செய்யுள், கவிதை இன்று

நடேசன் பூங்கா பரப்பில்
நாலில் ஒரு பங்கு எங்கள்
நகராட்சிப் பூங்கா.
பூங்கா என்பதற்குள்
சுற்றி வந்துவிடலாம்.

செண்டிமீட்டர் முன்னே நகர்ந்து
நத்தை ஓட்டம் சொத்தை நடை
பெஞ்சில் இருந்து கதைப்பவரும்
ஜென் குருமார் போல
அவ்வப்போது ஒரு சொல் உதிர்ப்பார்.

கைத்தடியைப் பிடரியில் செருகி
ஆண்டென்னா போல் நீட்டி நிமிர்த்தி
ஆண்டவனோடு தொடர்பெல்லையில்
அங்கொருத்தர் குதிக்கிறார் ஓரத்தில் மெல்ல.

நடேசன் பூங்காவில் சைக்கிள் நிறுத்தி
நாவல் எழுதினாராம் அசோகமித்ரன்
நகராட்சிப் பூங்காவில் நோட்புக் கணினியில்
நாளும் எதையோ எழுதும் இளைஞரை
எல்லோரையும்போல் எழுதுவது
நாவலா எனக் கேட்டேன் ஏமி
காவலா? என்றார்; ஒன்றுமிலை
இன்னொரு நாள் விசாரிப்பேன்
அசோகமித்ரனை அவர் அறிவாரோ?

நடையானந்தா 20.06.2019

·
காலை தலைகுளித்து கச்சிதமாய் வேடுகட்டி
மாலைப்பூ வாடியது ஓரமிட்டு – பால்வாங்கி
பின்னிவைக்கக் கூந்தலை நன்குலர்த்தும் யந்திரமாய்
மின்துடைப்பான் தந்தது யார்?

மின் துடைப்பான் – vacuum cleaner

Lost in History‏
Hair dryer, 1920s.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன