Archive For நவம்பர் 17, 2018

வெண்பா – 1000 நான் அண்மையில் எழுதியவை : முதல் ஈடு

By |

தினசரி ஒரு வெண்பாவாவது காலை நடையின்போது மனதில் எழுதிப் பின் முகநூலில் எழுதுகிறேன். எல்லாமே சொற்புதிது, சுவைபுதிது, பொருள் புதிது. விரைவில் மின்நூலாக இவை தொகுக்கப் படும். நீயுமா ப்ரூட்டஸே போய்நான் இறந்திடுவேன் ஓயுமொழி சீசர் உரைத்திட – மாயுமுடல் ஆனை நடைநடந்து வீழ்ந்த இடத்தினில் பூனைகள் காப்பகம் இன்று. ஓயுமொழி – இறுதிச் சொற்கள் சார்சாரே ஒண்ணுக்கு! போகாதே உட்காரு நேர்வகுப்பில் ஏறுமுன்பே நீமுடித்து – வாரணும் ஓலைப்பாய் மோண்டதுபோல் சார்பேசக் கேளாமல் மூலையில் பெய்தான்…




Read more »

எமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்

By |

”தீபாவளிக்கு துணி எடுக்க லோன் வாங்க, இருபதம்சத் திட்டத்திலே எந்த அம்சம் சரிப்படும்?” நிருபர் அக்கறையாக விசாரித்தார். “அது ஐந்தம்சத் திட்டத்திலே இல்லே வரும்? குடும்பக் கட்டுப்பாடு”. கேஷியர் கருப்பையா சீரியஸாகச் சொன்னார். “குடும்பத்தைக் கட்டுப்படுத்தினா, லோனே தேவை இல்லையே”, என்றார் மேனேஜர். எமர்ஜென்சி அறிவித்தபின் வரும் இரண்டாவது தீபாவளி இது. சின்னக் கரடி என்று பெயர் கொண்ட சிங்கம்புலி சைக்கிளில் வந்து பேங்க் எதிரே கால் ஊன்றி நின்றபடி மெகஃபோனில் கூவினார்: “வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்…




Read more »

நாவல் விஸ்வரூபம் – ஓர் அறிமுகமும் சில குறிப்புகளும்

By |

நாவல் விஸ்வரூபம் – ஓர் அறிமுகமும் சில குறிப்புகளும்

நான் எழுதிய அரசூர் நான்கு நாவல் வரிசையில் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே) இரண்டாம் நாவல் விஸ்வரூபம் பற்றி இணையத்தில் நண்பர் வித்யா ஆனந்த் எழுதியிருப்பதும், என் குறிப்புகளும். வித்யா ஆனந்த் ————— காலத்தை நேர்கோடாகவே பார்த்துப் பழகிய நமக்கு அதை சிதறிய துணுக்குகளாகக் காட்டி ஒரு வித்தியாசமான விருந்து படைக்கிறது இரா முருகன் EraMurukan Ramasami அவர்கள் எழுதியுள்ள விஸ்வரூபம். இந்தக் கதையின் prequel அரசூர் வம்சம் படித்துவிட்டு இதைப் படித்தால்…




Read more »

பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு விழா – அக்டோபர் 27, 2018 சென்னை

By |

பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு விழா – அக்டோபர் 27, 2018 சென்னை

பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியீட்டு விழா (27 அக்டோபர் 2018 சென்னை) குறித்து இன்றைய (28 அக்டோபர் 2018) மாத்ருபூமி மலையாளத் தினசரி – சென்னைப் பதிப்பில் இடம் பெற்றிருக்கும் செய்தி Ack Mr.Prem Nazir நூல் வெளியீடு திருமதி திலகவதி, திரு மாலன், திரு. என்.எஸ்.மாதவன், இரா.முருகன் At Chennai’s CP Arts Centre, author NS Madhavan (Lanthanbatheriyile Luthinyakal) and translator Era Murugan (Peerangi Patalkal) சென்னை 27 அக்டோபர் 2018…




Read more »

பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு நிகழ்வு

By |

பீரங்கிப் பாடல்கள் – நூல் வெளியீட்டு நிகழ்வு

மலையாள இலக்கிய உலகில் முக்கிய இடம் வகிக்கும் என்.எஸ். மாதவன் எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’, பீரங்கிப் பாடல்கள் என்னும் தலைப்பில் தமிழில் வெளியிடப்படுகிறது. இந்நாவலை மொழிபெயர்த்திருப்பவர் தமிழின் முன்னணி நாவலாசிரியர் இரா. முருகன். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை, அக்டோபர் 27 2018- மாலை 6,00 மணிக்கு சென்னை, சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக.




Read more »

புதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்

By |

புதிது :  அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்

18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை அரசூர் வம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு 2008-ல் வெளியாகி, அந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது. பத்தாண்டுகள் கழித்து, அரசூர் நாவல்களில் இரண்டாவதான ‘விஸ்வரூபம்’ ஆங்கில மொழியாக்கத்தை, சரஸ்வதி பூஜை தினமான இன்று தொடங்கி இருக்கிறேன். மற்ற எழுத்தாக்கங்களும் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கின்றன. வாணியைச் சரண் புகுந்தேன் – அருள் வாக்களிப்பாள் எனத் திடமிகுந்தேன் பேணிய பெருந்தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள். சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்




Read more »