Archive For மே 28, 2020

ராமோஜியம் நாவல் : ராமோஜி ஆங்கரே – மன்னர் சாஹுஜி போன்ஸ்லே சந்திப்பு 1708

By |

மகராஜ் எதுக்கு உடம்பை வருத்தி பல்லக்கோடு ஓடி வரணும்? நீங்க ஏறி வந்ததை விட கூடவே ஓடி வர்றது தான் அதிகம்.. உரிமையோடு கோபித்துக் கொண்டான் நாகேந்து. சரி, நீ வேணும்னா பல்லக்கு உள்ளே உட்காரு.. தூக்கிக்கிட்டு ஓடி வரேன் என்றான் ராமோஜி. அய்யோ அய்யோ என்று கன்னத்தில் போட்டு பாவம் விலக்கிக்கொண்டு நாகேந்து சொன்னான் – ”மகாராஜா, விளையாட்டுக்குக் கூட அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. விட்டலன் கிருபையிலே நீங்க இன்னும் பல வருஷம் பல்லக்கிலேயும், குதிரை,…




Read more »

என் புது நாவல் ராமோஜியம் – காரைக்காலில் ராமோஜி ஆங்கரே – வருடம் 1708

By |

பல்லக்கோடு கூட நடந்து கொண்டிருந்த ராமோஜி பின்னால் திரும்பி ஒரு குவளை தண்ணீர் கேட்டான். குளிர்ந்த நீராக பல்லக்கின் முன்பகுதியில் மண்பானைக்கு மேல் ஈரமான கனத்த துணி கட்டி வெட்டிவேரும் ஏலப் பொடியும் சீரகப் பொடியும் கலந்து சற்றே பழுப்பு நிறத்தில் இருந்த தண்ணீரை ஓடி வந்து ஒரு சிப்பந்தி கொடுத்தான். தண்ணீரை நின்றும் நடந்தும் குடிக்கக் கூடாது என்று எந்தக் காலத்திலோ தஞ்சையில் திண்ணைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்த சீலம் நினைவில் எப்போதும் இருப்பதால், அவன்…




Read more »

என் அடுத்த புதினம் ராமோஜியம் – ராமோஜி புனிதப்பயணம் போகும் 1708 – அத்தியாயத்திலிருந்து

By |

17.ராமோஜி ஆங்கரே – எலிப்பொறிச் சத்திரம் 1707 இரண்டு ஒட்டகங்கள். ஒரு மட்டக்குதிரை. ஒரு பல்லக்கு. பல்லக்குத் தூக்கிகளாகவும், ஒட்டகம் நடத்திக் கூட்டிப் போகிறவர்களுமாக மொத்தம் பனிரெண்டு காலாட்கள். மட்டக்குதிரையில் ஆரோகணித்து கெச்சலாக ஒரு காரியஸ்தன். கூடவே மூங்கில் கடகங்களைத் தலையில் சுமந்தபடி ஓடும் இரண்டு பேர். ஆக பதினைந்து பேர் சேர்ந்து வர சுவர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்டது போன ஞாயிற்றுக்கிழமை காலையில். மராட்டிய சமுத்திர சேனையில் படைத் தளபதியான ராமோஜி ஆங்கரே யாத்திரையில் இருக்கிறான். மனைவி…




Read more »

உறவு என்றொரு சொல் இருந்தால் – ராமோஜி ஆங்கரே – ஆண்டு 1698

By |

நான் கப்பலின் மேல்தளத்துக்கு ஓடிப் போய்ப் பார்க்க, சிறு விளக்கொன்று துணையாக ஒரு சிப்பாய் நூலேணியையும் படகையும் இறக்கி விட, விஜயசந்திரிகா கப்பலின் நூலேணி கீழே வர அமிட் போடப்பட்டதைக் கவனித்தேன். ஏணியில் தொங்கியபடி அவர் கடல் பரப்பில் இறங்கும்போது மற்ற ஏணி இருட்டில் தெரிந்து மறைந்தது. கடல் வெகு கோபமாக இருந்த ராத்திரிப் பொழுது அது. இவரும் தான். இயலாமை ஏற்பத்திய சினம் அது என்று சொல்லாமலேயே புரிந்தது. ஏமாற்றமும் வருத்தமும் கோபமுமாக அந்த இரவு…




Read more »

ஆண்டு 1698 – ராமோஜி ஆங்கரேயும் காரைக்கால் புவனியும் – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

வந்த நாள் இரவு – சலிப்போடு ஊர்ந்து போனது சாயந்திர வேளை. எதிர்பார்க்க வைத்துவிட்டு ஏமாறுவதாகவே எனக்கு அனுபவமானது. ஆக்கிரமித்து அதிகாரம் செய்யும் கொள்ளையர் போல் இரவு நுழைந்தபோது சிநேகத்தோடு ராவ்ஜியும் எங்கள் கப்பலுக்குள் வந்துவிட்டார். வரும்போதே இதழ்க் கோடியில் ஒரு புன்னகை. பாலை எதிர்பார்த்து வரும் பூனை முகத்தில் தென்படும் விஷமச் சிரிப்பு அது. ”இன்றும் இங்கே சற்று நேரம் இருந்து போகலாமா தாசிப் பெண்ணே” என்று விசாரித்தார் அவர். ”இந்தா உன் எழுத்ததிகாரம். படித்துவிட்டேன்….




Read more »

From my forthcoming novel RAMOJIUM – excerpts from Year 1698 Karaikal Bhuvani chapter

By |

வந்தநாள் முற்பகல் – அவருடைய கையில் கட்டைப் பிரிக்காமலேயே நீங்கிவிட்டது. அறை வாசலில் உட்கார்ந்திருந்த வைத்தியர் நல்ல உறக்கத்தில் இருந்தார். கப்பல் உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடுவது அவருடைய உறக்கத்தை ஆழத்திற்குக் கொண்டு போயிருக்க வேண்டும். பெண்ணே. ராவ்ஜி அழைத்தார். ஒரு சித்துவேலை செய்தால் என்ன? செம்பருத்திப் பூக்களை அவர் கைக்கு ஒத்தடமிட்டது போல் அடுக்கி அழகு பார்த்தேன். “இந்தப் பூவை எல்லாம் விட மாயம் செய்யும் உன் கன்னங்களை இங்கே சேர்த்துப் பிடித்துக் கொஞ்ச இடம் தருவாயா”…




Read more »