Archive For டிசம்பர் 22, 2020

மார்கழிக் குளிரில்

By |

மார்கழிக் குளிரில்

சீரியல் சிறுவிளக்குச் சிங்காரம் செய்து இரவு படிப்பித்தபடி கண்சிமிட்டி நின்ற வன்மரங்கள் கண்ணயர்ந்த விநாடி பம்மிப் பதுங்கி நுழையும் காலைக்குளிர் மெய்தழுவி ஓர்நொடி தவழ்ந்து ஓடிமறைந்து மறுநொடி மறுபடியும் புறம்புல்கும் முன்பனிக் காற்றை இந்தப் படம் சொல்லும்வரை ஏதோ எழுதித்தான் தீரணும்




Read more »

1960-களில் ஒரு மார்கழிக் காலை – அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து

By |

1960-களில் ஒரு மார்கழிக் காலை – அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து

நாலே கால் மணி. கோவிலுக்குப் போகிறவர்களின் நடமாட்டம் மட்டும் இருந்த தெரு. லாட்ஜ் வாசலில் இளம் பெண்களாக குஜராத்திகள் நின்று ஏதோ சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். முகத்தைப் பார்த்தால் ஒவ்வொருத்தியும் உன்னதமான அழகி. பின்னால் இருந்து பார்க்க அவர்கள் அனைவரும் சங்கரனுக்குக் கதகளி ஆட்டக்காரர்களை நினைவு படுத்தினார்கள். யாரோ சங்கரனின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். மெல்ல நடக்கிறான் அவனும். பக்கத்தில் இதமான கிராம்பு வாடை. பழையதானாலும் பாந்தமாக, ஒரு அழுக்கு இல்லாமல் கசங்கல் காணாமல் இருக்கிற ஒன்பது…




Read more »