புதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்

மனிதச் சதுரங்கம் – 1905 ரஷ்யா

மதகுருக்கள் சக்கர வர்த்தினிமா மன்னர்
உதவுபரி கால்படை வேழம் பதவிதந்து
கோட்டையிலும் மாளிகை குச்சினிலும் தான்நிறுத்தி
ஆட்டிவைத்துப் பார்ப்பான் அவன்.

இரா.முருகன் https://t.co/IbpJ3KfyJL

’’மதிலரங்கக் கோயில், மனதுக்குள் வாழும்
புதிர்ரங்க ராஜா பதிலை -எதிர்வந்து
அம்மணக்(மகா நிர்வாணம்) கண்ணாவுன் ஆட்சிபொம்ம லாட்டத்தில்
எம்மனத்துள் நானார்(நான் யார்) (தலை) எழுத்து!’’….கிரேசி மோகன்….!

***************************************************************************************

பி.பி.சி பிரிட்டீஷ் இளவரசர் ஹாரி திருமணம் மே 19-இல் நடைபெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்தது. அதைக் காணத் தொலைக்காட்சி லைசன்ஸ் எடுக்க வேண்டியதில்லை என்று அறிவித்தது. மற்றபடி இங்க்லாந்தில் டி.வி லைசன்ஸ் கட்டாயம்.

காசெதற்கு டீவிகாண பீபீசி சொன்னது
ஓசியில் காணவாரீர் உட்கார்ந்து பேசி
அவசர மின்றியே ஆரிசார் வெட்டிங்
அவரவர் வீட்டில் விருந்து

இரா.முருகன்

ஆரிசார் – Prince Harry marrying Meghan on 19th May

’’ஆரிமார்கிள் வெட்டிங் அனைவரும் காணலாம்
பாரீர் பிபிஸி (ஒளி)பரப்பிலே -வாரீரே
வீதி விருந்துண்டு வீட்டில் சமைத்ததை
ஓதிவிட ஓர்பவுண்டு ஓய்’’….கிரேசி மோகன்….!

*********************************************************************************
மாயன்கா லண்டரில் மண்ணுலகம் சுற்றாமல்
ஓயும்நாள் தான்குறித்தார் ஓர்மேயில் போய்முடியும்
பட்டென் றழியாது பாக்கி பலவருடம்
இட்லிவடை உண்ணலாம் வா

இரா.முருகன்
ஓர்மேயில் – ஒரு மே மாதம்
—————————————————–
’’கால்அண்டர்(UNDER) கன்று களிப்பாய் வருடிடும்
மால்அன்றே உண்டபின்னர்(பூமி) ஆலிலையில் -கால்அண்டர்(UNDER)
பாயும்நீர்(கட்டை விரல்) கங்கை பருகிடப் பற்றிய(ஒதுங்கினார் குருவாயூர்)
மாயனே ஆயனாம் மால்’’….கிரேசி மோகன்…..!
(அல்லது)மாயனே கண்ணன்அம் MAY”….கிரேசி மோகன்….!
———————————————————————————
’மாயன்கா லெண்டர் மதிப்பீடு செய்தவண்ணம்,
ஓயும் உலகென்றால், உண்டுமிழும் -மாயன்கோ
பால கிருஷ்ணன், படுத்(து)ஆலில் கால்(UNDER)சுவைத்து,
நீலக் கடல்மிதப்பான் நம்பு’’…..

According to the Mayan calendar, ‘the world will end’ again on May 3rd of the year 7,138. So time to plan ahead.
**********************************************************************************
ஆங்கிலேயன் ராத்திரி ஆறுமணி நித்திரை
தூங்குவது சப்பான் துளியுமிலை பாங்காக்
உறங்க விடாதெங்கும் ஊரில் திருநாள்
கிறங்கி நடந்திட வா.

இரா.முருகன்

ஆங்கிலேயர் ஏன் தூங்குவதில்லை….!
—————————————————————————
சூடான சாதம் சிலீ ரெனக்கட்டி
ஏடான சீமைத் தயிருடன் -மேடில்மேய்:
கேணையே உண்ட களைப்பில் உறங்குபோ(ர்)
ரானை படுத்தால்குர் ரம்(ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்….ஆனை படுத்தால் குதிரைமட்டம்….!)….கிரேசி மோகன்….!
——————————————————————————————-

’ராத்திரிகண் பூத்திருக்கும் ராஜ சுகபாங்காக்:
ஆத்தாடி ஆதித்ய அஸ்தமனா -பாத்தெரி(பாத்து எரி)
சூரியா லண்டன் (london ) ஏரியில் மூழ்காதே(அஸ்தமிக்க)
பாருனக்கு காரிருள்தான் பேரு’’(THE RIG -VEDA Discovered ‘The SUN Dwelling In The Darkness’)’’….கிரேசி மோகன்….!

