ஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்

ஓடியே பந்துவீசி ஓங்கி அதையடித்துத்
தேடியே சிக்ஸராகத் தேவதையர் – ஆடிடுவர்
ஆணாடப் பெண்நடனம் அஃதுபோல் தாமடித்துப்
பெண்ணாட ஆண்நடனம் என்று?

https://www.indy100.com/article/nfl-male-cheerleaders-women-new-orleans-saints-8534031

ஆடிப் பெருங்காற்றில் அம்மி பறப்பதுபோல்
ஆடி அலைக்கழிந்து செய்திசொல்வோம் – தேடி
புயல்தகவல் பார்த்து செயல்மறக்கப் பின்னால்
பயல்நடப்பான் சும்மா அசைந்து

https://www.indy100.com/article/hurricane-florence-latest-updates-path-weatherman-video-death-toll-8538841

இங்கேயும் தேசபக்தி என்றால் இதுவென்று
சங்கூதக் கூட்டமுண்டு கண்பனித்து – பொங்கி
குதிப்பார் கொடியசைப்பர் குப்பாயம் போடார்
எதிர்கொள்வர் ஃப்ளாரன்ஸ் புயல்

https://www.indy100.com/article/hurricane-florence-latest-shirtless-man-american-flag-myrtle-beach-south-carolina-8538871

பானாசோ நிக்கமைத்து வேணும்போல் பேரொலியை
தானா தரும்ஸ்பீக்கர் பேர்வெற்றி – வேணுமென்று
தேடினால் தென்படும் மெக்ஸிகோவில் சப்ஜாடாய்
ஆடப்பா காதுகிழித் தாடு

Let’s make some noise: Panasonic designs stronger speakers for Mexico

’ஐரோப்பா ஐரோப் பியர்க்கே அகதியெல்லாம்
பையவூர் செல்திரும்பி பாவமறும் – அய்யா’
தலாய்லாமா சொற்பொழிந்து தம்மில்லம் போனார்
பலகாலம் பாரத் வசிப்பு

https://www.independent.co.uk/news/world/europe/dalai-lama-europe-refugee-crisis-immigration-eu-racism-tibet-buddhist-a8537221.html

தேசீய கீதநேரம் யோசிக்கா தேநில்லு
பேசுபொருள் தப்பென்றாய் பின்னுதைத்து – ஏசிடுவோம்
ஊர்விலக்கு சின்னப்பெண் உள்வரப் பள்ளிதடை
வேறெங்கே ஆஸ்த்ரேலி யா

https://www.indy100.com/article/australian-girl-sit-national-anthem-nine-year-old-school-expelled-8537346

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன