Archive For பிப்ரவரி 21, 2024

குவளை தேநீரோடு ஷேம வர்த்தமானம் எழுத முற்படும் அமேயர் அச்சன்

By |

குவளை தேநீரோடு ஷேம வர்த்தமானம் எழுத முற்படும் அமேயர் அச்சன்

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி பிரியத்துக்கு பாத்தியதை உள்ளவர்களே, உங்களுடைய ஆத்மா ஜீவித்திருப்பது போல நீங்கள் அனைத்திலும் சுகமாக ஜீவித்திருக்க கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் திருநாமத்தால் வாழ்த்துகிறேன் (யோவான்). நேசமான புத்ரி கொச்சு தெரிசா, கொச்சு தெரிசாளின் அன்பான கணவன் ஜனாப் முசாஃபர் அலி சாஹேப், நலம் தானே நீங்கள்? நான் இங்கே கால்டர்டேலுக்கு ஐந்து நாள் முன்பாக அதாவது கடந்த மாசம் இருபத்தெட்டாம்…




Read more »

பணிமுடக்கு தினத்தன்று குளித்து அம்பலம் தொழ வந்தவர்கள்

By |

பணிமுடக்கு தினத்தன்று குளித்து அம்பலம் தொழ வந்தவர்கள்

வாழ்ந்து போதீரே நாவலின் அடுத்த ஈடு (அரசூர் நாவல் வரிசையின் நான்காவது நாவல் குளித்து அம்பலம் தொழ வந்த ஒரு கூட்டம் பெண்கள் வர, பிடிவாதமாகக் கண்ணைக் கவிந்து கொண்டு பிரகாரம் சுற்றினான் திலீப். கூடவே வந்து, சூழ்ந்து, விலகிப் போன, அம்மே நாராயணா என்று நாமம் சொல்லிக் கொண்டு வந்த அந்தக் கும்பலில் இருந்து. குளத்து நீர்த் தாவர வாடையும் சந்திரிகா சோப்பு வாசனையும், ஈரத் தலைமுடி வாடையும், அரைத்த மஞ்சள் மணமும், பல்பொடி வாசனையும்…




Read more »

சோபான சங்கீதமும் பிஸ்கட் சாஸ்திரி எடுத்தெறிந்த சோம்பேரி சங்கீதமும்

By |

சோபான சங்கீதமும் பிஸ்கட் சாஸ்திரி எடுத்தெறிந்த சோம்பேரி சங்கீதமும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவலில் இருந்து -ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு முட்டை ரெண்டு கொடு நாயரே சைக்கிளை நிறுத்திக் கேட்டான் திலீப். ஏய் அது பாடில்ல. கொடுத்தா என்னை நொங்கிடுவாங்க என்று உச்ச பட்ச மகிழ்ச்சியோடு சொல்லியபடி போனான் நாயர். ஒரு நாள் வியாபாரம் கெட்டது பற்றி ஒரு புகாரும் அவனுக்கு இல்லை போல. கோவிலில் இருந்து செண்டை மேளம் சத்ததோடு மாரார் குரல் எடுத்துப் பாடுவதும் கேட்டது….




Read more »

வேலு நாயர் சாயா பீடிகைக்கு வந்த பணிமுடக்கு

By |

வேலு நாயர் சாயா பீடிகைக்கு வந்த பணிமுடக்கு

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காம் புதினம் எதுக்கு? நீ வெக்கமே துளிக்கூட இல்லாம சொளசொளன்னு எச்சலை வடிய விட்டுண்டு பார்க்கற போது நானும் ஏன் நோக்கணும்? எத்தனை பாத்து மனசு திருப்தி வரும் உனக்கு? ஒரு ஆயிரம்? பத்தாயிரம்? லட்சம்? கோடி மாரிடம்? அகல்யா கேட்பாள். இந்த ஊரில் வேறே என்ன உண்டு கோவிலையும் பால் பாயசத்தையும் இதையும் தவிர? படகு. பக்கத்தில் உட்கார்ந்து வருகிறவளின் கிறங்கடிக்கும் வியர்வை…




Read more »

முழுக்கக் கோவிலையே சார்ந்து இருக்கும் ஊர். கோவிலில் ஒலிக்கிற சங்கும் தாள வாத்தியச் சத்தமும் தான் ஊரை விடிகாலையில் எழுப்புகிறது.

By |

முழுக்கக் கோவிலையே சார்ந்து இருக்கும் ஊர். கோவிலில் ஒலிக்கிற சங்கும் தாள வாத்தியச் சத்தமும் தான் ஊரை விடிகாலையில் எழுப்புகிறது.

சின்னக் குளிரோடு விடியும் இன்னொரு பொழுது. திலீப் நேரம் பார்த்தான். ராத்திரியும் இல்லாத, அதிகாலையும் வந்து சேராத மூன்று மணி. பம்பாயை நோக்கி குட்ஸ் வண்டிகளில் லோனாவாலாவில் இருந்து எருமைகளும் பசுக்களும் பயணம் செய்யத் தொடங்கும் நேரம் இது. தாதர் யார்டு பக்கம் நிற்கும் விசாலமான ரயில் பெட்டிகளுக்குள் கட்டி வைத்தபடி அவற்றைக் கறந்து பால்காரர்கள் சைக்கிளில் தாதர் தெருக்களில் வலம் வருவதும், எலக்ட்ரிக் ரயிலில் கூட்டம் ஆரம்பிப்பதும் கிட்டத்தட்ட ஒரே நேரமாக இருக்கும். இந்த ஊர்…




Read more »

அந்தக் காலத்தில் அர்ஜூன நிருத்தம் இல்லை, மயில்பீலி தூக்கம் தான் பழைய பெயர்

By |

அந்தக் காலத்தில் அர்ஜூன நிருத்தம் இல்லை, மயில்பீலி தூக்கம் தான் பழைய பெயர்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (வரிசை தப்பாமல்) எல்லோரையும் ஒன்பது மணிக்கு வரச் சொல்லி இருக்கேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துலே இங்கே இருப்பாங்க. நான் கூட அதுக்குத் தான் வந்தேன். துடைப்பத்தை உயர்த்திப் பிடித்தபடி முன்னால் வந்த சாமுவைப் பார்த்த பெரியம்மா கொஞ்சம் பின்வாங்கினாள். இவனுக்கும் அர்ஜுன் நிருத்தத்துக்க்கும் என்ன தொடர்பு? அர்ஜுனன், சகாதேவன் எல்லாம் அப்புறமா வந்தது. இங்கே இதை மயில்பீலி தூக்கம்னு தான் சொல்றது. பகவதி கோவில் உற்சவத்திலே நான் ஆடுவேன். குடைக்கார சாமு…




Read more »