பிரிட்டீஷ் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் 19 நிமிடம் மட்டும் உறங்குகிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது – தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை
**********************************************************************************************
வெள்ளமென நீர்சூழ் வெனீசு நகரத்தில்
பள்ளத்தில் மேடையிட்டுப் பாட்டாம்கேள் வள்ளத்தில்
நண்ணும் நகரத்தார் உள்ளும் வெளியிலும்
தண்ணீர் நிறைந்த படி.

இரா.முருகன்
(வள்ளம் – படகு; நண்ணும் – இருக்கும்) https://t.co/q3dNCgNhr7

’’ஜவ்வாது பொட்டுமிட்டு, ஒவ்வாத மேடையில்
தவ்வாது சஞ்சரிப்பாய் தாளத்தில் -அவ்வூரில்(வெனிஸில்)
பாய்போட்டால் வெள்ளம் புகுந்திடுமே, பாகவதா
வாய்ப்பாட்டால் வெல்வாய் வெனிஸ்’’….கிரேசி மோகன்….!

1960-களில் வெனீஸ் நகரத்தில் மிதக்கும் மேடையில் ‘பிங்க் ஃப்ளாய்ட்’ இசைக்குழு நிகழ்ச்சி நடந்தது

***********************************************************************************
பாகவதரின் உதவியாளர்
———————————————–
சார்வாள் இருக்காரா சற்றுவந்து பாடணும்
மாரில் சளிகட்டித் தூங்கறார் வாரார்
வசையாய் மழைபொழிந்து வாய்ச்சொல் நடுவே
இசையாய் இருமுரோ பாட்

இரா.முருகன்
————————————————————————
‘யந்திர ரோபோ யிரும லகலக
மந்திரம் தோன்றியது மண்ணிலே-சுந்தரம்
பிள்ளை ரமணரின் பாதிப்பாம், நானார்காண்
உள்ளத்தை அள்ளும் உவப்பு’’….கிரேசி மோகன்….!

Google showed off a computer assistant that makes convincingly human-sounding phone calls, at least in its prerecorded demonstration. But the real people in those calls didn’t seem to be aware they were talking to a machine. That could present thorny issues for the future use of AI.

*********************************************************************

அம்பதுகள் யூயெஸ்ஸே ஆணையம் சொன்னது
நம்பிக் கலர்குடி நல்லது வம்பிலை
பேய்முலை உண்டவன் போல்கோக் குடிக்குமே
தாய்ப்பால் மறந்த சிசு
(இரா.முருகன்) https://t.co/eIiGchmkeG

’சாயத்தை நீக்கிடும், சத்ருவாம் இன்றது
காயத்தில்(உடம்பில்) கேன்ஸர்நோய் கோக்கினால்: -தாயொத்து
சாலப் பரிந்துகோக்கை சேர்த்தலுக்(கு) ஈடாமே!
பாலகர்க்(கு) அம்பதில்(1950)தாய்ப் பால்’’….கிரேசி மோகன்

For a better start in life, start cola earlier!, The Soda Pop Board of America, 1950s, Chicago.

***************************************************************************
அரைசதம் ஆண்டுகள் அம்மா மறைந்த
ஒருநாள் தவிர்த்து தினமும் விரைந்தவர்
தின்னாத தேதி பிறவாத நாளென்று
மென்றார் தினசரிபர் கர்.
(இரா.முருகன் 1 of 2)

முப்பது ஆயிரம் மொத்தமாய்த் தின்றுமே
எப்பவும் ஏறா எடையாமே தப்பாது
கம்மி கொலஸ்டரால் கட்டுக்குள் சர்க்கரை
மம்மி சமையல் மறந்து
(இரா.முருகன் 2 of 2)

’’கின்னஸில் வென்றார் கொடுஞ்சிறைக் காவலர்
தின்னார வர்பர்கர் தீனியாய் -அன்னை
மறைந்தநாள் மட்டும் துறந்தார் ரிகார்டை:
இருந்தால் இவர்போல் இரு’’….கிரேசி மோகன்….!

It took a man in America 46 years to eat a grand total of 30,000 Big Macs – and he has no plans to stop.
Don Gorske, from Wisconsin, hit the number on 4 May 2018 at a McDonald’s in Fox Valley – also where he ate his very first burger.
அவர் சொல்கிறார் – Don Gorske, from Wisconsin, hit the number on 4 Mary 2018 at a McDonald’s in Fox Valley – also where he ate his very first burger.
**********************************************************************
நடுவர் தலைமத்தி நாடிவந்தோர் மூக்கு
அடிகொள ரத்துசெய் தாணை படித்தாராம்
வல்லோர் அணிவகுத்து வாகாய்க் குறிபார்த்துக்
கல்லெறியக் கண்டபந்த யம்
(இரா.முருகன்) https://t.co/vdkD7uV8R0
———————————–
’ஆறை(சிக்ஸர்) எறிந்திட ஐபிஎல்,அபலையை(பாஞ்சாலி)
கூறையால் காத்திடும் கண்ணனுள்ள -பாறையை
விட்டெறியும் பந்தயம் வைத்தார் ஒலிம்பிக்ஸில்,
சுட்டெரித்தார் கண்ணுதல்ஈ சர்’’….கிரேசி மோகன்….!

The 1904 Olympics featured the illustrious sports of greased pole climbing, rock throwing, and mud fighting.

********************************************************************************
செழித்துச் சிலரிங்கே சேர்க்கணும் காசு
உழைக்கும் பலபேர் உறக்கம் விழித்தெழுந்து
கட்டாயம் வந்தாலே காலைஷிப்ட் ஜன்னலில்
பட்டாணி விட்டே அடி.
(இரா.முருகன்) https://t.co/PNEKwJHL05

’’வேர்கடலை பலகணிவாய், சார்கவலை ஏதுமின்றி
வேர்கா(து) உறங்கிட, விட்டெறிந்தாள் -ஊர்காவல்
காலையில் வந்தாச்சு, வேலை இருக்கென்று
மாலை எழுப்பும்பெண் மை”….!கிரேசி மோகன்….!

A ‘Knocker-up’ was hired to ensure that people would wake up on time for their jobs. Mary Smith earned sixpence a week shooting dried peas at sleeping workers’ windows in East London in the 1930s

*************************************************************************************

ஆரிஸ் கடைமருந்து பாக்ஸ்டன் புதுவெண்ணெய்
மோரீஸ்போய் டீத்தூளும் ஃப்ளோரிஸில் பாரீஸ்செண்ட்
பேத்திக்கு சாக்கலெட் வாக்கரில் வாங்கியே
காத்திருக்க வந்த ரயில்

இரா.முருகன் https://t.co/To0aVYbnfH

1890-ம் ஆண்டு. லண்டன் பாதாள ரயில் நிலையங்களில் ஒன்று
ரயிலுக்குக் காத்திருக்கும் முதியவர், ஷாப்பிங் முடித்து வீட்டுக்குப் போகிறார். அவர் பொருள் வாங்கிய க்டைகள் எல்லாம் லண்டன் மாநகரில் இன்னும் இயங்கும் மிகப் பழைய கடைகளின் பட்டியலில் உள்ளவை

ஆரிஸ் – DR Harris & Co – pharmacy – opened 1790
பாக்ஸ்டன் Paxton & Whitfield – cheesemonger – opened 1742
மோரீஸ் -William Morris – dust tea merchants – opened 1830
ஃப்ளோரிஸ் -Floris – Perfumers – opened 1730
வாக்கர் -Charbonnel et Walker confectioners – chocolate opened 1877
————————————————————————————————

மைலாப்பூர் மைசின்ஸ்(Cronin, Erthromycin) , மந்தவெளி நெய்வெண்ணை
கைலாயம் கோயில் கபாலிகாண -ஸ்டைலாய்
உழக்கு பெயர்த்தியுடன் உற்சாகமாய் நிற்ககிழம்
கிழக்கேபோ கும்ரயில்லேட் டாம்….கிரேசி மோகன்….!

லண்டன் பாதள ரயில் நிலையம் 1905

************************************************************************************
மின்சா ரரயில் மிதிவண்டி பேருந்து
சஞ்சாரம் வேண்டாமே சற்றேகேள் அஞ்சாமல்
இட்டு உருளைகால் கட்டிப் பறந்திடுவாய்
பெட்ரோலோர் டீஸ்பூன்தான் விட்டு.

இரா.முருகன் https://t.co/3K6rfIpOGx

“பல்லவன் ஏறாமல் பெட்ரோல் புறமுதுகில்
வல்லவன் சென்றாராம் வேலைக்கு -அல்லது
சாறுதுழாய் பெட்ரோலில் சேர்க்க எனர்ஜிபார்
காருவிலை யேற்றம்கம் மி”….கிரேசி மோகன்….!

Gas-Powered Roller Skates, 1960s

————————————————————————–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன