Archive For அக்டோபர் 1, 2018

புதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து

By |

பரோட்டாவும், சால்னாவும் வர வயிறு திகுதிகு என்று பற்றி எரிந்தது. வீட்டில் அசைவம் விலக்கு. பரோட்டா சைவ வேஷம் போட்டுக் கொண்டு சாத்வீகமான சிநேகிதமான குருமா, சாம்பார், சட்னியோடு நுழையக்கூட அனுமதி இல்லை. பிரியாணிக்கு பூணூல் போட்டு அடையாளமே இல்லாமல் சாத்வீகமாகப் போன விஜிடபிள் பிரியாணியும், காய்கறி குருமாவும் கூட விலக்கப் பட்ட பொருட்கள். எனவே இங்கே, மைதாமாவு பரோட்டாவை பக்கவாத்தியங்களோடு ஒரு பிடி பிடித்தேன். ஜெபர்சன் கொறித்தார். “நீங்க இடதுசாரி கம்யூனிஸ்ட், வெங்கு வலது சாரியா?”…




Read more »

நயாகரா பாடல்கள்

By |

நயாகரா பாடல்கள்

நயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயாரா முதலெதுகை வேணாம் –தயவுசெய் நண்பா புலர்காலை சிற்றின்பம் எண்ணாது வெண்பா இயற்றலாம் வா நயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயார்காண் தொடக்கம் வயாக்ரா –அயராதே நண்பாஎம் டைம்ஸோனில் நள்ளிரவு என்தோழி செண்பா அருகில் இருப்பு மண்ணரிப்பு ஆய்வாம் மடைமாற்றி நய்யாக்ரா தண்ணியின்றித் தான்தூர்த்துத் தக்கவழி – கண்டாரே திண்ணம் அருவி திரும்பப் பெருகிவரும் மண்கொள்ளை அங்கில்லை காண் https://www.dailymail.co.uk/news/article-1338793/Niagara-Falls-ran-dry-Photos-moment-iconic-waterfall-came-standstilll.html The day Niagara Falls ran dry: Newly-discovered photos…




Read more »

ஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்

By |

ஓடியே பந்துவீசி ஓங்கி அதையடித்துத் தேடியே சிக்ஸராகத் தேவதையர் – ஆடிடுவர் ஆணாடப் பெண்நடனம் அஃதுபோல் தாமடித்துப் பெண்ணாட ஆண்நடனம் என்று? https://www.indy100.com/article/nfl-male-cheerleaders-women-new-orleans-saints-8534031 ஆடிப் பெருங்காற்றில் அம்மி பறப்பதுபோல் ஆடி அலைக்கழிந்து செய்திசொல்வோம் – தேடி புயல்தகவல் பார்த்து செயல்மறக்கப் பின்னால் பயல்நடப்பான் சும்மா அசைந்து https://www.indy100.com/article/hurricane-florence-latest-updates-path-weatherman-video-death-toll-8538841 இங்கேயும் தேசபக்தி என்றால் இதுவென்று சங்கூதக் கூட்டமுண்டு கண்பனித்து – பொங்கி குதிப்பார் கொடியசைப்பர் குப்பாயம் போடார் எதிர்கொள்வர் ஃப்ளாரன்ஸ் புயல் https://www.indy100.com/article/hurricane-florence-latest-shirtless-man-american-flag-myrtle-beach-south-carolina-8538871 பானாசோ நிக்கமைத்து வேணும்போல் பேரொலியை…




Read more »

நாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..

By |

ஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் சுவாரசியமானவை. நாவலை நாடகமாக்குவது குறித்து இது. என் ’தியூப்ளே வீதி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் வரும் முக்கியமான பத்தி : // சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான…




Read more »

நெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்

By |

“I cannot be the referee and play at the same time but there are times I wish I could.” Neymar ஆடவும் வேண்டுமந்த ஆட்ட நடுவராய் ஓடவும் வேண்டுமே ஓர்பந்து – கூடவர அய்யா வழிகண்டால் மெய்ஞான போதமது நெய்மாரும் சித்தரே காண் Neymar Finally Speaks After Brazil’s 2018 World Cup Loss கீழ்ப்படி ஊழியர்க்குக் கிட்டுகின்ற சம்பளத்தில் ஏழரை நூறுசதம் எம்.டிக்காம் – வாழ்ந்திடுக நட்டமென்றால்…




Read more »

New : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்

By |

New : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்

An excerpt from ‘Beerangi PaadalkaL’ பீரங்கிப் பாடல்கள் நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி எட்வின்சேட்டன் வேலை ஆரம்பித்தது அவருடைய குழுவிலுள்ள வேலையாட்கள் வெளிச் சருகை உரித்து சுத்தமாக்கி வைத்த பெரிய வெங்காயத்தோடுதான். இடது கையால் ஒவ்வொரு வெங்காயமாக எடுத்து உயர்த்திப் பிடித்து வலது கையில் வைத்திருந்த கத்தியால் நீள வாக்கில் அரிந்து தரையில் வைத்திருந்த முறத்தில் போட்டார் அவர். இடது கையில் வெங்காயம் இல்லாவிட்டாலும் வலது கையில் பிடித்திருந்த கத்தி உயர்ந்தது. ஒரு முறம் நிறையும்…




Read more »