கல்லூரி சிநேகிதியின் மரணம்

அப்புறம் ஒரு நாள் பார்க்கலாம் என்று
காணாதிருந்த கல்லூரித் தோழி
நேற்று மறைந்த செய்தி வந்தது.

இத்தனை ஆண்டுகளில் எத்தனை முறை
நினைத்துக் கொண்டேன் அவளை?

ஒருதடவை ராப்பகல் மயங்கி
நீளும் விமானப் பயணத்தில்
ஞாபகம் வந்தாள்; பக்கத்து இருக்கையில்
அவள் ஜாடையில் யாரோ உறங்கியபடிக்கு.

வேம்பநாட்டுக் காயலில் மழை வந்த
பிற்பகலில் படகேறி கடல் முகத்தில்
திரும்புகையில் கடல் பறவை கூவலோடு
அவள் குரலும் எழுந்து தேய்ந்தது
அருகே நகரும் படகிலிருந்து.

பனிபொழியும் காலைநேரம்
பிழைக்கப்போன நகர வீதியில்
கேசவர்த்தினி வாசனையோடு
என்னைக் கடந்து போனவள்
முகம் பார்த்தேன் அவளில்லை.

நடந்தும் பறந்தும் ஊர்ந்தும்
நகர்ந்த சில பொழுதில்
நினைவில் வந்தவளை மற்ற நேரம்
மறந்து தான் போனேன்.

நேற்று முன்தினம் ராத்திரிக் கனவில்
புன்னகை பூசி அவள் வந்து போனதாக
இந்தக் கவிதையை முடித்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.

இரா.முருகன்
27.11.2019

இந்தக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இதோ – என் நண்பர் ஸ்ரீவத்ஸா (Sri N Srivatsa) மொழியாக்கம் செய்தது

Kaal kare so aaj kar. Aaj kare so ab’. If it has to be done in time, do it today. If it’s to be done today, do it now.

When yesterdays become vague memories and tomorrows are always out of reach, what is certain is only the ‘now’. Be that a phonecall, email or personal visit, without procrastinating, immediately do whatever you have to do somehow, as my dear friend, poet and much more, EraMurukan Ramasami, says in this poignant poem in Tamil reproduced with his prior permission together with an English translation by moi:

News reached about the death of a girl yesterday,
a friend from college,
whom I did not see
and had thought of meeting some other day.

How many times
in all these years
did I think of her?

On a long flight once
when one wasn’t conscious
of the night or day,
she came to mind
as someone resembling her
was sleep in the next seat.

On a rainy day afternoon
in a boat down the backwaters of Vembanad
turning back from the sea,
with the call of the seabird,
her voice too rose and faded
from the boat moving alongside.

On a road in the city one misty morning
where I went to earn a living,
I looked at the face of the woman
who went past me
with the fragrance of Keshavardhini .
It wasn’t her.

She who came to mind those times
that went walking, flying and crawling,
I did forget at other times.

If this poem were to be
concluded with her appearing
in my dream smiling
the day before yesterday night,
how nice would it be!

~Sri 13:10 :: 27.11.2019 :: Noida

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன