புதிது : இன்றைய இரட்டை நாயனம் வெண்பாக்கள் – கிரேசி மோகன், இரா.முருகன்

நானும் நண்பர் கிரேசி மோகனும் தினமும் ஏதாவது ஒரு செய்தியை அல்லது தகவலை அடிப்படையாக வைத்து வெண்பா பரிமாறிக் கொள்வோம். இவை இன்றையவை,

மாமிச வேடம் மரக்கறி போட்டாலும்
தாமிசைந் துண்ணத் தகாதுகாண் – சாமீ
வெஜிடபில் புல்லாவ் பிரியாணி குர்மா
புஜிக்கத் தடையாம் அறி.

இரா.முருகன் 22-04-2018

க்ரிஸ் கெய்ல் – ப்ரவோ – ராயுடு மோகன் சாத்துசாத்தென்று சாத்தும் ’இன்றைய இரட்டை நாயனம்’ வெண்பாக்கள்

’கூறும்உம் பேரென்ன! காஷ்மீர் புலவனென்று
சோறென்ன சாயரட்சை சாப்பிடுவீர் -ஊரன்னம்(ஊர் அன்னம்)
ரைத்தா வுடன்புலவ் ரைஸ்ILOVE RAWVEGநான்
சைத்தானே சொன்னாலும் சார்’’…கிரேசி மோகன்

பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
சாத்தமுது சாதம் சுவையா ணநீர்மோர்
ஆத்தமுதே(வீட்டுணவே) என்ஸ்பெஷல் ஆம்….

நேற்றோடிப் போனதும் நாளை வருவதும்
மாற்றான்தன் தோட்டத்து மல்லிகை -தூற்றாது
இன்று மலர்ந்ததே ஈசன் பிரசாதம்
உண்டேற்பே உண்மை உணவு….

சுடச்சுட இட்லி சுவையான சட்னி
குடம்குடமாய் சாம்பாரைக் கொட்டி -வடைபொங்கல்
காப்பி அருந்திவிட்டு காலைக் கடனுக்காய்
தோப்பில் அமர்தல் ஜெயிப்பு….

மாமிசப் பெட்டி, மலமூத் திரச்சட்டி
தாமஸமாம் மேனி தரித்திரம்காண் -ஆமா(ம்)சார்
ஸோமரஸம் உண்டே சுகித்திடும் விண்ணோர்போல்
நாமரஸம் சாம்பார்,மோர் நிறைவு….

படிக்காத புத்தகத்தை பார்த்தென்ன லாபம்
நடிக்காத நாடகத்தில் நானேன் -துடிக்கின்ற
நெஞ்சில் தளும்பிடும் நஞ்சக் குழம்பது
பஞ்சா மிருதம் பருகு….

ருசியொன்றில் கொண்டந்த ஒன்றிலே ஞானப்
பசிகொண்ட யோக ரமணா -நசிகேதன்
போலந்தக் கூற்றோடு போராடி வென்றவுன்
காலில் தலைவைத்தேன் கா….கிரேசி மோகன்….!

Food producers in France will be forced to think of new ways to describe some of their vegetarian and vegan foods when they are banned from using terms such as “vegetarian sausages”, “vegetarian mince” and “vegan bacon”.

தி இண்டிபெண்டண்ட் (இங்கிலாந்து) இன்றைய பதிப்பில்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன