Monthly Archives: August 23, 2008, 6:26 am

சில புதிய வெண்பாக்கள்

 

சமீபத்தில் எழுதியவை

காலம் முடியவே கண்ணாடிப் பெட்டியில்
ஞாலம் புகழ்ந்திடும் நந்தலைவர் – ஓலமிட்டே
சுற்றும் ஒலிவாங்கி சூழத் திறந்ததே
வெற்றிகளை வெல்வாய் விரைந்து

காவியும் பச்சையும் காற்றில் அசைந்திட
ஏவிய கைகள் இயங்கிடும் – பாவிகள்
பாஸ்பரஸ் கொண்டு எரித்ததின் சொச்சமே
ஈஸ்வர அல்லதெரெ நாம்.

பாட்டுக்குப் பாட்டெடுத்து

 

குங்குமம் புதிய பத்தி – அற்ப விஷயம்

‘தொட்டால் பூ மலரும்’. கோவளம் கடற்கரை ஓரமாக ஓர் அழகான மாலைப் பொழுதில் எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே வருவார். எதிர்த் திசையிலிருந்து சரோஜாதேவி மெல்ல நடந்தபடி ‘தொடாமல் நான் மலர்வேன்’ என்று எசப்பாட்டு பாடுவது அதே நிதானத்தோடு இருக்கும். அந்த நிதானத்துக்கு ஒரு அழகு உண்டு. ஒரு கம்பீரம் உண்டு. ஒவ்வொரு அடி முடிவிலும் ஒலிக்கும் கை தட்டும் சத்தம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு எதிர்பார்க்க வைக்கும். பாட்டு முடிந்து வெகுநேரம் ஆனாலும் மனதில் தாளம் கொஞ்சமும் தவறாமல் தொடர்ந்தபடி அந்தக் கைதட்டு கூடவே வரும். செவ்வானமும் கடலும் பின்னணியாக எம்.ஜி.ஆர் நடந்து கொண்டே இருப்பார். இருந்தார். அந்தப் பாட்டுக்கு கோட் – சூட் மாட்டி விட்டு வேறே ஒன்றாக அடையாளம் காட்டும் வரைக்கும். ரீ-மிக்ஸின் உபயம் இது.

காலர் வைத்த சட்டை

குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி

“சட்டை போட்டிருக்கீங்களா சார்?” நான் கேட்டேன். தொலைபேசியில் எதிர்முனையில் ஒரு வினாடி மௌனம். ‘புரியலையே’. மும்பையிலிருந்து வாரக் கடைசியில் சென்னை வந்திருக்கும் பிரபல இயக்குனர் அவர். சர்வதேச அளவில் அவருடைய கலைப்படங்கள் விருதுகளை வாரிக் குவித்தவை. ‘ஓய்வாக உட்கார்ந்து சாப்பிட்டபடியே இலக்கியம், சினிமா பற்றி எல்லாம் பேசலாம்’ என்று அவரிடம் யோசனை சொன்னது நான் தான். எங்கே உட்கார்ந்து பேசுவது?

பத்திரிகையாளரும் நேற்றைய விளையாட்டு நட்சத்திரமுமான இன்னொரு நண்பர் உதவிக்கு வந்தார். இயக்குனருக்கு அவரும் சிநேகிதர்தான்.

பத்து என்ன, ஆயிரமும் அதற்கு மேலும்

 

ஆகஸ்ட் 19, 2008 செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு எழுதியது

எப்படி வந்திருக்கு? தாடியும் தீட்சண்யமான விழிகளுமாக எனக்கு முன்னால் நின்று கேட்கிறார். நிறையச் சொல்ல வேணும். சம்பிரதாயமான வார்த்தைகளோ புகழ்தலோ இகழ்தலோ இவரைக் கொஞ்சமும் பாதிக்காது என்று தெரியும். மனம் திறந்து பேச ஒரு சொல்லைத் தேட வேண்டியிருக்கிறது. பின்னால் விம்மல் ஒலி. மூத்த சகோதரி வயதில் அந்த நகைச்சுவை நடிகை அழுதபடி இவர் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறார். சொல்ல இதுக்கு மேல் ஒண்ணும் இல்லை.

அரங்கம் நிறையத் திரையுலகத்தில் ஹூ இஸ் ஹூ எடுத்தால் இடம் பெறக்கூடிய வெகு முக்கியமான புள்ளிகள். குசேலனில் தொடங்கி சாக்லெட் கிருஷ்ணன் வரை தமிழ் சினிமாவை பாதித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள். 

நகரக் கவிஞர்

 

வைதீஸ்வரன் பற்றி

Zip செய்து வைத்த ஏகப்பட்ட பழைய கோப்புகளை விஸ்வரூபம் நாவல் எழுதும்போது தேடும் வேளையில் கண்ணில் பட்டது – நான்கு ஆண்டுகளுக்கு முன் ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசியது. மாலன் தலைமை வகித்ததாக நினைவு.

*************************************************

வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள் நுழைவதாக இல்லை. ஆனாலும் எனக்குப் பேச நிறைய இருக்கிறது.

நேசமான மனிதர். வாய் நிறையச் சிரிப்பும் அன்புமாக வாசலில் வந்து வரவேற்கிறார். எழுத்தோ, ஓவியமோ, படைப்புகளைப் பேச விட்டுத் தான் ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும் சாதனையாளர்.மொழிபெயர்ப்பில் அவர் கவிதையைப் படித்து விட்டு அசாமிலிருந்தும், பீகாரிலிருந்தும் முகம் தெரியாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதும் கடிதங்கள் அவருடைய படைப்பு ஆளுமையை இனம் காட்டும். தேடிப்போய்ப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்குப் புலப்படும் உன்னதம் அது.