Archive For ஏப்ரல் 30, 2022

இரா.முருகன் நேர்காணல் – எம்.டி.வாசுதேவன் நாயர் – டிசம்பர் 2009

By |

மலையாள இலக்கியத்தில் ஆறு பத்தாண்டுகளாக மிகப் பெரும் ஆளுமையாக விளங்கி வரும் திரு. எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் டிசம்பர் 2009-இல் சென்னை வந்திருந்தபோது நான் சந்தித்தேன். குமுதம் தீராநதி, அமுதசுரபி (குறுகிய வடிவம்) மற்றும் என் மின்நூல் ‘இதுவும் அதுவும் உதுவும்’ ஆகியவற்றில் இடம் பெற்ற நேர்காணலில் இருந்து – ——————————————————————— எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல்                 இரா.முருகன்   எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல்…




Read more »

மிளகு பெருநாவலில் இருந்து – காவாலிப்பய மீன்

By |

மிளகு பெருநாவலில் இருந்து – காவாலிப்பய மீன்

மிளகு பெருநாவலில் இருந்து – காவாலிப்பய மீன் ————————————– லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். வழக்கமாக பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்த வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம்.   சாயந்திரம் சூரத்துக்கும், அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள்.   இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து…




Read more »

இது ஜெயமோகனம் அல்ல

By |

இது ஜெயமோகனம் அல்ல

அன்பு நண்பர் ஜெயமோகன் இன்று அறுபது வயது நிறைவு காண்கிறார். அவருக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். இது ஜெயமோகனம் அல்ல’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை jeyamohan60 blog-இல் பிரசுரமாக இருக்கிறது. கட்டுரையில் ஒரு சிறு பகுதி –   ஆக, ஜெயமோகனைப் பார்க்காமலேயே ரொம்ப நாள் போனது. கணையாழி குறுநாவல் தேர்வு தொடர்ந்தது. நான் ராத்திரி வண்டி எழுதித் தேர்வானால், ஜெயமோகன் டார்த்தீனியம்,  நான் படம் குறுநாவல் எழுதினால், ஜெயமோகனின் கிளிக்காலம், நான்…




Read more »

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

By |

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும்

பாரதி போற்றுதும், வவேசு போற்றுதும் ————————————— அன்புக்குரிய நண்பர் டாக்டர் வ வே சுப்பிரமணியன் அவர்கள் Valiyur Subramanian தொடர்ந்து ஐம்பது புதன்கிழை மாலை (இந்திய நேரம்) 6:30 முதல் இரவு 7:30 வரை ஒரு வாரம் தவறாமல் பாரதி புதையலில் அமிழ்ந்து கண்ணன் பாட்டு மற்றும் புதிய ஆத்திசூடி என்று ஒவ்வொன்றாக பாரதி படைப்பு்களை நுண்ணிய ரசானுபவத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.     குவியம் இணையப்பத்திரிகை மற்றும் இலக்கிய அமைப்பு ஒருங்கமைத்த இலக்கிய அமர்வுகள் இவை….




Read more »

ஆலப்பாட்டு வயசன் பறந்ததும் இதர சங்கதிகளும் – அரசூர் வம்சம் நாவலில் இருந்து

By |

எடி நாணி, கூத்தம்பலத்திலே என்ன இன்னைக்கு இத்தனை தெரக்கு ? பகவதிக் குட்டி கூட வந்த நாராயணியைக் கேட்டாள். ஓ. உனக்கு யாரும் சொல்லலியா ? சாக்கியார் கூத்தாச்சே. சிரிச்சுச் சிரிச்சு வயிறு கிழிஞ்சு போகும். ஆனாக்க என்ன ? கன்னிப் பொண்ணுகள் ராத்திரியில் அம்பலத்துலே நிக்கக் கூடாதுன்னு வீட்டைப் பாக்க நெட்டோட்டம் ஓட வச்சுடுறதுதானே பதிவு ? கன்னி கழியாத பெண்களுக்கு அம்பலமும் கூட இருட்டி வெகுநேரம் ஆனபிறகு பத்திரமான இடம் இல்லை. மூல மூர்த்திக்கு…




Read more »

வாவ் தமிழா இணைய இதழில் என் சிறுகதை ‘ஆனைச் சத்தம்’

By |

குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை மகன் மருத்துவர் ஜவஹர் பழனியப்பன் தொடங்கியுள்ள இணையத்தளம் ‘வாவ் தமிழா’. அங்கே பணிபுரியும் நண்பர் தளவாய் சுந்தரம் கேட்டதால் நான்  எழுதிய சிறுகதை ’ஆனைச் சத்தம்’. https://wowtamizhaa.com




Read more »