இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் – மேடை நாடகம்

இனிமையான கர்னாடக சங்கீதமாகப் பின்னணி பாட ஒரு கோஷ்டி, புல்லாங்குழல், சிறு முரச, பெருமாள் கோவில் ஏழப்பண்ணுதலின்போது (எழுந்தருளப் பண்ணுதல்) பின்னால் வரும் பிரபந்த கோஷ்டி போல இழுத்து இழுத்துப் பாசுரம் சொல்ல மொத்த நடிகர்களும். ஜரிகைக் குல்லாவோடு அபிநயம் பிடித்து பிரபந்த சேவை சாதிக்க ஒரு சீரங்கத்து அரையர். இந்த முஸ்தீபுகளோடு ஒரு மேடை நாடகம் தொடங்கினால், முதல் காட்சி முடிவதற்குள் அது பாட்டுக் கச்சேரியும் நடுநடுவே கொஞ்சம் கதையுமாக மாறுவது தமிழ் நாடகமேடை மரபு. ஷ்ரத்தாவின் ‘ராமானுஜர்’ நாடகத்தில் இசை உண்டு. பாட்டுக் கூட்டம் கீழே ஆர்கெஸ்ட்ரா பிட்டில் உட்காராமல், மேடையிலேயே ஓரமாக வீற்றிருக்கிறது. இருந்தாலும் நாடகம் தான் கோலோச்சி முன் செல்கிறது. இசையும் பிரபந்தமும் எல்லாம் அதனோடு கூட இசைவாக நடக்கின்றன. A pleasant to hear live music orchestra like Savitha Narasimhan’s one woman orchestra for Gowri Ramnarayan’s ‘Dark Horse’.

கம்பீரமாக டி.டி.சுந்தரராஜன் ஆளவந்தாராக முதல் காட்சியில் தோன்றியதுமே ராமானுஜர் நாடகம் களை கட்டிவிட்டது. சாதி வேற்றுமை இல்லாத சமுதாயம் காண்பது, நாதியற்றவருக்கும் நாராயணன் என்று வைணவத்தை எங்கும் பரப்புவது என நிறைவேறாத ஆசைகளோடு விண் நாடு ஏகும் வயது சென்ற வைணவர் அவர். அந்தப் பணியைத் தொடர ராமானுஜரைக் கூட்டி வரச் சொல்லி இறுதி மூச்சு விடுகிறார் ஆளவந்தார். TDS-ன் கச்சிதமான நடிப்பு. He sets the tone for the entire play.

120 வருடம் பெருவாழ்வு வாழ்ந்த ராமானுஜர் என்ற யுக புருஷரின் வாழ்வைப் பற்றி வரலாறாகவும், தொன்மமாகவும் நமக்கு அறிய நிறையவே கிடைக்கிறது. அதையனைத்தும் இரண்டு மணி நேரத்துக்குள் நடத்த முற்படும் போது, நல்ல காட்சிகள் பலவும் நீக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது தான். எனினும் :

யாதவப் பிரகாசர் தான் ராமானுஜரின் குருவாக இருந்து அவருக்கு விளைவித்த துன்பம் பற்றித் தனக்குள் பேசிக் கொள்ளும் காட்சி, திடுதிப்பென வருவது, உடையவர் வரலாறு தெரியாதவர்களுக்குக் குழப்பம் தரும் தான். நுட்பமான காட்சி அது. சைவ வைணவ மாற்றம் தவிர, ஆசிரியர் மாணவராகவும் மாணவர் ஆசிரியராகவும் மாறுகிற அதிசயம் அங்கே நடக்கிறது. முந்தைய காட்சியில் அந்த ஆசிரிய – மாணவர் உறவு நிறுவப்பட்டிருந்திருக்கலாம்.

நீளமான ஒரு முன்னுரையும் உண்டு. விளக்கை அணைத்து வைத்து அதைச் சொல்வதை விட அரங்கத்தை ஒளிமயமாக வைத்தபடி சொல்லலாம்.

அத்துழாயும், பந்தார் விரலியாக வரும் அந்தச் சிறுமி முன் உடையவர் நெடுஞ்சாண்கிடையாக விழுவதும், அவள் திருமணத்தில் முதலியாண்டான் சீதன வெள்ளாட்டியாகப் போவதும் இல்லாத ராமானுஜரா? கொண்டு வாருங்கள் அவர்களை.

இறுதிக் காட்சியில் (தஞ்சம்மாள் மறுவரவு) ராமானுஜர் தான் துறவு மேற்கொண்டது சங்கரர், கௌதம புத்தர் பாதிப்பில் நிகழ்ந்ததாகச் சொல்வது சிந்திக்க வைப்பது. சொல்லியிருக்கக் கூடியவரே உடையவர். அந்தக் காட்சியை நுணுக்கமாக, ரசித்து எழுதியிருக்கிறார் இ.பா

எளிமையான அரங்க நிர்மாணம். கதையில் நம்பிக்கை வைத்து எந்த விதமான மற்ற ஈர்ப்பும் இல்லாமல் கதை நகர அது வழி செய்கிறது. படிக்கட்டாக நாலு படிகள், முன்னால் இரண்டு சிறு மேடைகள். பின்னால் கதவு. அது திருவரங்கம் கோவிலாகிறது. ராமானுஜர் வீடாகிறது. அநபாயன் அரண்மனை ஆகிறது. எனக்குப் பிடித்தது அது காடு ஆகும்போது. மூன்று மரங்கள் பின்னால் இருந்து நடந்து வந்து அணிவகுத்து நின்றால் காடு! அந்த மூன்று நடிகர்களையும் பாராட்டுகிறேன் – நாகசுவரம் ஒத்து கலைஞர்கள் போல அவர்கள் பணி அமைதியானது!

எடுத்தல், தொடுத்தல் , முடிதல் எல்லாம் கச்சிதமாக அமைந்து நகரும் இந்த நாடகத்தை ஒரு கட்டியங்காரன் மூலமாக எடுத்துப் போயிருந்தால் காட்சிகளை நீக்கியதால் வந்த, சற்றே disjointed தோற்றம் இல்லாமல் போயிருக்குமோ!

#Ramanuja

My tweets on the stage play :

ராமானுஜரை அவர் மனைவி தஞ்சம்மாள் சந்திக்கும் இறுதிக் காட்சிக்கே இன்னொரு முறை நாடகம் பார்ப்பேன். Hats off இ.பா, சுவாமிநாதன், கவிதா, கிருஷ் 1/n

கர்னாடக இசை வாய்ப்பாட்டும், குழலும், முரசுமாக மேடையிலேயே இசைக்குழு.பிரபந்தம் சொல்லும் நடிகர் கூட்டம். இசைநாடகமாகாமல் இ.பா கதை, இயக்கம் 2/n

another colourful feather in Shraddha’s much decorated cap.They have an excellent actor in Swaminathan and director in Krish. Kudos to team 3/n

As usual Narada Gana Sabha venue played spoil sport every now and then with audio. We have now learnt lip reading to enjoy the plays 4/n

shall write in detail about Ie.Paa’s stage play Ramanujar by Shraddha tomorrow. Meanwhile my recommendation – pl watch 5/n

சங்கரர், ராமானுஜர், மாத்வர் சிடுமூஞ்சி சாமியார்கள் என நினைத்திருந்தேன். சுவாமிநாதனின் ராமானுஜர் சதா சிரித்த மூஞ்சியாக அதை மாற்றினார் 6/n

பாதி நாடகத்தில் தஞ்சம்மாள், பொன்னாச்சியாக ஒயிலாக நடந்துவரக் குழம்பினேன். அதே சாயலில் இன்னொரு பெண். கவிதாவின் தஞ்சம்மாள் her best #Ramanuja 7/n

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன