Archive For பிப்ரவரி 21, 2020

எழுதிக்கொண்டிருக்கும் புது நாவல் ‘ராமோஜி’ – சில பகுதிகள்

By |

Excerpt from my forthcoming novel Ramoji மயில் குயிலாச்சுதடி அக்கச்சி சூப்ரண்டண்ட் பந்துலு சார் சுமாராகப் பாடக் கூடியவர் என்று கோட்டையில் பரவலாகப் பரவிய தகவல். அவர் பாட்டுப்பாட கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட மாட்டார். கோட்டையில் பிரிட்டீஷ் சக்கரவர்த்தி படம் போட்ட உறையில் வந்த சர்க்குலர், பைல்களுக்கு மஞ்சள் குங்குமம் தடவி பூஜையில் வைக்கும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தில் ஒரு மன்னர் வாழ்த்து, ஒரு தெய்வ வாழ்த்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்…




Read more »

ராமோஜி – நான் எழுதிக் கொண்டிருக்கும் அடுத்த நாவலில் இருந்து

By |

1944 மார்ச் ”ரத்னா, என் சீமாட்டி, என் சக்ரவர்த்தினி, குட் மார்னிங்க். உன் பெயர் தினசரி பேப்பரில் வந்திருக்கே. பார்த்தாயோ. க்யாதி மிகுந்து விட்டாயடி பெண்ணே. ஆயிரம் அபிநந்தனம் சொல்லி உன் காலைப் பிடித்து நமஸ்காரம் செய்கிறேன்”. ஊஞ்சலில் ஜோடியாக அமர்ந்து, கையில் விரித்துப் பிடித்த வாரப் பத்திரிகையோடு ரத்னாவின் இடுப்பை வளைத்த நான், மனம் முழுக்க அடர்ந்து பொங்கிய பெருங் களிப்போடு சொன்னேன். “இது காலுமில்லை, அது டெய்லி பேப்பரும் இல்லை” என்று நானும் கூடச்…




Read more »

புது நாவல் – ராமோஜிகளின் கதை – பகுதிகள் – இரா.முருகன்

By |

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 4 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு திசைத் தெருவுக்கு அதேபடிக்குத்தான் பெயர் இருக்கும். ஜம்பமாக ரத்னாபாயிடம் சொல்லி விட்டு சைக்கிளில் இரண்டு பேரும் ஏறிக்கொண்டு முன்நோக்கி ஊர, தென்மேற்கிலே கிடக்கும் தெருவுக்கு இந்த ராத்திரி விடிவதற்குள் போய்ச் சேருவோம் என்றே தோன்றவில்லை. மார்கழிக் குளிர் சன்னமாகக் கூட வர நீண்ட பாதை. மேலே அட்டை ஷேடு வைத்து அடைத்த பெட்ரோமாக்ஸ் விளக்கோடு யாரோ சைக்கிளில்…




Read more »

புது நாவல் – ராமோஜிகளின் கதை – அத்தியாயம் 3 பகுதிகள்

By |

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 3 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை ராத்திரி ஏழரை மணிக்கு ’யுத்தம் முடியும்வரை கண்டிப்பாக தேசிய சர்க்கார் கிடையாது’ என்று வைஸ்ராய் வேவல் பிரபு சொன்னதாக ரேடியோவில் நியூஸ் படித்து முடிந்த பிறகு ரேடியோவை அணைத்து விட்டு, ஏர் ரைட் வார்டன் வேஷம் கட்டத் தயாரானேன். சாப்பிட்டு விட்டுப் படி இறங்கலாம் என்று ரத்னாபாய் தடுப்பாள். அவள் வார்த்தைக்கு இன்றைக்கு மட்டுமாவது தலை வணங்க வேண்டாம்…




Read more »

புது நாவல் – ராமோஜிகளின் கதை – அத்தியாயம் 2 பகுதிகள்

By |

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 2 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அவள் தேவையில்லாமல் கண் சிமிட்டினாள். அதுவும் சரியென்று பொங்கலில் ஒரு தேக்கரண்டி வாயில் அண்ணாந்து போட்டுச் சுவைத்தபடி எழுந்து போய் வாசல் கதவை மூடிவிட்டு வந்தேன். “இதெதுக்கு இப்போ கதவடைச்சு பகல்லே ப்ளாக் அவுட்? இலவசம்னா எந்த நேரத்திலேயும் கேட்குமா?”. அவள் என்னைத் தள்ளி விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து வாரப் பத்திரிகை படிக்க ஆரம்பித்தாள். நான் எச்சில் கையோடு…




Read more »

புது நாவல் – ராமோஜிகளின் கதை – அத்தியாயம் 1 பகுதிகள்

By |

புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 1 இரா.முருகன் நாவல் மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த யட்சன் இந்தக் கதையை எழுதி விட்டு வேறே வேலை பார் என்று சொன்னான். நான் மரத்தடியில் பழம் கிடக்கிறதா என்று பார்க்கப் போனபோது அவன் கக்கரமுக்கர என்று கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி என்னை அழைத்தான் – ராமோஜி ஓய் ராமோஜி! சற்று கவனியுமையா. எனக்குத் தமிழ் சரியாகப் பேசவே தெரியாதபோது என்னத்தை எழுத என்று கேட்டேன் தரையில் உதிர்ந்து விழுந்த…




Read more »