நெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்

“I cannot be the referee and play at the same time but there are times I wish I could.”
Neymar

ஆடவும் வேண்டுமந்த ஆட்ட நடுவராய்
ஓடவும் வேண்டுமே ஓர்பந்து – கூடவர
அய்யா வழிகண்டால் மெய்ஞான போதமது
நெய்மாரும் சித்தரே காண்

Neymar Finally Speaks After Brazil’s 2018 World Cup Loss

கீழ்ப்படி ஊழியர்க்குக் கிட்டுகின்ற சம்பளத்தில்
ஏழரை நூறுசதம் எம்.டிக்காம் – வாழ்ந்திடுக
நட்டமென்றால் வேலைபோய் நம்எம்டி வால்மார்ட்டில்
பெட்டி அடுக்குவார் பார்

நாலாண்டுக் கோர்தடவை நூல்கணியர் ஒன்றுகூடி
மேலான ஆய்வென்று தேர்ந்தெடுப்பர் – வாலன்
சுணக்கமின்றி வாழ்த்துமெடல் கொண்டான் குழப்பம்
கணக்கு மணக்கா மணக்கு

(வாலன் : ‘tailed’ one :miscreant)

“Nobel Prize of Math” Medal Stolen Minutes After Ceremony in Rio

தும்மா திரு;தேகம் துன்பமின்றி எந்நாளும்
எம்மான் பெயர்சொல்லி எண்பதே – கம்மிவேணாம்
அம்மா பெயர்சொன்னால் அப்போ தனியுழைப்பு
சும்மா நினைத்தால் சுகம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன