New: மிளகு – வாழ்ந்து போதீரே நாவலுக்கு அடுத்து வரும் புதினம் இரா.முருகன்

மிளகு என்ற ‘செயல் தலைப்பு’ (working title) சூட்டி அடுத்த நாவலுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறேன்.

பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி குட்டநாடு, வயநாடு, கொங்கண் கடலோர நிலப்பரப்பில் நிலவிய, வர்த்தகச் சூழலில் சொல்லப்படும் கதையாக இது இருக்கும்

தமிழ் உரைநடை பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி இந்நாள் வரை போய்க் கொண்டிருக்கும் சுவடுகளை அடியொற்றிச் செல்லும் இந்த நாவலின் கதையாடல்.

விஸ்வரூபம் நாவலில் இரண்டு அத்தியாயங்களில் ஸ்காட்லாந்து செய்திப் பத்திரிகை ரிபோர்டிங் மொழிநடையில் கதை நகரும். அது போல் பரப்புரையாக, டயரிக் குறிப்பாக, வானொலி வர்ணனையாக மிளகு நாவலின் கதையைப் பெரும்பாலும் சொல்லிப் போக உத்தேசம்.

கிருஷ்ணார்ப்பணம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன