Best Tamil novels – a list by Era.Murukanசிறந்த தமிழ் நாவல்கள்

சிறந்த தமிழ் நாவல்கள் – என் பட்டியல்
———————————————–
தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு, சொன்ன விதம், வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை.

1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர்
2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி
3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார்
4) பொய்த் தேவு – க.நா.சு
5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
6) அலை ஓசை – கல்கி
7) மோகமுள், அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
8) ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ – ஜெயகாந்தன்
9) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
10) பள்ளிகொண்ட புரம் – நீல பத்மநாபன்
11) வண்ணக் கனவுகள் – விட்டல்ராவ்
12) புலிநகக் கொன்றை, கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்
13) கருக்கு – பாமா
14) எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
15) சாயத்திரை – சுப்ரபாரதி மணியன்
16) பாய்மரக் கப்பல் – பாவண்ணன்
17) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
18) ரத்தம் ஒரே நிறம், கரையெல்லாம் செண்பகப்பூ, மீண்டும் ஜீனோ – சுஜாதா
19) அடிமையின் காதல் – ரா.கி.ரங்கராஜன்
20) 6174 – சுதாகர்
21) புயலில் ஓர் தோணி – ப.சிங்காரம்
22) தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
23) பாலங்கள் – சிவசங்கரி
24) வாசவேச்வரம் – கிருத்திகா
25) நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
26) வேர்ப்பற்று, தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
27) காகித மலர்கள் – ஆதவன்
28) பதினெட்டாவது அட்சக் கோடு,மானசரோவர் – அசோகமித்திரன்
29) ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
31) திருவரங்கன் உலா – ஸ்ரீவேணுகோபாலன்
32) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
33) வாடாமல்லி – சு.சமுத்திரம்
34) அசடு – காஸ்யபன்
35) மெல்லக் கனவாய் பழங்கதையாய் – ப.விசாலம்
26) சாய்வு நாற்காலி – தோப்பில் முகம்மது மீரான்
27) கடல்புரத்தில் – வண்ணநிலவன்
28) புத்தன்வீடு – ஹெப்சிபா தாசன்
29) இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்
30) இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா

(பட்டியல் தொடர வாய்ப்பு உண்டு; வரிசை மனதுக்கு வந்தபடிக்கு மட்டும். சில நாவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்)

என் நாவல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
—————————————————–
மலையாளக் கவிஞர் மோகனகிருஷ்ணன் காலடி (இங்குக் குறிப்பிட்டிருந்தேனே – ’சங்கரேட்டண்டெ ஆன’ கவிதை..அதை எழுதியவர்) கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து மீண்டும் நட்பைப் புதுப்பித்துக் கொண்டேன். ஃபேஸ்புக்/முகநூல் வாழ்க.

இன்னும் கவிதை எழுதுகிறார். கல்லூரியில் வேதியல் பேராசிரியராகப் பயிற்றுவிக்கிறார். புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.

அண்மையில் அவர் எழுதிய ரெண்டு வரிக் கவிதை

ஆராணு காந்தி?
கோட்சே வெடிவச்சயாளாணு

இது எப்படிக் கவிதையாகும் என்று கேட்காதீர்கள். அந்த எள்ளல் தொனி புரிகிறது தானே?
————————————————
அன்பே தளிகையாய் ஆர்வம் நறுநெய்யாய்
என்புதோல் போர்த்திய என்னுடலில் – அன்பொடுவக்
கார அடிசில் உயிர்சமைத் தேன்கண்ணா
நேராய் நுழைந்தே அருந்து.

கற்பூர வாசனை காலமெலாம் சூழ்ந்திருக்கும்
நற்றூழ் பெருஞ்சங்கே நானுமருள் பெற்றுதினம்
கோவிந்தன் கால்சுவைக்கும் கோகுலத்துக் கன்றாவேன்
சேவித்தேன் சேவடி காப்பு.

(இரா.மு 7.4.2013 – க்ரேஸி, ரவி, ரகுவுக்கு அனுப்பியது)
—————————–
கூடங்குளம் அணுமின் உலையின் கட்டுமானப் பொருட்கள் தரம் குறைந்தவை என்று சொன்ன AERB முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு ‘பாதிரியார் தூண்டுதல்’ இருந்திருக்க வாய்ப்பில்லை. ‘நேர்படப் பேசு’ என்ற பாரதியார் தூண்டுதல் வேண்டுமானால் இருக்கக் கூடும்.
—————————

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன