Archive For டிசம்பர் 31, 2022

2023 புத்தாண்டு தீர்மானங்கள்

By |

2023 புத்தாண்டு தீர்மானங்கள்

என் புத்தாண்டு 2023 தீர்மானங்கள் ———————————————- 1) தலை முடிக்கு இனிச் சாயம் பூச மாட்டேன் 2) வாசிக்க எடுத்த புத்தகங்களில் சிலவற்றையாவது முதலில் இருந்து இறுதி வரை படித்து முடிப்பேன் 3) இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளனாக மட்டும் இருப்பேன் 4) இப்போதே அப்படித்தான் என்றாலும், உப்பும், உரைப்பும், எண்ணெயும் இன்னும் குறைத்து உண்பேன் 5) போயிருந்த திருமணங்களில் ஓதியிட்டுக் கொடுத்து அலமாரி முழுக்க இடம் அடைக்கும் எட்டு முழ ஜரிகை வேட்டிகளை அடிக்கடி உடுத்திக் கொள்வேன்,…




Read more »

இந்தியில் வந்த நொரநாட்டியம்

By |

இந்தியில் வந்த நொரநாட்டியம்

நண்பர் திருமதி அனுராதா கிருஷ்ணசாமியின் சரளமான மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது, ‘கடவுளுக்கென ஒரு மூலை’, சிறுகதைத் தொகுப்பு. சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு. மொத்தம் 14 கதைகள் -பஞ்சாபி, ஹிந்தி, ஒடியா, உருது, டோக்ரா, வங்காளி, குஜராத்தி, கன்னடம் என்று வரும் சிறுகதைகள் அத்தனையும் அந்தந்த மொழியில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. ஆங்கில, ஹிந்தி வழியே தமிழுக்கு மொழிபெயர்ப்பானவை. கடைசிக் கதையான குஜராத்திச் சிறுகதை ’கதவு’ இப்படித் தொடங்குகிறது – ஹிமான்ஷி ஷேலாட் எழுதியது- // முட்டாள்ப்…




Read more »

வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள்

By |

வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள்

அடுத்து வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் – எழுத்து வெளியீடாகக் கீழ்க்கண்ட என் நூல்கள் வெளியாகும் – 1)நாவல் ‘தினை’ – அசுர வேகத்தில் இறுதி இருபது அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முடித்து விடலாம் என்று நம்புகிறோம் பிறக்க இருக்கும் ஆண்டு 2023 உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி நாவல் வெளியீடு இருக்கும் 2)சென்ற புத்தகக் கண்காட்சியின் சி’றப்பு வெளியீடுகளில் ஒன்றான ‘பெருநாவல் மிளகு’ 3) புதுப் பதிப்பாக…




Read more »

பப்பட வெட்டும் கொப்பியளவும் பாரதப் புழை தீரமும்

By |

பப்பட வெட்டும் கொப்பியளவும் பாரதப் புழை தீரமும்

நினைவுகளின் ஊர்வலம் பத்திரிகையாளரும், ஆஷியாநெட் தொலைக்காட்சி வைஸ் சேர்மனும் ஆன வி.கே. மாதவன் குட்டியின் ‘ஓர்மகளுடெ விருந்நு’ என்ற மலையாளச் சுயசரிதையை இரண்டாம் முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன். முதல் தடவை படித்தது, ‘கலாகௌமுதி’ பத்திரிகையில் பத்து வருடம் முன்னால் நம்பூத்ரியின் உயிரோட்டமுள்ள கோட்டுச் சித்திரங்களோடு இந்த வாழ்க்கை வரலாறு வெளியான நேரத்தில். அப்போது அந்தப் பத்திரிகையே ஓர் ஒளி வட்டத்தில் இருந்தது. கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் வாழ்க்கை வரலாறு, அச்சுத மேனோனின் டயரிக் குறிப்புகள், மாதவிக் குட்டி…




Read more »

ஓடப் பாட்டு

By |

ஓடப் பாட்டு

கண்ணன் காட்சி ஓடக் கும்மி (நௌகா சரித்திரம்) சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய நாட்டிய நாடகமான ‘நௌகா சரித்திரம்’ பற்றி நேற்று டாக்டர் பிரமிளா குருமூர்த்தி நடத்திய சொற்பொழிவு-நிகழ்த்திக் காட்டுதலில், எனக்கு இருந்த இரண்டு அடிப்படை சந்தேகங்கள் தீர்ந்தன. 1) நௌகா என்றால் படகு என்று தெரியும். தியாகராஜர், படகு என்று சேர்த்துப் பார்த்து, இது அவருக்குப் பிரியமான ராமபிரானையும் அவனுக்குக் கங்கையில் படகோட்டிய குகனையும் பற்றிய படைப்பு என்று இதுகாறும் நினைத்திருந்தது தவறு. நௌகா சரித்திரம்,…




Read more »

எம்.டி.வாசுதேவன் நாயரும் எம்.டி.ராமநாதனும்

By |

எம்.டி.வாசுதேவன் நாயரும் எம்.டி.ராமநாதனும்

என் மின்நூல் ‘ஏதோஒரு பக்கம்’ புத்தகத்திலிருந்து மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல் எஞ்சியது 9) நான்: மலையாளத்தின் பாரம்பரிய வரலாற்று புனைவுகளில் கொடியவனாகச் சித்தரிக்கப்படும் ‘சதியன்’ சந்துவைக் கதாநாயகனாக்கி ஏழெட்டு வருஷம் முன்பு, ‘ஒரு வடக்கன் வீரகாதை’ திரைக்கதை உருவாக்கினீர்கள். இப்போது நீங்கள் திரைக்கதை அமைத்த ‘பழசிராஜா’வில் இன்னொரு சந்து வருகிறான். பழையம்வீடன் சந்து. வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்ததாகக் காட்டியிருக்கிறீர்களே இந்தச் சந்துவை? அவனும் வேறு மாதிரி இருந்திருக்கலாம் இல்லையா? எம்.டி: கொலைக்கும் துணிந்த சதியன்…




Read more »