New: பாண்டி பஜார் பாலாஜி பவன் காப்பி மகிமை – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இரா.முருகன்

சென்னை தி.நகர் சௌந்தரபாண்டியனார் அங்காடி (பாண்டி பஜார்) பாலாஜி பவன் காப்பியும் குறுங்காப்பியும் (மினி காப்பி) பருகாதார் சன்மமெடுத்தென்!

இக்குழம்பியின் மாண்பு பாராட்டி யானின்றியற்றிய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இஃது

மாலும் ஆழி விட்டிறங்கி
மாசில் பாண்டி கடைத்தெருவில்
காலை பனகல் பார்க்கருகே
கருடன் ஒயிலாய் நிறுத்திடுவான்
ஆலா லவிடம் ஒத்திவைத்து
ஆறு மணிக்குக் கடைவாசல்
நீல கண்டன் காத்திருப்பான்
பாலா ஜிபவன் காப்பிக்கே..

(மா மா காய் மா மா காய்

இது என் அறுசீர்க் கழிநெடிலடி இலக்கணம்

மாம்பலம் ரங்கநாதன் தெருவில் கறிகாய் விற்கிறவர்களின் ‘ஐயரே காய்’ கூவல் மாதிரி இல்லே!)

———————————————————-

Tamil writer’s latest work critiqued

Wednesday, 29 June 2016 NT Bureau

Chennai: “Era Murugan has the influence of writer Sujatha in his novels, as he portrays them with more visualisation in a racy style,” said writer and drama artiste, Krishna Prasad, also known as Chithan, during his disquisition about the book ‘Duplex Veedhi’ by writer Era Murugan, at the 25th meet of ‘Thamizh Puthaga Nanbargal’ held here yesterday.

The 25th monthly meet of Tamizh Puthaga Nanbargal, a forum for Tamil readers initiated by the president of Tag Centre, Alwarpet, R T Chari, and supported financially by his family trust, Ramu Endowment, saw the review of the book ‘Duplex Veedhi’ by Era Murugan, who has authored many novels, including ‘Vishwaroopam’, ‘Moondru Viral’, ‘Arsoor Vamsam’, etc.

“This is said to be a bio-fictional story, but how much of it is fiction remains a question. I feel about 80 per cent of the story is only fictional, and Era Murugan has portrayed the life of a teenager in the 1970s very effectively,” said Krishna Prasad.

“Though I hail from a small town near Tamilnadu-Kerala border, I was lucky enough to have some great Tamil writers and poets teach in my college. To name a few, poet Meera, who was a pioneer in ‘puthu kavithaigal’, writer Darmarajan, who was translated a lot of Soviet literature into Tamil, were my professors,” recalled Murugan.

He said though initially he was drawn only towards writing poetry -these were published in many Tamil magazines – he started writing short stories only in the 1980s. “I directly approached writer Ashokamitran, handed over some of my short stories and asked him to review them. I had the guts to do it at the time and to my surprise, when I met him a week later, he said the stories were impressive,” said Murugan.

The forum had also organised an event on 7 June to honour two great Tamil writers, Dr Indira Parthasarathy and Ashokamitran, with lifetime achievement awards and a cash prize of Rs 50,000 each. The event saw former Union Minister P Chidambaram participate as chief guest.

(Follow us on Twitter @NTChennai)

நன்றி நியூஸ் டுடே
—————————————————

If I were the sales person of my books and only my books …

Photo courtesy : V.K.Srinivasan

நான் கல்கியில் நிறைய எழுதிய 1990-களில் கையால் ஏ-4 தாளில் மூன்று பக்கம் வருமாறு கதையோ, கட்டுரையோ எழுதிப் பழகி இருந்தது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க அது நல்ல பயிற்சியாக இருந்தது. இறுக்கமான சொல்லாடல் உள்ள புதுக் கவிதையில் இருந்து சிறுகதைக்குப் போனதால் அந்தச் சொற்சுருக்கம் தானே வசப்பட்டது.

இப்போது கல்கியில் அபூர்வமாகவே எழுதுகிறேன். எனினும் லேப்டாப்பில் எழுதுவதால், 600 சொற்கள் என்று வரையறை செய்து கொள்ள வேர்ட் கவுண்ட் இருக்கிறது. கால்வீசி நடப்பது போல் நிறைய எழுதிப் போகும் நாவலில் அமிழ்ந்ததால், 600-வார்த்தையில் சிறுகதையை முடிப்பது தான் சிரமமாக இருக்கிறது. திரும்பக் கவிதைக்குப் போகவேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன