Archive For ஜூலை 17, 2020

செண்டையும் தவிலும் – வர இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுதியில் இருந்து

By |

வெளிவர இருக்கும் என் சிறுகதைத் தொகுதி ‘மயில் மார்க் குடைகள்’ நூலில் இடம் பெற்றிருக்கும் ‘கொட்டி’ சிறுகதையிலிருந்து சில பகுதிகள் ————————————————————————————————– தாடையில் வடிந்த வெற்றிலை எச்சிலைப் புறங்கையால் துடைத்தபடி அடுத்து நடந்து வந்த ஜெபராஜ் நாயனக்காரனைப் பார்த்தார் சிவத்தையா. அவன் ஜெபராஜ் இல்லை. கல்யாண வீட்டுக்கு வாசிக்கப் போகும்போது ஜெயராஜ் ஆகிவிடுவான். ஜெயராஜுக்கு எதுவுமே தெரியாது. வாசிப்பும் சுமார் தான். நூறு ரூபாய் கிடைத்தால் போதும் அவனுக்கு. சிவத்தையாவுக்கு மூன்று புத்ரிகள். நூறு ரூபாயில் ரெண்டு…




Read more »

அழகுப் பிள்ளை – சிறுகதையில் ஒரு சிறு பகுதி

By |

கனலி இணையத் தளத்தில் என் புதுச் சிறுகதை ‘அழகுப் பிள்ளை’ பிரசுரமாகி உள்ளது. நண்பர்கள் இந்தக் கதையையும், முழு இதழையும் வாசிக்கக் கோருகிறேன். சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் கதையில் இருந்து ஒரு சிறு பகுதி எல்லை இல்லா எங்கும் நிறை ஏக பரம்பொருளே என்று நூறு இளம் குரல்கள் பிரார்த்தித்துப் பாடும் இசை சூழ்ந்திருக்க பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் நல்ல தண்ணீர் ஊருணிக்கரைக்கு நடந்தார் அழகு பிள்ளை. பழைய பாளையக்காரர்கள், அவர்களின் மனைவி, கூத்தியார் என்று பலவட்டமாகப்…




Read more »

வெளியிட இருக்கும் ‘மயில் மார்க் குடைகள்’ சிறுகதைத் தொகுப்புக்கு என் முன்னுரை

By |

ராமோஜியம் நாவலோடு, நான் அண்மைக் காலத்தில் எழுதி வெளியான சிறுகதைகளும், ‘மயில் மார்க் குடைகள்’ என்ற தலைப்பில் தொகுப்பாகின்றன. அந்தத் தொகுதிக்கு நான் எழுதிய முன்னுரை – ———————————————————————- இவை எல்லாம் இந்த நூற்றாண்டுக் கதைகள் என்று இந்த என்னுரையைத் தொடங்க ஆசைதான். எனில், ஆண்டு 2000-ல் தொடங்கி நான் எழுதிய கதைகள் என்பதே நூற்றாண்டுக் கதைக்கான அடையாளமாக இருக்க முடியாது. மொழியும், சூழலும், சித்தரிப்பும் தற்காலத் தன்மையைச் சிறுகதைக்கு ஓரளவுக்குத் தரலாம் தான். ஆனால் அவை…




Read more »

கணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா

By |

நாவல் மலையாள மூலம் – லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் (என்.எஸ்.மாதவன் எழுதியது) தமிழில் – பீரங்கிப் பாடல்கள் (இரா.முருகன் தமிழில் மொழிபெயர்ப்பு) மாதாகோவில் வாசலில் அம்மா, ஞானஸ்நானத்தின்போது என் தலைதொடும் அம்மாவாக இருக்கப் போகும் விக்டோரியா பெரியம்மா கையில் என்னைக் கொடுத்தாள். நான் பார்வையை உயர்த்தியபோது, கசங்கிய உடுப்புக்கு மேல் கருத்த அங்கி தரித்து, வெளுத்த சாட்டின் துணியில் மஞ்சள் நிறச் சிலுவை தைத்திருந்த கழுத்துப் பட்டை அணிந்து பிலாத்தோஸ் பாதிரியர் நிற்பதைக் கண்டேன். நான் இதுவரை…




Read more »

தம் பிரியாணியும் ஒரு பிறந்த தின விருந்தும்

By |

என்.எஸ்.மாதவனின் மலையாள cult classic novel லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் – தமிழில் பீரங்கிப் பாடல்கள் (மொழியாக்கம் இரா.முருகன்) – ஒரு சிறு பகுதி தம் பிரியாணியும் ஒரு பிறந்த தின விருந்தும் ——————————- எனக்கு ஞானஸ்நானம் நடந்த நாளில் அதிகாலையிலேயே எட்வின்சேட்டனும் அவருடைய வேலையாட்களும் பிரியாணி செய்ய ஆரம்பித்தார்கள். பெரிய கொப்பரையில், வாங்கி வைத்த நெய்யில் பாதியை ஊற்றிச் சூடாக்கி அரிந்து வைத்த வெங்காயத்தில் பாதியை அதில் போட்டு, எட்வின்சேட்டனின் சமையல் கோஷ்டியில் வந்த வேலாயுதன்…




Read more »

எமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து

By |

”விஷயம் தெரியுமா? மந்தவெளி கேஷவ்ஜி மெஸ்ஸில் நோ அளவுச் சாப்பாடு. பருப்புப்பொடி, நெய், வடு மாங்காய், ஸ்வீட்டுனு ராச்சாப்பாடாம்”. பக்கத்து அறை நாராயணசாமி புதன்கிழமை சாயந்திரம் ரூமுக்கு போகிற போது சொன்னார். “எப்படி சார், மந்தவெளி பாகிஸ்தான்லே இருக்கா?” நான் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். கோவிந்தன் மேன்ஷனின் கதவுகளுக்குப் பூட்டு, தாழ்ப்பாள் இருக்கிறதோ என்னமோ, காது உண்டு. எமர்ஜென்சி காலத்தில் அரசாங்கச் சின்னத்தில் மூணு சிங்கத்துக்கும் அசோக சக்கரத்துக்கும் நகைச்சுவை அந்நியமானது. பின்னால் மறைந்து…




Read more »