Archive For ஏப்ரல் 27, 2020

ராமோஜியம் – என் அடுத்த நாவல் -சில பகுதிகள் – வருகை 1942

By |

”என்னாச்சு, அத்தங்கா மறந்துட்டாளா?” பந்துலு சம்சாரம் தூணைப் பார்த்துக் கேட்டாள். அங்கே பந்துலு இருந்தாலும் மௌனம் தான் பதிலாகக் வந்திருக்கும். எந்த நேரமும் வேட்டியை நனைக்கிற அவசரத்தோடு ராமண்ணா ஜோசியரும் என் வீட்டு வாசலுக்கு வந்து, ’எங்கே காணோம்? இன்னும் வரல்லியே’ என்று கூப்பாடு போட்டார். நான் என்ன, வந்த தெலக்ஸை பறிமுதல் செய்து வீட்டில் பதுக்கிவிட்டா வரல்லே என்கிறேன்? ராத்திரி ஏழரைக்கு டெல்லியில் செய்தி அறிக்கை படிக்கிற சத்தம் எல்லா வீட்டு ரேடியோக்களிலும் இருந்து கொர்ர்…




Read more »

புதினம் ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் – 1942 செப்டம்பர் சென்னை -விருந்து வரக் காத்திருந்து..

By |

சாயந்திரம் நாலு மணிக்கு கடை கட்டி வைத்துக் கிளம்ப ஆயத்தமாக முகம் கழுவி வந்தபோது பந்துலு சார் என் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் காத்துக் கொண்டிருந்தார். “சார், கிளம்பிக்கிட்டே இருக்கேன்” என்று சமாதானமாகச் சொல்ல, அவர் அமைதியாகக் கூறிய பதில் – “சாரி ராமோஜி, இன்னிலேயிருந்து ஏ ஆர் பி நாலு மணிக்கு வீட்டுக்குப் போக ஸ்பெஷல் பெர்மிஷன் ரத்தாயிடுத்து.. எப்பவும் போல அஞ்சு, அஞ்சரை, ஆறு, ஏழுக்கு போய்க்கலாம் … நான் ரோமாண்டி துரை மீட்டிங்க்…




Read more »

ராமோஜியம் – அடுத்து வரவிருக்கும் என் நாவலில் இருந்து – 1942 செப்டம்பர் மதறாஸ்

By |

விடிந்தால் செவ்வாய். என் வீடு பத்து நிமிஷத்துக்காவது பிரபலத்தின் வருகையால் பெயர் பெறப்போகிற தினம். நானே எதிர்பாராத விதமாக சத்யநாராயண பூஜையை நாளை மறுநாள் புதனில் இருந்து ஒருநாள் முன்னதாக செவ்வாய்க்கு மாற்றி வைத்தாள் ரத்னா. சுபாங்கி அம்மாள். விலாசினி ஆகிய நிபுணர்கள் ஆலோசித்து, செவ்வாயும் சிலாக்கியம் என்று சொன்னார்களாம். ராமண்ணா ஜோசியரும் ஒரு ரூபாய் காணிக்கை வாங்கிக்கொண்டு அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று சோழி உருட்டிக் கணக்குப் போட்டுச் சொன்னாராம். தெலக்ஸ் புவனாவுக்கு ஆஸ்தான ஜோசியராக…




Read more »

நான் எழுதி வரும் ‘ராமோஜியம்’ நாவல் – 1942 மழைக் கால சென்னை – சில பகுதிகள்

By |

”உங்களுக்கு பந்துலு சார் தான் தெரியும்.. எனக்கு அவரோட ஒய்ஃபையே தெரியும்.. அந்த பூலோக சுந்தரி, பந்துலு சாரோட அத்தங்கா, மசக்கை வந்த கர்ப்பிணிப் பொண்ணு மாதிரி மாகாணி ஊறுகாய் வேணும்னு பந்துலு சார் வீட்டம்மா கிட்டே ஆசைப்பட, இவங்க என்னை வண்டிச் சத்தம் கொடுத்து கூட்டிக்கிட்டு முந்தாநாள் கொத்தவால் சாவடியிலே காய் வாங்க போனாங்க.. நான் தான் செலக்ட் பண்ணி பேரம் பேசி வாங்கிக் கொடுத்தேனாக்கும்..” அவள் மாடப்புரையிலிருந்து ஒரு சிமிழை எடுத்து சிட்டிகை ஆபீசர்ஸ்…




Read more »

ராமோஜியம் – என் அடுத்த நாவலில் இருந்து – மழை இரவுக்குப் பின் வரும் காலை – சென்னை 1942

By |

காலையில் மழை விட்டு வானம் வெளிறி இருந்தது. கையில் காப்பிக் கோப்பையுடன், தினமணி பேப்பர் படித்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். ”என்ன சார், உங்க வீட்டுலே ப்யூஸ் போகலியா?”. ஓவென்ற இரைச்சலாகப் பேச்சு சத்தம். எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடுதான். அவருக்கும் ரத்னாவிடம் சொல்லி ஒரு காப்பியை வரவழைத்தேன். மகிழ்ச்சியாகக் குடித்து விட்டு ஊர் வம்புக்குத் தாவினார் மணவாள நாயுடு. “சார் ஜப்பான் ப்ளேன் குண்டு போட வந்தா ஓன்னு சங்கு பிடிக்கணும்னு உங்களைப் போல ஏ ஆர் பி…




Read more »

வெளிவர இருக்கும் என் நாவல் ‘ராமோஜியம்’ – சென்னையில் ஒரு மழைக்கால இரவு 1942

By |

மேற்கே தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் ஏதோ வெளிச்சம் மின்னி மின்னி வந்து போனது. டார்ச் வெளிச்சம். உளுந்து கடத்தல் ஆரம்பமா? அடுத்த விநாடி விளக்கு வந்தது. தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் இரண்டு பேர் சிரமத்தோடு ஒரு சாக்கு மூட்டையை வெளியே சிறு மோட்டார் வேனில் ஏற்றுவது தெரிந்தது. வேன் சத்தமிட்டுக் கிளம்பும் ஓசை. விளக்கை அணைத்து விட்டு வந்தேன். ஒரு மணி நேரம் கழித்து, குளித்து, ராத்திரி ஒன்பதுக்கு, ஏ ஆர் பி வார்டனாக…




Read more »