall.Dentally n mentally strong

Chennai Central.Amidst all chaos 24*7 a hub of activity-a sturdy post Victorian archtct marvel. Chennai Airport-ayyo pavam
———————————————————————–

Earliest European migrants were in the lower echelons of society in India//

Like the eminently readable William Dalrymple, Prof.Harris seems to be an interesting micro-history narrator. Awaiting his book release.

My choice of micro-history works:

1) Samuel Pepy’s diary (about 17th century England, especially London during the plague and the London fire 1666)

2) the whole Anandarangam Pillai diaries (about French rule in Pondichery – 18th century) – though the ruling elite appear throughout the diaries, Pillai has avoided them hogging space and introduces hundreds of ‘the others’ too

3) )Thamizh Thathta U.Ve.Saa’s ‘En charithiram’ (19th century Tamilnadu)

4) Dalrymple’s ‘White Mughals’ and ‘Last Mughal’

—————————————————————–
Meet The Artist – Sowmya

Breakfast meet with eminent musician Sowmya on 21Sep. Register here! Sponsored by Sarangi
21 September at 08:30
Join · 93 people are going to this event//#ஃபேஸ்புக் விளம்பரம்

93 பேர் சௌமியாவோட உட்கார்ந்து காலைச் சாப்பாட்டு சந்திப்பு நடத்தினால் அங்கே சந்திப்பு எங்கே, பந்தி போஜனமாக இல்லே இருக்கும்?
——————————————————-

நீந்தும் கொழுக்கட்டையாய் கடல்மீனும், வாசக கணபதியும்

வெங்கட நாராயணா வீதியில்
வெல்லமும் கொப்பரையும்
குழைத்துச் சமைத்த
சுற்றுச் சூழல் நட்பு கணபதி.

பக்கத்தில் சிலையாக
பளபளவென்று புரோகிதர்.

ப்த்துநாள் பக்தர்களுக்கு அருள
விநாயகர் காத்திருப்பார்.
சூழலை மாசுபடுத்தாமல்
வழிபட்டு ஆசிபெற
பக்தர்கள் வந்து போவார்.

பத்து நாள் சென்று
மெரினாவில் கரைத்தால்,
பிள்ளையாரைத் தின்ன
நீந்தும் கொழுக்கட்டையாய்க்
கடல் மீன் காத்திருக்கும்.
தெர்மோகோல் புரோகிதர்
இல்லையென்றால்
அவரையும்.

கடல்மீனும் கணபதியே.

—————————————————-

கல்கி பத்திரிகையின் ‘ சென்ற ஆண்டு வெளியான சிறந்த அச்சு விளம்பரம்’ தேர்வுக்கு நடுவராக இருந்ததற்காக பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் திரு.கல்கி ராஜேந்திரன், திருமதி சீதா ரவி எனக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெங்கலத்தில் ஒரு அருமையான ‘வாசக கணபதி’யைப் பரிசாக வழங்கினார்கள்.

விழா நாளன்று என் ‘விஸ்வரூபம்’ நாவல் வெளியீடும் நிகழ்ந்ததால், நான் கல்கி விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

என் சார்பில், நண்பர் கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் வாங்கி வைத்திருந்து அளித்தார்.

வாசக கணபதிக்கு நண்பர்கள் எல்லோர் சார்பாகவும் வணக்கம்.


—————————–
Thanks Ie.Paa sir for this splendid article on Bharathi’s private voice. Kuyil Paattu and Coleridge’s Kubla Khan – nice association of thought.

Can we extend it to cover Bharathi’s prose as well? Bharathi’s Xnadu is the entire space covered by ‘Jnana Ratham’, right, sir?

EraMurukan Ramasami Ie.Paa sir texts (8:20 AM) – ‘Yes, precisely. I am planning to write a book on Bharathi’s private voice’.

Era.Murukan texts (8:26 AM) – We are awaiting it sir. Please write in English. It can be translated immediately into Tamil

(Sep 11 – Mahakavi’s death anniversary)

http://www.thehindu.com/features/magazine/fantasy-in-verse/article5096145.ece

———————————————————————————————
விவஸ்தையே இல்லாத நாடு’பா.

ரெண்டு நாள் முன்னாடி பழநி கோவில் தேவஸ்தானம் சேர்த்து வைத்திருந்த தலைமுடி – மொட்டையடித்துக் கொண்ட பக்தர்கள் கொடுத்த காணிக்கை – 17 லட்ச ரூபாய் மதிப்பு – சில ஆயிரம் கிலோ எடை – காணவில்லை.

இப்போ – காசு போட்டா ஆணுறை வழங்கும் காண்டம் வெண்டிங் மெஷின் (சிவிஎம்) .. அதிகமில்லே.. வெறும் பத்தாயிரம் மெஷின் காணவில்லை. 21 கோடி ரூபாய் செலவில் சர்க்கார் வாங்கியது. ஆடீட்டர் ஜெனரல் – சிஏஜி- கண்டு பிடிச்சிருக்காங்க.

வஞ்சிக்கப்பட்டு வஞ்சிக் காண்டம் கடந்து வந்த அரசு புகார்க் காண்டத்திலேயே நிக்காம கண்டுபிடிப்புக் காண்டம் போகலாம்.

ஆமா, இதையெல்லாம் திருடிக்கிட்டுப் போய் என்ன செய்வாங்க?

————————————-
நாளையிலிருந்து நிறைய பேர் மோஷன் கேப்சர், ப்ரேம் கேப்சர், ஃபோட்டோ ரியலிஸ்டிக் த்ரீ டீ என்று டெக்னாலஜி பேச ஆரம்பிக்கக் கூடும். வாழ்க

————————————————

Was brain storming with d author of a book on KH, for Harper Collins. Topic – discourse Vs solution provision and surrealism in KH movies.

There is an aural experience tightly coupled with the visual, in Hay Ram – the wedding night scene with super imposed voice from a previous scene with the first wife… when the Maharaja shows his stable to Saket, he casually mentions about shooting the Kathyawar horse – you know who he means.

————————————————————————–