Monthly Archives: October 31, 2013, 1:18 am

மலையாளச் சிறுகதைகள், கதிரியக்க மிளகாய் இன்ன பிற

இருபது சொச்சம் நல்ல மலையாளச் சிறுகதைகள்

1) வெள்ளப் பொக்கத்தில் – தகழி – மலையாளம்
2) ஆனவால் மோதிரம் – பஷீர் (கூடவே ‘பர்ர்’, ‘ ஒரு பகவத்கீதயும் குறெ முலகளும்)
3) பள்ளிவாளும் கால் சிலம்பும் (நிர்மால்யம்)
- எம்.டி.வாசுதேவன் நாயர்
4) பந்த்ரண்டு – மாதவிக்குட்டி
5) கத்து – சேது
6) சலாம் அமெரிக்கா – பால் சக்கரியா
7) பொந்தன்மட, சிதம்பரம் – சி.வி.ஸ்ரீராமன் (’ஔத்யோசிக பஹுமதியோடெ’ கூட சேர்த்துக் கொள்ளலாம்)
8. ஹிக்விட்ட – என்.எஸ்.மாதவன்
9) கடல்தீரத்தில் (சரி பார்க்க வேண்டும் – பலிச் சோறாகவும் இருக்கலாம். ஆங்கிலத்தில் After the hanging) – ஒ.வி.விஜயன்
10) பிரகாசம் பரத்துன்ன ஒரு பெண்குட்டி – டி.பத்மநாபன்

(தொடரும்)
————————————
‘Oxford India contemporary studies – sex’ appears to be an important book on the theme of context, symbols and theme of sexuality in contemporary India. The introduction by Prof. Padmini Swaminathan is a well written article.

I observe family court proceedings in Dacca at the turn of 20th century are being recorded and analysed in the book. Equally important in the study of sexuality that too in a supposedly close, orthodox Namboodhri society in Kerala, during the same period, are the well known Kuriyedaththu Thathri Kutty trials (smartha vicharana) took place. I don’t think any of the essays in this collection deals about that.

Padmini closes her article with a quote from one of the essayists who contributed to the book -
//
It is Phadke’s contention that once we accept the quest for pleasure and fun as legitimate pursuits, “then young women might find themselves better able to navigate their sexual lives”.//

What could have made the author to think the Indian society thinks sex as a despicable yet biologically necessary activity? Or a sinful pursuit? Had we thought so, we won’t be having the intrinsic and aesthetically erotic Khajuraho sculptures and the elaborate manual of sex, the Kamasutra.

That being the case, what is the need for young women to find themselves better able to navigate their sexual lives? Is there any barrier, moral, cultural or otherwise which render the navigation difficult or plain impossible?
—————————————————–
மிளகாயில் நெய் மணம் கமழ்றது இருக்கட்டும். கதிர்வீச்சு வாடையும் கமழ வேண்டுமா?

//நெய்மணம் கமழும் மிளகாய் விதைகளில் காமா கதிர்வீச்சு செய்ய, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் அனுமதி தந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் மிளகாயின் நிறம், இலை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரலாம்//

ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய விஷயம் இல்லையோ இது? என்ன மாதிரியான ஆராய்ச்சி? இவங்க சாப்பிட்டுப் பார்த்து, பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்குன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தா போதுமா?

//முதலில் இந்த மிளகாய் மனிதர்களுக்கு உகந்ததா என பலவித ஆராய்ச்சிகள் செய்து, நாங்கள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்” என்றார்.//

அப்புறம், கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் அனுமதி கொடுத்துட்டாங்கன்னு செய்தியில் இருக்கு. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலே அவங்க எப்படி அனுமதி கொடுப்பாங்க? அது FSSAI Food Safety and Standards Authority of India தர வேண்டியதாச்சே… இந்து ப்த்திரிகை ஆங்கிலத்தில் தான் குண்டூரு விட்ட ரீலை எல்லாம் அப்படியே போட்டுட்டு அப்புறம் வருந்தினாங்கன்னா, தமிழ் தி இந்துவிலுமா இப்படி உறுதிப் படுத்தப்படாத செய்தி? எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இல்லையா?

எனக்கு முதல் மகிழ்ச்சி, காமா ரேடியேஷனால் தீமை ஏதும் இல்லை என்பது.

மனக் குமைச்சல் ஐட்டங்கள் -

1) சந்தைப்படுத்துவது (marketing – increasing the shelf life) மட்டும் குறிக்கோளா அல்லது விவசாயிக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா?

2) ஏற்கனவே காமா கதிரியக்கம் இல்லாமல் மலைவாழ் மக்கள் பயிர் செய்து வரும் ஒரு தாவரத்தை (பிரதீப் சொல்கிறபடி அது மிளகாய்ப் பழம் தான் – பாரதி கதை மிளகாய்ப்பழ சாமியார் நினைவு வருகிறது) புதிதாக உருவாக்கியதாகத் தகவல் தர என்ன காரணம்?

3) சுரேஷ் சொல்கிறபடி – காமா கதிர்வீச்சு கலரை மாற்றவோ இல்லை மணத்தை மாற்றவோ நிச்சயமாக இல்லை. சந்தைப்படுத்த மட்டும் என்றால், இது மிளகாய் ஏற்றுமதியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படுவதா?

‘சாளூர் கத்திரிக்கா தம்பி.. பச்சு பச்சுன்னு வெள்ளனத்தான் பறிச்சுக் கொண்டாந்தேன்.. கையிலே பாரு.. வாடை போகலே… வாங்கிட்டுப் போங்க’ என்று சிவகங்கையில் புதன் கிழமை சந்தையில் காது வளர்த்த அப்பத்தாக்களிடம் பச்சைப் பசேலென்று (garden fresh என்ற பதம் அப்போது தெரியாது) வாங்கிச் சமையல் செய்து உண்டு வள்ரந்தவன் நான்.. அந்த வாடையை காமா தராது.

காலம் மாறிவிட்டது. சிவகங்கையிலிருந்து ஐந்தே கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முத்துப்பட்டிக்கே வாசனைப் பொருள் பூங்கா (ஸ்பைசஸ் பார்க்) அமர்க்களமாக வந்துவிட்டது. சாளூருக்கும் காமா ரேடியேஷன் வரலாம்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/நெய்மணம்-கமழும்-மிளகாய்-புதுவை-விவசாயி-சாதனை/article5284664.ece?homepage=true

http://www.thehindu.com/books/books-reviews/sexual-cultures-of-contemporary-india/article5282923.ece

ஆழ்வார், சிலிக்கன் வாசல்,எழுத்துக்காரர் – மேடை நாடகங்கள் – ஒத்திகை நேரம்

My tweets this evening

- Rehearsals for all my 3 stage plays by Team Shraddha in progress.d curtains go up on 13th.Excited

- And d good/bad news is I too am acting -in Shraddha’s presentation of my ‘Silicon Vaasal’. ‘Every actor has to rehearse’ dirctor TDS strict

- Team Shraddha has d right blend- 60+ veterans like Sivaji Chaturvedi n T.D.Sundarrajan share stage space without airs with 20+ gang

- Observing TDS emoting as Azhwar with Nelson as d stranger is an unique experience.Director Krishnamurthy adds a few more layers to the chars

- I’m sure young Suraj wl live Solai, d protagonist of ‘Silicon Vasal’ on stage.His anger n tension gets more n more sharp under TDS tutelage

- Ezhuthukkarar is d trickiest of d lot. Krishnamurthy, d director is innovative in bringing it alive.Kavitha as d protagonist d right choice

- Pasuram recital has 2 distinct styles:one singsong n othr wth long intonations..p’haps vada n thenkalai.TDS recited both;I am for vadakalai.

- Toying wth d idea of carving out ‘Mahalingayyan letters’ alone from my ‘Viswaroopam’ novel as a stage play.Let us create 1890-1930 on stage.

- Pivotal scene of Solai slogging alone at his cubicle past midnght-fantasy interlaced with reality-shaping very well.Wait for a 360 deg WOW!

————————————————
ஷ்ரத்தா நாடக ஒத்திகை – 2 (இன்று பகல்) – 1

‘ஆழ்வார்’ நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். மேடையில் ஒருவேளை இப்படியும் வரலாம். Mr.T.D Srinivasan experimenting with his get-up.

ஷ்ரத்தா நாடக ஒத்திகை – 2 (இன்று பகல்)

சிலிக்கன் வாசலுக்காக ஒத்திகைக்கிடையில் இளைஞர் அணி அரட்டை. மேக்கப் போட்டு மேடையில் நிறுத்தியதும் இவர்கள் நிறைய மாறி இருக்கலாம் !

ஷ்ரத்தா நாடக ஒத்திகை – 3 (இன்று பகல்)

ஆழ்வார் கண்ணில் நீர் மல்க (கிளிசரினே தேவையில்லை) நம்மாழ்வார் பாசுரத்தை இப்படிச் சொல்லலாம்.

(பாசுரம் பாடுதலுக்கு நன்றி திரு டிடிஎஸ்)

UNNUM 2

(பாசுரம் கேட்க மேலே UNNUM என்ற சுட்டியில் சொடுக்கவும்)

——————————–

ஷ்ரத்தா நாடக ஒத்திகை – 4

எழுத்துக்காரர் நாடகத்தில் நந்தினி (கவிதாவுக்கு) நடிப்பு ஆலோசனை வழங்குகிறார் நாடக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி

ஷ்ரத்தா நாடக ஒத்திகை – 5

ஆழ்வார் டி டி சுந்தர்ராஜனும் ராஜு நெல்சனும்

ஷ்ரத்தா நாடக ஒத்திகை – 6

யோசனைகளோடு இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி

Palimpsests – A playwright’s diary 2

a playwright’s diary – 2

Today’s discussions were generally around narrative techniques, mainly on
flash backs.

A flash back is everyone’s favourite. Or at least it is something that has to be tolerated for want of a better technique for movement on the time axis across a story.

I am always amazed to note that while the flash back has grabbed the eye balls and the mental eye for quite long, its sibling, ‘foretelling’ is not that popular. For that matter, foretelling is not something defined afresh in modern literary theory. Our twin epics Ramayana and Mahabaratha use it to a certain extent -almost all the curses of divine beings provide opportunities to the great poets who created the epics to visit a character’s future albeit briefly and return.

Among modern authors, Muriel Spark was an enthusiastic user of foretelling. Her novel ‘The prime of Miss Jean Brodie’ bears ample evidence to this.

Among Latin American authors, while magical realism could be made easily acceptable, Garcia Marequez could only handle foretelling cautiously in ‘One hundred years of solitude’ and emboldened with its success, went for a no-holds barred narration in ‘Chronicle of a death foretold’.

In Tamil, I can only speak for myself. Having arrived at the literary scene without any back bag of home grown form or technique, I could boldly experiment with what all I thought possible, in my first Arasoor trilogy novel, Arasur Vamsam (English version – The Ghosts of Arasur). The foretelling by the dervish gang about Kittavayyan becoming John Kittavayyan is one small example for this.

However, today’s discussion was not about foretelling but only on flash backs. Or the need to have it. A flash back to the protagonist’s past involves a switch over from a 21st century office at present to his lower middle class house a few years ago. Shifting and rearranging set properties for going down the flash back and re-entering into the present may involve more than 3 minutes. Is it worth keeping the viewer waiting in the auditorium’s darkness for that long that too twice within 5 minutes, that being the duration of the flash back?

The execution team suggested let us do away with the flash back altogether and have its substance inliad in the dialogue based proceedings of the present.

I put my foot firmly down and said no.This is one instance when the author has to be firm about the environment and ambience the author wants to create. When a leap into the past to revisit the tipping point and return is crucial to the proceedings that are to follow, leave the author to have his / her say. Let what is written get done, without even a comma, semi colon or a full stop excluded or included.

And while on the topic of the sets, why can’t we instead of replicating reality, induce imagination of the viewer through subtle suggestions? Like a palimpsest.

A palimpsest is, as the dictionary defines – Something reused or altered but still bearing visible traces of its earlier form.

For entering into the flash back you need not hide the present – let the office be there as it was and as it would be. No need even to use a drop and hide it. Instead create a small space on front stage lit differently where the flash back happens with minimal set props to suggest a lower middle class urban residence. What else could be the right metaphors for that life except the plastic pots and a sticker kolam? The characters simply walk into the past and return to the office surroundings which is the present.

The palimpsest sure will create an unique viewer experience as the present and a past in stark contrast together will fuse visually and convey more than regular scene sequencing and stage management.

An interesting experience and discussion indeed.. otherwise I would not be sitting wide awake at 10.45 PM and banging on my key board like this..

a playwright’s diary – 1

என் இரண்டு சிறுகதைகளும் ஒரு சற்றே நீண்ட சிறுகதையும் மேடை நாடகங்களாக நிகழ்த்தப்பட உள்ளன.

’ஆழ்வார்’, ‘எழுத்துக்காரர்’ இரண்டும் சிறுகதைகள். ‘சிலிக்கன் வாசல்’ மூன்றாவது.

ஷ்ரத்தா குழுவினர் இவற்றை அடுத்த (நவம்பர்) மாதத்தில் மேடையேற்றுகிறார்கள். நிகழ்வு நிரல், அரங்கு பற்றிய விவரங்கள் என் பேஸ்புக் டைம்லைனிலும் ஷ்ரத்தாவின் பக்கத்திலும் வெளியிடப்படும்.

நாடக ஒத்திகைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நேரம். நானும் அவற்றில் பங்கேற்பதை விரும்பிக் கலந்து கொள்கிறேன்.

ஒரு எழுத்தாளன் – நாடக ஆசிரியர் என்ற முறையில் என் கதா பாத்திரங்களை in flesh and blood மற்றும் குறியீடுகளாக சந்திக்கும் அபூர்வமான அனுபவம் தினமும் எனக்குக் கிடைக்கிறது. Revisiting now the characters created at various points of time in my life is an interesting experience.

அனுபவப் பகிர்வு அவ்வப்போது இங்கே நிகழும்.

———————-
EraMurukan Ramasami
As an author, let me ask my actor friends –

1) Do you think play reading the full script as a team should be mandatory before the regular rehearsals commence?

2) how do you create your own space on stage? To what extent it could intrude into others’ who share the physical space with you on stage?

3) are you comfortable with a conventional proscenium stage or with a stage lay-out allowing audience participation like in the Koothambalams of Kerala temples (temple theatre, especially for chakyar koothu)?

4) If the author of the script and director of the play happen to be different entities, who would you look to in case you require help in interpreting a character?

5) Are you comfortable with those in the front rows looking up at the stage and those in the rows at the back and on the balcony looking down at you?

6) Are you Brechtian (character alienated from the actor) or Stanislavsky-ian (method acting) in your approach to theatre?
Like · · 10 hours ago
2 people like this.

Swaminathan Ganesan My answer to question 4: Director.
8 hours ago · Unlike · 1

Shalini Vijayakumar 1)Yes, reading and discussing as a team ensures that all of us are on the same page, it helps when working towards one final output.

2)Personally, I believe in making the co-actors look good. Someone once told me, giving your co-actor space and respect will automatically make you look good.
3) That would depend on what the script requires, and also what we expect to give to the audience, just entertainment or to involve people.
4) Both. To discuss and debate with both of them.
5)I forget the audience when on stage.
6) Method Acting I think.
8 hours ago · Unlike · 1

EraMurukan Ramasami Swaminathan Ganesan Absolutely. That is the response as an author I would welcome. After completing the script the author steps aside enabling the audience at large (at that juncture unidentified) to interpret the proceedings as they unveil.. the director represents a collective perspective and it is better the actor gets clarified from her / him. The interaction between the author and the director occurs in another plane altogether differnt.
49 minutes ago · Like

EraMurukan Ramasami Shalini Vijayakumar thanks.. and my two penny worth thoughts about the eternal Staislavsky Vs Brecht concepts- a surreal ‘Metamorphosis’ (Kafka) or an existentialist ‘Waiting for Godot’ (Samuel Beckett) with a vaudeville-slapstick façade may fall flat if tried in methodological style. And a ‘Kunthi meeting Karna’ from the maha kavya, Mahabaratha simply would not fly if one elects to do it the Brechtian way… would love to discuss more with friends..
38 minutes ago · Edited · Like

கம்பெனி லிமிடெட் வழங்கும் எம்.எஸ் ஆராதனை

காலைத் தொலைக்காட்சி தொல்லை குறைந்தது என்று நினைத்தால் -

சற்று முன் ஒரு சேனலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய பேச்சுக் கச்சேரி.

பேச்சாளர் மைக்கைப் பிடித்ததும் ‘எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்க’ என்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒளிபரப்பும் சேனலுக்கு கூட்டமாக நன்றி செலுத்த வேண்டுமாம்.

எதுக்கு என்ன என்று கேட்காமல் நம்மாட்கள் யாராவது வற்புறுத்தினால் என்ன செய்வார்களோ அதைத்தான் அரங்கில் இருந்த கூட்டமும் செய்தது.

எழுந்து நின்றார்கள் எல்லோரும்.

வயதானவர்கள் சிரமத்தோடும், மற்றவர்கள் கடமை உணர்வோடும் எழ, அரங்கில் இருந்த திருப்பூர் கிருஷ்ணனும் கொஞ்சம் திகைத்து எழுந்து நின்றதை மறக்க முடியாது.

அப்புறம் பேச்சாளர் பேச ஆரம்பித்தாரா என்றால் இல்லை. கொஞ்சம் முன்னால் குனிந்து தன் கழுத்தைத் தடவிக் கொண்டார்.

கழுத்தில் இருந்து ஒரு தங்க செயினை கழற்றி எடுத்து முன்னால் தொப் என்று போட்டார்.

’இது பிரபல திரை இசைக் கலைஞர் – பெயர் சொல்லி – எனக்கு அணிவித்தது’.

அதுக்கும் எழுந்து நிற்கச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். நல்ல வேளையாக அப்படியெதுவும் நடக்கவில்லை.

செயின் ஆராதனை முடித்து சட்டை, பனியன் என்று அகற்றி அறிமுகப்படுத்த ஆரம்பித்தால் என்ன செய்வது என்று அடுத்த பயம். அதுவும் நிகழாமல் போனது அதிர்ஷ்டம் தான்.

நடுவில் ஸ்பான்சர் விளம்பரம். தங்க நகை விற்கும் கார்ப்பரேட் என்பதால் மும்பையில் உருவாக்கப்பட்ட sleek ஆன விளம்பரம். மும்பை மாடல் அழகி ஒவ்வொரு நகையாக அணிந்து சுமாரான lip sync-ல் நெல்லைத் தமிழில் பேசினாள். பேசாமல் நம்ம பேச்சாளரையே மாடலாக்கி இருக்கலாமே!

இதெல்லாம் முடிந்து புத்தகங்களை, கட்டுரைகளை மேற்கோள் காட்டி எம்.எஸ் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, டைம் அவுட். மீதி நாளைக்கு. அதிர்ஷ்டம் செய்தவர்கள் பார்க்கட்டும்.

எம்.எஸ்ஸை இப்படி evantualize செய்யணுமா?
————————————————————————-

Horror is watching ‘Karaikal Ammaiyar’ dubbed in Malayalam. P.Leela sings for an on screen K.B.Sundarambal

——————————————————-
வத்தலக்குண்டு ராஜமய்யர் எழுதிய தமிழின் முதல் நாவல்களில் ஒன்றான ‘கமலாம்பாள் சரித்திரம்’ கதையில், மதுரை மாவட்ட கிராமங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் நடமாடிய மனிதர்கள் ஆணும் பெண்ணும் குழந்தையுமாக அச்சு அசலாக வந்து போவார்கள்.

அதில் ஒரு பாத்திரம் ‘பாப்பா பாட்டியகத்து வெட்டரிவாள்’ பாட்டி. இவள் பக்கத்து வீட்டு வாசலில் (அங்கேயும் ஒரு பாட்டி தான் குடியிருந்தாள்) காயப் போட்டிருந்த அடுப்பு விறகைத் திருடி விட்டு, அதை வெட்ட அரிவாள் கடன் வாங்க அவர்கள் வீட்டுக்கே போவாள். ஊர்ப் பசங்கள் இந்த விஷயம் தெரிந்து இந்தப் பாட்டியம்மா தலையைப் பார்த்ததுமே ‘பாப்பாப் பாட்டியாத்து வெட்டரிவாள்’ என்று அவள் முதுகுக்குப் பின் கூவி விட்டு ஓடும்.

பாட்டி திரும்பிப் பார்த்து நின்று நிதானமாக அதுகளை வசவு மழை பொழிந்து சபிப்பாள். அதைக் கேட்பதில் பசங்களுக்கு ஆனந்தம் என்றால் திட்டுவது பாட்டிக்குக் கொண்டாட்டம்.

சில நாள் எந்தப் பையனும் அவளைப் பார்த்துத் திட்ட மாட்டான். பாட்டி விட மாட்டாள். தெருவில் அவன் பாட்டுக்குப் போய்க்கிட்டிருக்கும் ஒரு பையனைப் பார்த்து, ‘அப்பா, நீ ரொம்ப நல்லவன்.. என்னை எப்பவுமே கேலி பண்ணினதே இல்லை..’ என்று சர்ட்டிபிகேட் வழங்குவாள்.

இவள் தெரு திரும்பும்போது அந்தப் பையன் ‘பாப்பாப் பாட்டியகத்து வெட்டரிவாள்’ என்று கத்தி விட்டு ஓட, பாட்டி படு குஷியாகத் திட்ட ஆரம்பிப்பாள். அதைத்தானே அவள் எதிர்பார்த்தது.

கமலாம்பாள் சரித்திரத்தில் மட்டுமா பாப்பாப் பாட்டியகத்து வெட்டரிவாள்கள்?
——————————————————–

நாளைக்கு கையில் ஒரு புத்தகமும் இருக்க விடாமல் பிடுங்கி அதில் நாலஞ்சாவது பூஜையில் வந்துடும். தி.ஜானகிராமன் சொல்ற ‘சரஸ்வதி பூஜையன்று தான் பல்பொடி மடித்த காகிதமாவது படிக்க வேண்டும்’ என்று ஆசை வரும்.

அதுக்கு முன்னால் இன்று டாக்டர் தி.சே.சௌ ராஜன் எழுதிய ‘வீட்டு வைத்தியர்’ மருத்துவ நூல் படிக்க ஆரம்பிச்சேன். 1945-ல் முதல் பதிப்பாம். சரளமான எளிய தமிழ். மருத்துவப் புத்தகத்திலும் தேசியம் தட்டுப்படத் தவறவில்லை.

தமிழ் நாட்டில் 1940-களின் விடுதலைப் போராட்டத்துக்கு சங்கு சுப்ரமணியன் சொற்பொழிவு, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கவிதை, பட்டம்மாளின் பாரதி பாட்டு, ராஜாஜியின் ஜெயில் டயரி, கல்கி – சுப்ரமண்யத்தின் ‘தியாக பூமி’ டாக்கி இப்படியான முகங்கள் தான் இருந்ததாக அவ்வப்போது தோன்றும். அதற்கு டாக்டர் ராஜன் மருத்துவம் – எழுத்து போல் இன்னொரு முகமும் இருந்திருக்கிறது. பெ.நா.அப்புஸ்வாமியின் அறிவியல் அறிமுகமும் இங்கே வரலாம் என்று நினைக்கிறேன்.