Archive For பிப்ரவரி 7, 2011

No Petrol Day Feb 14th

By |

     திங்கட்கிழமை, 7, பிப்ரவரி 2011 (7:30 IST) ஓட்டுக்களை சேகரிப்பது முக்கியம் அல்ல : கமல்ஹாசன் அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா நிவாஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.




Read more »

ஆழிமழைக் கண்ணாவும் சதாரா மாலதியும்

By |

  மார்கழி நான்காம் நாள் – ஆழி மழைக் கண்ணா பாசுரத்துக்கான தினம். குளிரோடு என் காலம் சென்ற தோழி கவிதாயினி சதாரா மாலதியும் நினைவு வரும் நாள் இது. எங்கள் ‘ராயர் காப்பி கிளப்’ குழுவில் அவர் எழுதிய திருப்பாவை விளக்கக் கட்டுரைகளில் இருந்து. ‘இரா மடம் ஊட்டிய’ மாலதியின் ஆன்மா சாந்தியடையட்டும். இரா.முருகன் ——————————— ஆழி மழைக்கண்ணா….. —————– ‘ஆழிமழைக்கண்ணா’ பாசுரத்தில் படைப்பாளியின் அறியாப்பருவம் இயற்கையாக யதார்த்தமாக வெளிப்படும்.




Read more »

ஒட்டகம்

By |

  ஒட்டகம் இரா.முருகன் பஸ்ஸா, வேனா, ஆஸ்பத்திரியிலே அறுத்து முடிச்சு அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகிற பொண வண்டியான்னு தெரியலை. எங்கேயோ தூக்கலா பச்சை இலை வாசனை. கூடவே விடிகாலையிலே மீன் சாப்பிட்டு வரிசையா ஏழெட்டு பேர் ஏப்பத்தோடு விட்ட வாடை. சக மனிதர்கள். பொறுத்துக்கணும். அனேகல். னேகல். கல். கானா பாடிட்டு கண்டக்டர் விட்ட இடத்திலிருந்து தூங்க ஆரம்பிச்சார். சுவாதீனமாக ஆளாளுக்கு அவரோட லெதர்பையிலே காசு போட்டுட்டு வண்டி ஏறியிருந்தாங்க. என் பக்கத்து சீட் நரை மீசைக்காரர்…




Read more »

தியூப்ளே வீதி – 3

By |

  தியூப்ளே வீதி – 3 இரா.முருகன் நான் ராஜா காலேஜில் பி.யூ.சி என்ற புகுமுக வகுப்பு சேர்ந்ததுக்கும் ‘ஓடிப் போறது’ என்ற பரபரப்பான விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனாலும் அந்த வருடம் ஓடுகிற வருடமாக இருந்தது என்பது மட்டும் நிச்சயம். ஆணும் பெண்ணுமாக இளசுகள் அவ்வப்போது காணாமல் போனார்கள். தனித்து இல்லாமல் அவர்கள் ஜோடிகளாகக் காணாமல் போனதாகத் தெரிந்தபோது ‘ஓடிப் போனவர்கள்’ முத்திரை குத்தப்பட்டு சுடச்சுட அதிகாரபூர்வ செய்தி வெளியாகும்.




Read more »

தியூப்ளே வீதி -2

By |

  முதல் நாள் காலேஜுக்கு சைக்கிள் பின் சீட்டில் அப்பளக் கட்டு அடுக்கிய பலகைப் பெட்டியோடு போய் இறங்கிய ஒரே ஆத்மா நானாகத்தான் இருக்கும். ரெட்டைத் தெருவைத் தொட்டுக்கொண்டு கிழக்கில் விரியும் சிவன்கோவில் தெருவில் அழ.அழ.ராம.அழ.வள்ளியப்பச் செட்டியார் வகை கைங்கர்யம் தான் அது. அழகாபுரி அழகப்பச் செட்டியார் மகன் ராமநாதன் செட்டியார் திருமகன் அழகப்பச் செட்டியார் புதல்வர் வள்ளியப்பச் செட்டியார் என்ற மேற்படி அழ.அழ.அழ அப்பச்சி, பெயர் தோஷமோ என்னமோ, தொட்டாலே அழுது விடுகிற பதத்தில் தான்…




Read more »