Archive For ஜூன் 23, 2019

கொஞ்சம் மரபு – கொஞ்சம் புதுசு 23 ஜூன் 2019 ஞாயிறு

By |

கொஞ்சம் மரபு – கொஞ்சம் புதுசு               23 ஜூன் 2019 ஞாயிறு

நான்காம் மாடியில் நாங்கள் வசிக்கிறோம். மின்தூக்கி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும். எத்தனை படிகள் மொத்தமாய்? மின்சாரம் நின்றுபோய் படியேறும் போது எண்ணிப் பார்க்கணும். அவ்வப்போது கரெண்ட் போனாலும் படிகளை எண்ணுவது பாதியில் இருந்துதான். கீழிருந்து மேலே போகவோ மேலிருந்து இறங்கவோ பொத்தான் அழுத்தி அழைக்கும்போது எங்கோ லிப்ட் தேங்கியிருந்தால் எரிச்சலும் கோபமும் பொங்கிவரும். பேப்பர் பையனா, பாக்கெட்பால் பாட்டியா கறிகாய்க்காரனா கூரியர் மற்றும் தீனி கொண்டுதரும் சேவையாளனா விருந்தாட வந்த யாரோ ஒருவரா எந்த மாடியில்…




Read more »

செய்யுள் – கவிதை 22.06.2019

By |

செய்யுள் – கவிதை 22.06.2019

கண்ணனவன் சொன்னபடி இன்னும் வரவில்லை கண்கள் வழிவைத்துக் காத்திருந்தாள் – கன்னி மரத்தில் மறைந்தது மான்விழி சைக்கிள் மறத்தை மறைக்கும் மனம். மல்லி விலையேற்றம் மாங்காயும் ஏறுமுகம் சொல்லுநேரம் உள்ளிகாணோம் கூடியாச்சு – முள்ளங்கி தக்காளி இத்தனையேன் வெண்பா தளைதட்டும் தக்காளி கால்கிலோ தா. இளநீர் விற்பவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வாசலில் மெல்ல விளிக்கச் சலுகை. நீர்க்காய் தர நிபந்தனையோடு. தூக்குப் பாத்திரத்தில் வாங்கிப் போகிறவள் புகார் செய்வது, ”நேற்று உப்புநீர்” இன்று இனிக்குமோ இளநீர்க்காரன் அரிவாள்…




Read more »

கிரேசி முதல் கிரேசி வரை

By |

கிரேசி முதல் கிரேசி வரை

சில ஆண்டுகளுக்கு முன், என் அன்பு நண்பர் கிரேசி மோகனையும் அவருடைய கிரேசி க்ரியேஷன்ஸ் நாடகக் குழுவையும் பற்றி ‘கிரேசி முதல் கிரேசி வரை’ என்ற புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். மோகனோடு நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தி, அவற்றின் அடிப்படையில் ஆறு அத்தியாயங்கள் எழுதி அந்த நூல் முற்றுப்பெறாமலே நின்றது. இப்போது கிரேசி மோகனோடு நல்ல நட்பு கொண்டிருந்த என் அன்புக்குரிய, சில எழுத்தாள நண்பர்களும் நானும் கூட்டாக மோகன் பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறோம். இந்தக்…




Read more »

செய்யுள், கவிதை இன்று

By |

செய்யுள், கவிதை இன்று

நடேசன் பூங்கா பரப்பில் நாலில் ஒரு பங்கு எங்கள் நகராட்சிப் பூங்கா. பூங்கா என்பதற்குள் சுற்றி வந்துவிடலாம். செண்டிமீட்டர் முன்னே நகர்ந்து நத்தை ஓட்டம் சொத்தை நடை பெஞ்சில் இருந்து கதைப்பவரும் ஜென் குருமார் போல அவ்வப்போது ஒரு சொல் உதிர்ப்பார். கைத்தடியைப் பிடரியில் செருகி ஆண்டென்னா போல் நீட்டி நிமிர்த்தி ஆண்டவனோடு தொடர்பெல்லையில் அங்கொருத்தர் குதிக்கிறார் ஓரத்தில் மெல்ல. நடேசன் பூங்காவில் சைக்கிள் நிறுத்தி நாவல் எழுதினாராம் அசோகமித்ரன் நகராட்சிப் பூங்காவில் நோட்புக் கணினியில் நாளும்…




Read more »

பள்ளியிறுதி வகுப்பு பொன்விழா கடந்த நட்பு

By |

பள்ளியிறுதி வகுப்பு பொன்விழா கடந்த நட்பு

என் ஆருயிர் நண்பன் – பள்ளித் தோழன் அருண் நாகராஜன் இன்று சந்திக்க வந்திருந்தான். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டொரண்டோ, கனடா வங்கித் தலைவராகவும் உதவிப் பொது மேலாளராகவும் பணி புரிந்து ஓய்வு பெற்றவன்(ர்). சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் நாங்கள் பள்ளியிறுதித் தேர்வு வகுப்பு முடித்து இப்போது ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன (எஸ் எஸ் எல் சி 1969). இன்றைக்கு இருவராகக் கொண்டாடினோம். விரைவில் எங்கள் வகுப்பு நண்பர்கள் அனைவரோடும் சேர்ந்து கொண்டாடத் திட்டம்….




Read more »