Archive For செப்டம்பர் 22, 2020

புதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்

By |

திமித்ரிகளின் உலகம் இது அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்து விட்டார்கள் அமெரிக்காவில் இருந்து திமித்ரியின் தொலைபேசி அழைப்பு நடுராத்திரிக்கு வராமல் இன்றிலிருந்து ராத்திரி பதினோரு மணிக்கே வந்து விடும். நியூயார்க்கிலிருந்து திருப்பதியைக் கூப்பிடுவான் திமித்ரி, சாண்ட்விச் மென்றபடி ப்ராஜக்ட் விஷயம் பேச. சென்னையில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜர் திருப்பதி. திமித்ரியின் தினசரி வசை பொழிதல் பெரும்பாலும் இப்படித் தொடங்கும் – “இப்போ இங்கே ஊரோடு சாப்பிடற அருமையான பகல்…




Read more »

லந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது

By |

என்.எஸ்.மாதவனின் புகழ் பெற்ற மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியாகள்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ‘பீரங்கிப் பாடல்கள்’ (இரா.முருகன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கியது) நூலில் இருந்து – பள்ளிவாசல் அணைக்கட்டில் இருந்து கிழக்கு மேற்காகக் கடந்து மின்சாரம் வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாக, லந்தன்பத்தேரியில் முதல் ரேடியோ வந்தது. மலாக்கா ஹவுஸ் கீழ்த் தளத்தில் சாயாக்கடை நடத்திய பவுலோஸ், வெண்டுருத்தியில் இருந்து உத்தியோக இட மாற்றம் கிடைத்துப்போன ஒரு பஞ்சாபி கடற்படைக்காரனிடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பழைய…




Read more »

கெ.எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்ன மார்கரித்த ஜெசிக்கா

By |

என்.எஸ்.மாதவனின் மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ தமிழாக்கம் இரா.முருகன் ‘பீரங்கிப் பாடல்கள்’ நூலில் இருந்து ஒரு சிறு பகுதி ————————————————————————————- “கெ.எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்ன மார்கரித்த ஜெசிக்கா”. பள்ளியில் சேர்ந்த முதல் நாள் வருகைப் பதிவின் போது ராகவன்மாஸ்டர் என் பெயரைக் கூப்பிட்டார். “ஆஜர்” என்று நான் சொன்னேன். “இப்படியே போனா என்ன ஆகும்” எரணாகுளத்திலே இருந்து திருச்சிவப்பேரூர் வரை இருக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களோட பெயர்கள் மாதிரி – எரணாகுளம் தெற்கு, எரணாகுளம்…




Read more »

இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல் – ராமோஜியம் நாவலை ஹரன் பிரசன்னா மதிப்பிடுகிறார்

By |

இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல் – ராமோஜியம் நாவலை ஹரன் பிரசன்னா மதிப்பிடுகிறார்

இரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல் நாவல் என்பது ஒரு கதையைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அது அனுபவத்தின் பெரு வெளியாகவும் இருக்கக் கூடும். ஆனால் இப்படி ஒரு நாவல் எழுதுவது அத்தனை சுலபமானதல்ல. நாவலில் சொல்லப்படும் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்ட மனிதனின் வாழ்க்கையோடு முடிந்துவிடவும் தேவையில்லை என்று எல்லையைப் பெருக்கிக் கொண்ட வகையில், இரா.முருகன் இந்த நாவலை மிகப் பெரிய வீச்சும் பரப்பும் கொண்டதாக மாற்றி விட்டிருக்கிறார். அதே சமயம் அந்த…




Read more »

எட்வின் சேட்டனின் தம் பிரியாணி

By |

என்.எஸ்.மாதவன் எழுதிய புகழ்பெற்ற மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – தமிழில் இரா.முருகன் மொழிபெயர்ப்பு ‘பீரங்கிப் பாடல்கள்’ – ஒரு சிறு பகுதி ———————————————————————————– எனக்கு ஞானஸ்நானம் நடந்த நாளில் அதிகாலையிலேயே எட்வின்சேட்டனும் அவருடைய வேலையாட்களும் பிரியாணி செய்ய ஆரம்பித்தார்கள். பெரிய கொப்பரையில், வாங்கி வைத்த நெய்யில் பாதியை ஊற்றிச் சூடாக்கி அரிந்து வைத்த வெங்காயத்தில் பாதியை அதில் போட்டு, எட்வின்சேட்டனின் சமையல் கோஷ்டியில் வந்த வேலாயுதன் வறுத்தார். எட்வின்சேட்டன் கண்ணை மூடியபடி கொப்பரையைச் சுற்றி,…




Read more »

மெட்டுக்கு பாட்டெழுதுவீரா? – 1975 நாவலில் இருந்து

By |

“சினிமா மெட்டுலே பாட்டு எழுதுவீங்களா?” பேங்க் கவுண்டருக்கு அந்தப் பக்கம் இருந்து இந்த விநோதமான கேள்வி எழுந்தபோது அங்கே கிட்டத்தட்ட இருபது பேர் நெருக்கி அடித்து நின்றுகொண்டிருந்தார்கள். எலக்ட்ரிக் மாரிமுத்து தான் என்னை இப்படிக் கேட்டவர். கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் கேஷியரிடம் போய்விட்டார். மாதத்தின் முதல் வாரம் என்பதால் கரண்ட் சார்ஜ் என்று அழைக்கப்படும் மின்சாரக் கட்டணம் எல்லாத் தெருக்களிலும் இருந்து நிறைய வசூலாகி இருக்கும். அதெல்லாம் பேங்கில் தினசரி கொண்டு வந்து கட்டிவிட வேண்டும். மாரிமுத்து…




Read more »