Archive For ஜனவரி 30, 2018

புது நாவல்:1975 நான் தாங்க அம்மா” என்றாள் அவள். யாருக்கு அம்மா என்று மேனேஜரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை

By |

எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி கண்ணில் ஏகத்துக்கு மை ஈஷிக்கொண்டு வந்து கதவு திறந்த பெண்ணிடம், “உங்க அம்மாவைக் கூப்பிடு” என்றார் மேனேஜர். ”உள்ளே வாங்க, நான் தாங்க அம்மா” என்றாள் அவள். யாருக்கு அம்மா என்று மேனேஜரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. “நாடகம் போடணும்” என்று மொட்டையாகச் சொன்னார் மேனேஜர். நான் அதை விரித்துச் சொல்ல ஏதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்டேன். ”நாடகம் எல்லாம் நடத்திக் கொடுத்திடலாமுங்க. பாட்டெல்லாம் பாடிக் கொடுத்திடலாமுங்க….




Read more »

புது நாவல் : 1975 செண்டிமெண்டல் கதையில் செண்ட்ரல் கவர்மெண்ட் புகுந்திருந்தது.

By |

எழுதிக் கொண்டிருக்கும் ‘1975’ நாவலில் இருந்து – “எடிட் பண்ணி ஏதாவது கூடுதலா இருந்தா குறைச்சுக்குங்க. கதைப் போக்கை மாற்றிடாதீங்க”. அந்த நாடக ஆசிரியர் படைப்பாளியின் கரிசனத்தோடு சொன்னார். படித்துப் பார்த்தேன். செண்டிமெண்டல் கதையில் செண்ட்ரல் கவர்மெண்ட் புகுந்திருந்தது. பிள்ளையார் கோவில் பூசாரிக்குப் பெண் குழந்தை பிறந்து, கஷ்டப்பட்டுப் படிக்க இருபதம்சத் திட்டத்தில் பேங்க் உதவி கிடைத்து, வேலை கிடைக்கிறது. லஞ்சம் வாங்குகிற மேலதிகாரியை இருபதம்சத் திட்டத்தால் உத்வேகம் பெற்றுப் பிடித்துத் தருகிறாள். கணவன் கிராமப் பொருளாதாரத்தை…




Read more »

புது நாவல் : 1975 தெற்குச் சீமைக்கே சொந்தமான அக்கறையும், பிரியமுமாக, ஆபீஸும், சமூக வாழ்க்கையும், குடும்பத் தோழமையும் ஒன்று கலந்த சூழ்நிலை அது.

By |

எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் ஒரு சிறு பகுதி இது – ரவீந்திரன் கையில் பெரிய ரசீது புத்தகத்தை வைத்துக் கொண்டு வாங்கோ என்று வரவேற்றார். நன்கொடை வசூலா என்று விசாரித்தேன். அது எதுக்கு நன்கொடை, இது பிக்ஸட் டெபாஸிட் ரசீது புத்தகம்”. அதை எதுக்கு எடுத்து வந்தீங்க என்று புரியாமல் கேட்க, “கல்யாண அன்பளிப்பு பணமா வந்திருக்கு இல்லே. அதை பேங்குலே மாப்பிள்ளை – பொண்ணு பெயர்லே பிக்சட் டெபாசிட் போட்டுடுவாங்க. அந்தப் பணத்தை எண்ணி வாங்கி…




Read more »

புது நாவல் : 1975 – “இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு நம்ம பசங்களுக்கு மலையாளம் கிளாஸ் எடுக்கணும்

By |

எதிரே வித்ட்ராயல் ஸ்லிப்பும் பாஸ்புக்குமாக நின்ற இரண்டு பேரிடம் அவற்றை வாங்கி, டோக்கன் கொடுத்து, டோக்கன் நம்பரை ஸ்லிப் பின்னால் எழுதி, வட்டம் போட்டு டோக்கன் தாங்கிக்குக் கீழே பாதுகாப்பாக வைத்துவிட்டு எழுந்தேன். “இதோ வந்துட்டேன்” என்று நான் சொன்னபோது ஜோக்கைக் கேட்டது போல் அங்கே நின்றவர்கள் சிரித்தார்கள். இது மரியாதையைத் தெரிவிக்கும் சிரிப்பு. ’பரவாயில்லே, நாங்க பத்து நிமிஷம் நிக்கறோம். நீ போய் ஒண்ணுக்கு ரெண்டுக்கு இருந்துட்டு வா, இல்லே ஒரு சிகரெட் பத்த வச்சு…




Read more »

புது நாவல் : 1975 கூரை ஒன்று ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கப்பல் போகத் தூக்கித் திறப்பது போல் திறந்தது

By |

“மோளே, வாசல்லே என்ன ரெண்டு ஜோடி பிஞ்ச செருப்பு கிடக்கே”, வாசலில் எங்கள் காலணிகளைப் பார்த்து விட்டு கூப்பிட்டபடி உள்ளே வந்த நாயர் நாங்கள் தேன் வளர்க்கும் இடத்தில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் திரிந்து கொண்டிருந்ததைக் கூர்ந்து பார்த்தார். அடுத்து கூடத்தில் துணி போட்டு நிறுத்தியிருந்த கருப்பு வடிவங்களையும் நோக்கினார். “வாங்க, வாங்க” என்றபடி அந்தக் களிமண் சிலைகளை நடுவாக நகர்த்தினார். “இது என்னங்க?” நான் கேட்டேன். “காவுலே நாகர் சிலையெ அடுத்து வைக்கறது. இங்கே ஐயனார்…




Read more »

New : சிறுகதை ‘கொட்டி’ (இரா.முருகன்)

By |

New : சிறுகதை    ‘கொட்டி’                          (இரா.முருகன்)

கல்யாண வீட்டிலிருந்து செண்டை மேளம் கேட்டுக் கொண்டிருந்தது. தவுல் சிவத்தையா பிள்ளை ஓரமாக ஒதுங்கி ஒரு வினாடி நின்று ஒத்துக்காரர் மேல் படாமல் காறித் துப்பினார். லொங்கு லொங்கென்று விடிகாலை ஐந்து மணிக்கு எலக்ட்ரிக் ரயில் பிடித்து ஓடி வந்தாலும், தாடியைத் தடவிக்கொண்டு கொட்டி முழக்க மலையாளக் கரைக் கூட்டம் அதுக்கும் முன்னே வந்து நின்று விடுகிறது. இந்த இரைச்சலில் என்னத்தை மேளம் கொட்டி, நாகசுவரம் ஊதி காசு வாங்க. ஒரு காப்பித் தண்ணி கூட கிடைக்காமல்…




Read more »