Earworms


earworm எல்லோருக்கும் வரும். காலையில் கேட்ட ஏதாவது பாட்டு மனதில் போய் உட்கார்ந்து உட்காதில் நாள் முழுக்க ஒலித்துக் கொண்டே இருப்பது அது. 24 அல்லது 48 மணி நேரத்தில் வேறொரு பாட்டு உட்செவியில் நுழைய இது இறங்கி விடும்.

எங்கள் பிரச்சனை கொஞ்சம் வேறே மாதிரி. இது mutated ear worm சமாசாரம்.

கொஞ்சும் புறாவே பாட்டைக் கேட்ட என் பெருந்தலைவர் நண்பர் நரசிம்ம ராவே என்று நாள் முழுக்கப் பாடிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்.

எனக்கு வந்து சேர்ந்த பாட்டு நீலகிரி எக்ஸ்பிரஸ் படத்தில் இடம் பெறும் ‘திருத்தணி முருகா’. ஸ்ரீவித்யாவின் அருமையான நாட்டியத்துக்கு இசைக்கப் படும் பாடல் இது

திருத்தணி முருகா
தென்னவர் தலைவா
தேவரும் மயிலும்
காயலில் வருமா

பாடலின் ஒரிஜினல் வடிவத்தை யு-டியூபில் கண்டு, கேட்டுக் கொள்க.

வாட்ஸப்பில் பகிர த்ருப்ணித்துற-வில் இருந்து (திருப்பணித்துறை) நண்பர் சொல்கிறார் –

another earworm mutate :

அஞ்சலிதேவி யெண்ட் கோஷ்டி பாடிப் பரவும்-

ஜகதீஸ்வரா பாவி பரமேஸ்வரா

(மணாளனே மங்கையின் பாக்கியம் – ஜகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா)

காதுப்புழு பற்றி விக்கிபீடியா

An earworm, sometimes known as a brainworm,[1] sticky music, or stuck song syndrome,[2] is a catchy piece of music that continually repeats through a person’s mind after it is no longer playing.[3] Phrases used to describe an earworm include “musical imagery repetition”, “involuntary musical imagery”, and “stuck song syndrome”.[1][4][5] The word earworm is possibly a calque from the German Ohrwurm.

earworm பற்றி நண்பர் கிரேசி மோகன் சொல்கிறார் –

இரண்டு நாடகளாக ‘’’தூக்கமும் கண்களைத் தழவட்டுமே’’ பாடல்….சரணத்தை மாற்றி அமைத்தேன்…தூக்கமும் வந்தது, சரணமும் பிறந்தது….அவ்வையாரின் ‘’வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’’ வேற மண்டையில்….இனி சரணம்….!

‘’காலையில் நானோர் கனவு கண்டேன் -அந்தக்
கனவினில் அறுசுவை உணவு உண்டேன்….
கண்விழித்தெழுந்ததும் கடும் பசி பாரு
வயிறே நீகூறு(கெட்ட) வண்ணாஞ் சோறு’’….கிரேசி மோகன்….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன