Archive For ஜூன் 13, 2023

சரவணன் மாணிக்கவாசகம் மதிப்பீடு – தினை அல்லது சஞ்சீவனி நாவல்

By |

திரு சரவணன் மாணிக்கவாசகம் நாவல் தினை அல்லது சஞ்சீவனிக்கு எழுதிய மதிப்புரை ———————————————————————————– முழுநீள Fantasy நாவல்கள் தமிழில் வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆங்கிலத்தில் Fantasy genre மட்டுமே படிக்கும் வாசகர்கள் உண்டு. ஆறு தலைகள், ஆயிரம் கைகள், சூரிய பகவானின் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்ற Fantasyகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாமும். புனைவில் Fantasy அம்சம் கலக்கையில் லாஜிக் என்பது இல்லாது போய் எதுவும் சாத்தியம் என்றாகி விடுகிறது. இவருடைய முந்தைய நாவலான மிளகு…




Read more »

கோழிக்கோட்டு சாமுத்ரியும் குறுமிளகும் – பெருநாவல் மிளகு சிறு பகுதி

By |

கோழிக்கோட்டு சாமுத்ரியும் குறுமிளகும் – பெருநாவல் மிளகு சிறு பகுதி

பெருநாவல் மிளகு – சொல்வனம் இணைய இலக்கிய இதழில் இந்த வாரம் இம்மானுவல் பெத்ரோவை இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல் தேசத்தின் தலைமை அரசப் பிரதிநிதியாக நியமித்து அரசராணை வந்து சேர்ந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அது சம்பந்தமான பரபரப்பு ஓய்ந்தபடியாக இல்லை. அவரை சந்தித்துப் பேச, இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல்லில் இருந்து பல தரத்தில் உத்தியோக நிமித்தம் வந்திருக்கும் பிரமுகர்கள் நிறையப்பேர் ஹொன்னாவருக்கு வந்து போகிறார்கள். தில்லியில் முகல்-எ-ஆஸம் மொகலாய சக்கரவர்த்தி அக்பர் அரசவைக்கு போர்த்துகல் பிரதிநிதியாக உள்ள பால்தஸார்…




Read more »

வடக்கிருக்க இருட்குகை புகுந்த மருத்துவர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

By |

வடக்கிருக்க இருட்குகை புகுந்த மருத்துவர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான். இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு இணைந்து பிசையப்பட்டுத் தனிமை இழக்கக் கூடும். இடது பக்கம் பாதை பிரியும் குகைக்கு மேலே சிறு பாறை நகர்வு வழியே மறையும் சூரிய வெளிச்சம்…




Read more »

ஏமப் பெருந்துயில் மண்டப வருகையாளர்களும் செயல்பாடும்

By |

ஏமப் பெருந்துயில் மண்டப வருகையாளர்களும் செயல்பாடும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி ஏமப் பெருந்துயில் மையத்தைச் சுற்றிச் சிறு புகைப்பட கேமிராக்கள் கொண்டு துயர் களைதலை இருபத்துநாலு மணி நேரமும் கண்டு குறிப்பெழுத ஊழியருண்டு. இவற்றில் மிகச் சிறப்பானவை அதிக ஊதிய உயர்வைப் பெற்றுத் தர வல்லவை. அஞ்சலி செலுத்த வராமல் போனாலோ, வந்து, கடனே என்று அஞ்சலி செலுத்திப் போனாலோ, கண்காணிப்பு ஊழியர்கள் அரசுக்கு உடனே தகவல் அனுப்பிவிடுவார்கள். அப்புறம் எதுவும் நடக்கலாம். அடுத்த ஆண்டு அஞ்சலி…




Read more »

ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறைவோரும் மற்றோரும்

By |

நாவல் தினை அல்லது சஞ்சீவனி-யில் இருந்து ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. எட்டில் ஒன்று மட்டும் பாதி தேளுடல் கொண்ட மாற்றுடல் பெண். இடுப்புக்கு மேல் மனுஷி உடல் வனப்பாக மலர்ந்திருந்தது. கீழே சிவப்பு உக்ரமாக உயிர் பறிக்கும் செந்தேளுடலோடு கால்கள் சிறு மயிர் பூத்து மூடித் தளர்ந்து கிடந்தன. கண்ணாடியும் தேறலியமுமாக*** நீண்டிருந்த பெட்டிக்குள் தேள்ப்பெண் உடலின் உறுப்புகள்…




Read more »

மருத்துவர் ஆயுள் மருந்தை உருவாக்குவது பக்கத்து கிராமம் சிறு நகரம் என எங்கும் பரவியது. அது பல வடிவாகத் திரிந்தது.

By |

மருத்துவர் ஆயுள் மருந்தை உருவாக்குவது    பக்கத்து கிராமம் சிறு நகரம் என எங்கும் பரவியது.  அது பல வடிவாகத் திரிந்தது.

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து தினை மத்தியாங்கம் ஆ சிறு நகரக் கற்கோட்டையில் சாவைக் குணமாக்க மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். அதைப் பரிசோதிக்க பத்து பேரை, ஆளுக்கு நூறு பொன் கூலிக் காசு கொடுத்து, ஆயுசும் ஐநூறு வருடம் நீடிக்கப்படுகிறார்கள். பிரசவ ஆஸ்பத்திரி தாதிகளில் இருந்து சுடலையில் பிணம் சுடும் வெட்டியான் வரை வேறேதும் பேச்சு இல்லை. வீட்டில் வளர்க்கும் கிளிகளும் மருந்து மருந்து என்று மந்திரமாக உச்சரிக்கின்றன. கோட்டைக் கதவுகள் அடைத்து மூடப்பட்டன. மருத்துவர்…




Read more »