நயாகரா பாடல்கள்

நயாகரா பற்றியே நல்லகவி செய்ய
தயாரா முதலெதுகை வேணாம் –தயவுசெய்
நண்பா புலர்காலை சிற்றின்பம் எண்ணாது
வெண்பா இயற்றலாம் வா

நயாகரா பற்றியே நல்லகவி செய்ய
தயார்காண் தொடக்கம் வயாக்ரா –அயராதே
நண்பாஎம் டைம்ஸோனில் நள்ளிரவு என்தோழி
செண்பா அருகில் இருப்பு

மண்ணரிப்பு ஆய்வாம் மடைமாற்றி நய்யாக்ரா
தண்ணியின்றித் தான்தூர்த்துத் தக்கவழி – கண்டாரே
திண்ணம் அருவி திரும்பப் பெருகிவரும்
மண்கொள்ளை அங்கில்லை காண்

https://www.dailymail.co.uk/news/article-1338793/Niagara-Falls-ran-dry-Photos-moment-iconic-waterfall-came-standstilll.html

The day Niagara Falls ran dry: Newly-discovered photos show the moment the iconic waterfall came to a standstill

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன