Malayalam short stories, sexuality in contemporary India and irradiated chilliesமலையாளச் சிறுகதைகள், கதிரியக்க மிளகாய் இன்ன பிற

இருபது சொச்சம் நல்ல மலையாளச் சிறுகதைகள்

1) வெள்ளப் பொக்கத்தில் – தகழி – மலையாளம்
2) ஆனவால் மோதிரம் – பஷீர் (கூடவே ‘பர்ர்’, ‘ ஒரு பகவத்கீதயும் குறெ முலகளும்)
3) பள்ளிவாளும் கால் சிலம்பும் (நிர்மால்யம்)
– எம்.டி.வாசுதேவன் நாயர்
4) பந்த்ரண்டு – மாதவிக்குட்டி
5) கத்து – சேது
6) சலாம் அமெரிக்கா – பால் சக்கரியா
7) பொந்தன்மட, சிதம்பரம் – சி.வி.ஸ்ரீராமன் (’ஔத்யோசிக பஹுமதியோடெ’ கூட சேர்த்துக் கொள்ளலாம்)
8. ஹிக்விட்ட – என்.எஸ்.மாதவன்
9) கடல்தீரத்தில் (சரி பார்க்க வேண்டும் – பலிச் சோறாகவும் இருக்கலாம். ஆங்கிலத்தில் After the hanging) – ஒ.வி.விஜயன்
10) பிரகாசம் பரத்துன்ன ஒரு பெண்குட்டி – டி.பத்மநாபன்

(தொடரும்)
————————————
‘Oxford India contemporary studies – sex’ appears to be an important book on the theme of context, symbols and theme of sexuality in contemporary India. The introduction by Prof. Padmini Swaminathan is a well written article.

I observe family court proceedings in Dacca at the turn of 20th century are being recorded and analysed in the book. Equally important in the study of sexuality that too in a supposedly close, orthodox Namboodhri society in Kerala, during the same period, are the well known Kuriyedaththu Thathri Kutty trials (smartha vicharana) took place. I don’t think any of the essays in this collection deals about that.

Padmini closes her article with a quote from one of the essayists who contributed to the book –
//
It is Phadke’s contention that once we accept the quest for pleasure and fun as legitimate pursuits, “then young women might find themselves better able to navigate their sexual lives”.//

What could have made the author to think the Indian society thinks sex as a despicable yet biologically necessary activity? Or a sinful pursuit? Had we thought so, we won’t be having the intrinsic and aesthetically erotic Khajuraho sculptures and the elaborate manual of sex, the Kamasutra.

That being the case, what is the need for young women to find themselves better able to navigate their sexual lives? Is there any barrier, moral, cultural or otherwise which render the navigation difficult or plain impossible?
—————————————————–
மிளகாயில் நெய் மணம் கமழ்றது இருக்கட்டும். கதிர்வீச்சு வாடையும் கமழ வேண்டுமா?

//நெய்மணம் கமழும் மிளகாய் விதைகளில் காமா கதிர்வீச்சு செய்ய, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் அனுமதி தந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் மிளகாயின் நிறம், இலை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரலாம்//

ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய விஷயம் இல்லையோ இது? என்ன மாதிரியான ஆராய்ச்சி? இவங்க சாப்பிட்டுப் பார்த்து, பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்குன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தா போதுமா?

//முதலில் இந்த மிளகாய் மனிதர்களுக்கு உகந்ததா என பலவித ஆராய்ச்சிகள் செய்து, நாங்கள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்” என்றார்.//

அப்புறம், கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் அனுமதி கொடுத்துட்டாங்கன்னு செய்தியில் இருக்கு. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலே அவங்க எப்படி அனுமதி கொடுப்பாங்க? அது FSSAI Food Safety and Standards Authority of India தர வேண்டியதாச்சே… இந்து ப்த்திரிகை ஆங்கிலத்தில் தான் குண்டூரு விட்ட ரீலை எல்லாம் அப்படியே போட்டுட்டு அப்புறம் வருந்தினாங்கன்னா, தமிழ் தி இந்துவிலுமா இப்படி உறுதிப் படுத்தப்படாத செய்தி? எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இல்லையா?

எனக்கு முதல் மகிழ்ச்சி, காமா ரேடியேஷனால் தீமை ஏதும் இல்லை என்பது.

மனக் குமைச்சல் ஐட்டங்கள் –

1) சந்தைப்படுத்துவது (marketing – increasing the shelf life) மட்டும் குறிக்கோளா அல்லது விவசாயிக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா?

2) ஏற்கனவே காமா கதிரியக்கம் இல்லாமல் மலைவாழ் மக்கள் பயிர் செய்து வரும் ஒரு தாவரத்தை (பிரதீப் சொல்கிறபடி அது மிளகாய்ப் பழம் தான் – பாரதி கதை மிளகாய்ப்பழ சாமியார் நினைவு வருகிறது) புதிதாக உருவாக்கியதாகத் தகவல் தர என்ன காரணம்?

3) சுரேஷ் சொல்கிறபடி – காமா கதிர்வீச்சு கலரை மாற்றவோ இல்லை மணத்தை மாற்றவோ நிச்சயமாக இல்லை. சந்தைப்படுத்த மட்டும் என்றால், இது மிளகாய் ஏற்றுமதியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படுவதா?

‘சாளூர் கத்திரிக்கா தம்பி.. பச்சு பச்சுன்னு வெள்ளனத்தான் பறிச்சுக் கொண்டாந்தேன்.. கையிலே பாரு.. வாடை போகலே… வாங்கிட்டுப் போங்க’ என்று சிவகங்கையில் புதன் கிழமை சந்தையில் காது வளர்த்த அப்பத்தாக்களிடம் பச்சைப் பசேலென்று (garden fresh என்ற பதம் அப்போது தெரியாது) வாங்கிச் சமையல் செய்து உண்டு வள்ரந்தவன் நான்.. அந்த வாடையை காமா தராது.

காலம் மாறிவிட்டது. சிவகங்கையிலிருந்து ஐந்தே கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முத்துப்பட்டிக்கே வாசனைப் பொருள் பூங்கா (ஸ்பைசஸ் பார்க்) அமர்க்களமாக வந்துவிட்டது. சாளூருக்கும் காமா ரேடியேஷன் வரலாம்..

http://tamil.thehindu.com/opinion/reporter-page/நெய்மணம்-கமழும்-மிளகாய்-புதுவை-விவசாயி-சாதனை/article5284664.ece?homepage=true

http://www.thehindu.com/books/books-reviews/sexual-cultures-of-contemporary-india/article5282923.ece

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன