சிதறல்கள் 9.10.2009

 

‘உன்னைப் போல் ஒருவன்’ மகத்தான வெற்றி பெற்ற பிறகு, எழுத்தாளன் என்ற பிம்பம் திடீரென்று (தற்காலிகமாக இருக்கட்டும்) காணாமல் போய், திரைக்கதை-வசனகர்த்தா அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயம்.

பத்திரிகைகளில் இருந்து தொலைபேசும் உதவியாசிரியர்கள் கதையோ கட்டுரையோ கேட்காமல் சினிமா பற்றித்தான் வேண்டுகோள் விடுக்கிறார்கள், ‘கமல் சாரோடு உங்க நட்பு’, ‘உன்னைப் போல் ஒருவன் ரசமான அனுபவங்கள்’ இன்னோரன்ன தலைப்புகளில் 450 வார்த்தகளுக்கு மிகாமல் எழுத வேண்டியிருக்கிறது.

‘கிளைமாக்ஸ் வசனத்தை கொஞ்சம் அனுப்புங்க’ – பி.ஆர்.ஓ நிகில் முருகன் அவசரமாக தொலைபேசுகிறார். உங்க புகைப்படமும் வேணும். பத்திரிகை கேட்கறாங்க. சார் உங்க கிட்ட்டே கேட்டுக்கச் சொல்லிட்டார்’.

நான் கமல் அவர்களுக்குத் தொலைபேசி உறுதி செய்து கொள்கிறேன். ‘சரி, இதைக் கேளுங்க’. அவர் உற்சாகமாகத் தான் எழுதிய புத்தம்புதுக் கவிதை ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ படித்துக் காட்டுகிறார்.
ஒரே ஷாட்டில் சீராகச் சொல்லி முடிக்கிற ஷார்ட் ஃப்லிம் மாதிரிக் கதையாடல் உள்ளா கவிதை. கமல் எழுதியிருக்காவிட்டாலும் நல்ல கவிதை என்று நிச்சயம் சொல்லலாம்.

பொங்கலுக்கு கவிதைத் தொகுப்பு ரிலீஸ் பண்றாப்பல உத்தேசமா?

நான் கேட்க, கமல் சிரிக்கிறார். ‘அப்படித்தான் வருடா வருடம் சொல்றாங்க’.

இந்த வருடம் பார்க்கலாம்.

8888888888888888888888888888888888888888888888888888888888

உ.போ.ஒ வெளியான பிறகு ஜிமெயில், என் சொந்த இணையத் தள் அஞ்சல் ரெண்டையும் திறந்தால் கொட்டுகிற் கடிதங்களில் பாராட்டு தவிர கண்ணை ஈர்ப்பது – ‘டே பா.பன்னாடை’ ரக அன்பான அழைப்புகள். கருவறுக்கப் போவதாக மிரட்டல்கள். சகல பக்கங்களில் இருந்தும் மத வேறுபாடு இல்லாமல் வசவு மழை பொழிகிறவர்கள் கமல்ஹாசனையும் விட்டு வைக்கவில்லை. ஒருவர் சிரத்தையாக திட்டி வந்த விமர்சனங்கள், பாராட்டி வந்த விமர்சனங்கள், மொக்கை வகையறா என்று நிறைய் மெனக்கெட்டு யு.ஆர்.எல்களைத் தொகுத்து அனுப்பி இருந்தார். இன்னொருவர் கடிதம்-1, 2, 3 என்று சீரியல் நம்பர் போட்டு கவனமாக விமர்சிக்கிறார். எல்லாருக்கும் நன்றி. அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ‘சார் உங்க பேர் தினகரன் விளம்பரத்திலே நடுவிலே சிவப்பு கலர்லே வந்திருக்கு’ என்று எடுத்து வந்து காட்டியபோது சந்தோஷமாக இருந்தது. படம் பார்த்து பிடித்தவர்களில் அவரும் ஒருவர். Established ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி ரசிகர்.
888888888888888888888888888888888888888888888888888888888

‘கமலும் தமிழும்’ விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கு பெற மனுஷ்யபுத்ரன், எஸ்.ரா, பிரளயன், சேரன், சசிகுமார் போன்றோரோடு மேடையைப் பகிர்ந்து கொண்ட ஒரு வாரம் கழித்து படம் ப்ரீவ்யூவில் திரும்ப சேரனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். வயதான ஒரு தாடிக்காரரை அன்போடு கையைப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்த கமல் என்னையும் சேரனையும் அருகே அழைத்தார்.

‘இதான் என் ஆருயிர் நண்பன் ஆர்.சி.சக்தி’.

‘உணர்ச்சிகள்’, ‘மனிதரில் இத்தனை நிறங்களா’, ‘சிறை’ என்று வித்தியாசமாகத் திரைப்படங்கள்ள் கொடுத்த சக்தியை இன்று ஏறக்குறையத் தமிழ்த் திரையுலகம் மறந்து விட்டது. அவருக்கு ஒரு நஷ்டமும் இல்லை இதனால்.

படம் முடிந்த பிறகு வெகுநேரம் சக்தி ‘உணர்ச்சிகள்’ படத்துக்காக கமல் லைட்பாய் முதல் காமிரா உதவியாளர், ஒலிப்பதிவு உதவியாளர், டைரக்ஷன் அசிஸ்டெண்ட் மற்றும் நடிகர் என்று எடுத்த தசாவதாரம் பற்றி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார். ‘எதுக்க்கு சக்தி அதெல்லாம்’ என்று கமல் தடுத்தாலும், ‘சும்மா இருப்பா’ என்று சக்தி தொடர்ந்த வண்ணம் இருந்தார்.எதையும் எதிர்பார்க்காத நல்ல நட்பு அவருடையது. கமல் தன்னைப் பாதித்த மனிதர்கள் பட்டியலில் மறக்காமல் குறிப்பிடுவது சக்தியை, காலம் சென்ற அனந்து, நாகேஷ் ஆகியோரை..

ப்ரிவ்யூ முடிந்த பிறகு காரில் இருந்து எடுத்து வந்த காகிதக் கட்டைப் பிரித்து திரு சரத்குமார் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தும் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் பிரதி. புரட்டிப் பார்த்தேன். ‘க்ளோபல் வார்மிங்க்’ போன்ற கனமான விஷயங்கள் பற்றிப் பத்திரிகை ஆசிரியர் எழுதிய கட்டுரை கண்ணை ஈர்த்தது. ப்டிக்க எடுத்து வைத்தேன். வேறு யாரோ பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். சரத்துக்கு கோஸ்ட் ரைட்டர் கிடையாது என்று நம்புகிறேன். புத்தகத்தின் ஒரு பக்கத்தில் ‘கமல் படங்களில் வரும் காட்சிகள் முன்கூட்டியே வருங்காலத்தைச் சொல்கிறவை’ என்று இணையத்தில் கொஞ்ச நாளாகச் சுற்றிக் கொண்டிருந்த செயின் மெயிலை ஒரு பக்கம் போட்டு வேஸ்ட் செய்திருப்பது கண்ணில் பட்டது. அதுக்குப் பதிலாக அந்துமணியை ஒரு பிடி பிடித்திருக்கலாம்! சாப்ட் டார்க்ட்டா ஹார்ட் டார்கெட்டா என்று திரையுலகத்தில் தான் கேட்க வேண்டும்
8888888888888888888888888888888888888888888888

விஜய் டிவியின் கமல் 50 நிறைவு நாள் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு மனதைத் தொட்டது. அந்த உயரத்தில் இருக்கிறவர் இப்படி தன்னடக்கத்தோடும் மனதில் இருக்கும் மரியாதையும், நட்பும் அன்பும் வார்த்தையில் பிரதிபலிக்கும்படியும் பேசியது கமல் முதல் எல்லோரையும் நெகிழச் செய்த்து. உன்னதமான கலைஞர் மட்டுமில்லை, உத்தமமான மனிதர் ரஜினி என்பதை நிலைநாட்டி விட்டார். ஹாட்ஸ் ஆஃப் டு சூப்பர் ஸ்டார்.

பிரசாத் பிலிம் இன்ஸ்ட்யூட் முதல்வர் திரு ஹரிஹரனோடு பெட்ரோ ஆல்மடோவர் படங்களில் மெலோடிராமா, லூயி புனுவலின் சர்ரியலிசம், போண்டெகார்வொவின் ஆவணப்படம் மாதிரியிலான திரைக்காவியம் ‘ பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ என்று வாய் ஓயாமல் பேசிக் கொண்டு ஆட்ட பாட்டங்களை ஒரு மாதிரி பார்த்து முடிக்க ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே ஆகிவிட்டது. கமல் முடிவுரை அன்றைய நிகழ்ச்சியில் இன்னொரு மைல்கல்.
————————————————————————–

கடந்த ஞாயிறு கோவையில் ப்லிம் க்ளப் சார்பில் ‘உ.போ.ஒ’ கலந்துரையாடல்.கவிஞர் புவியரசுவும், ஹிந்து சுதேஷ் காமத்தின் நண்பரும் குருவுமான ராகேஷும் மற்றவர்களும் ஆழமாகப் படத்தை அவதானித்துக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னபோது, இணையத்தில் கேட்கப்பட்ட ‘ குப்பன் – சுப்பன்’, ‘பச்சை வயரை கட் செய்திட்டு சிவப்பையும் நீலத்தையும் இணையுங்க’ போன்ற வசனக்ர்த்தா நினைத்துக் கூடப் பார்த்திராத விஷயங்கள் பற்றி எல்லாம் கேள்விகள் பறந்தன.பதில் சொன்னேன்.

படத்தை இத்தனை பேர் பார்த்து அவை நிறைந்து வந்து கேட்கிறார்களே, அது போதும்.
888888888888888888888888888888888888888888888888

கோவிந்த் நிஹலானி திரைமேதை என்பதில் சந்தேகமே இல்லை. திரைக்கதைக்கு ஒன் – லைன் கொடுத்து விட்டு நான் அதை விரிவாக்க விரிவாக்க, மற்ற பரிமாணங்களை மென்மையாக முன்வைத்து வியக்கச் செய்கிறார். ”The power of a joke’, ‘the sub text of a humorous narrative’, ‘cathartic effect of a joke’
போன்ற பரிமாணங்களை அடுத்தடுத்து சேர்க்கிறார். எழுத challenging ஆக இருக்கிறது. நான்கு சிறுகதைகளில் ஒன்று தமிழாக இருக்கக் கூடும்.
————————————————————————

லண்டன் டயரி படித்தீர்களா?

வெளியிட்டாசிரியர் முகிலுக்கு இன்றைய இந்து பேப்பரில் ராண்டார்கை புகழாரம் சூட்டியிருக்கிறார். சந்திரபாபு குறித்த அவருடைய புத்தகத்துக்காக. சியர்ஸ் முகில்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன