ஸ்ரீவத்ஸா மொழிபெயர்த்த நஸ்புள்ளாஹ் கவிதைகள்

I am now reading Srivatsa’s English translation of Nasbullah’s Tamil poems. It is a smooth decanting exercise, taking care of the tone, content, idiom and format of the original. Srivatsa never writes his own poem between Nasbullah’s powerful lines.

எஞ்சிய பனியையும்
அழைத்துக் கொண்டு
என் சொற்களை நகர்த்திவிட்டுக் கவிதைக்குள்
வந்தமர்கிறது சில்வண்டு

Bringing along the leftover dew
And moving my words aside,
The cicada comes and sits inside
The poem

(A.Nasbullah Poems
Translated by Sri N Srivatsa)

—————————————————————————————
வெண்பாக்கள்

ஆளில்லாத கிராமம்

ஆளில்லா சிற்றூர் அடுமனை அஞ்சலகம்
நாளை திரும்பி நடந்துவரா – காளைகள்
கட்டிவைத்த வெற்றிடம் எட்டடிக் குச்சுவீடு
நட்டமின்றி வாங்க ஸ்பெயின்

கிராமம் முழுக்கவும் வாங்கவிலை பேசி
கிரமமாய்ப் பத்திரங்கள் ஆக்கிக் – கிரயம்
விலைகொடுத்து வாங்கிப்பின் வேகம் நுழைந்தார்
தலையெழுத்தில் முற்றுப்புள் ளி

ஸ்பெயினில் ஒரு கிராமம் விலைக்கு வருகிறது. ஆள் இல்லாத கிராமம் – deserted village. குடிசைகள், அடுமனை(bakery), village chapel, குளம் குட்டை என்று மொத்தமாக விலை பேசி வாங்கலாம். ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை வாங்கும் செலவை விட மிகவும் குறைந்த செலவு தானாம் இதற்கு.

https://www.theguardian.com/world/shortcuts/2018/nov/20/gwyneth-paltrow-christmas-spanish-village-abandoned?fbclid=IwAR05EGunv9wZ42LzWZpF3wltroo99oh1uZGzdUzFg3savnUld-zDQDTt49w

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன